வெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் SUCCESS
Sun Aug 30, 2015 8:36 am
வெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் SUCCESS என்று கூறுகிறோம். ஒரு செயலில் வெற்றி பெற,
பதட்டமில்லாத மனநிலை
அதைப் புரிந்து கொள்ளுதல்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
விழிப்பு நிலையில் இருத்தல்
எதிர்மறை எண்ணம் நீக்குதல்
தன்னம்பிக்கை
அமைதி ஆகியன தேவை.
இதை,
S – Smile - புன்னகை முகம்
U – Understand Problem - புரிதல்
C – Control Attitude - உணர்ச்சி கட்டுப்பாடு
C – Consciousness - விழிப்பு நிலை
E – Eradicate Negative Thoughts – எதிர்மறை எண்ணம் நீக்குதல்
S – Self-confidence – தன்னம்பிக்கை
S – Silence - மவுனம்
என்று கூறலாம்
அமைதி மிக முக்கியம். எந்த ஒன்றையும் முடிப்பதற்கு இவை அவசியம். பிறரால் செய்ய முடியாததைச் செய்யவும், தொடர் வெற்றிகளைப் பெறவும் இவை மட்டும் போதாது. என்ன தேவை என்பதைப் பார்ப்போம்.
மூன்று படிகளைக் கடந்தால் வெற்றியும் சாதனையும் என்றும் நம்மை விட்டுப் பிரியாது. அது என்ன 3 படிகள்?
முதல்படி – நம்புதல்: இதற்கு அடிப்படை நமது தேவையில் தெளிவு. என்ன வேண்டும் என்பதில் உஷாராக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் இருக்கிறது என்பதற்காக, அதுபோல் நமக்கும் வேண்டும் என ஆசைப்படக்கூடாது. அவசியமாக அது தேவை என்றால் மட்டுமே, அதற்கு ஆசைப்பட வேண்டும். என்ன தேவையோ, அது எந்த அளவு எவ்வளவு காலத்திற்குள் தேவை என்பதையெல்லாம் சரியாகக் கணித்து ஆசைப்பட வேண்டும். அது நமக்கு கிடைக்கும் என நம்ப வேண்டும்.
இரண்டாம்படி – மனக்காட்சி: இது மிக முக்கியமானது. நம்மில் பலர் சரியாகத் திட்டமிட்டு, கடுமையாக உழைத்தும், சாதிக்க முடியாமைக்குக் காரணம் மனக்காட்சியாகக் காணாதது தான். இதைச் சரியாகக் காண்பவர்கள் நூறு சதம் வெற்றியடைகிறார்கள்; சாதிக்கிறார்கள்.
காரணம், இவர்களின் ஆழ்மனம் செயல்படுகிறது. அதற்குத் துணையாக பிரபஞ்ச சக்தியும் உதவுகிறது.
மூன்றாம்படி – பெறுதல்: மனோசித்திரமாகக் கண்டுவிட்டால் கட்டாயம் நாம் அதைப்பெற்றே ஆக வேண்டும். இடையில் பல பிரச்னைகள் வரலாம். தைரியமாக அவற்றை எதிர்கொண்டு, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, செயல்பட்டால் பிரச்னைகள் நம்மைப் பாதிக்காது.
#கூறியுள்ளவைகள் வெறுமனே படித்து விட்டு நகருவதற்கல்ல....வாழ்வில் கடைபிடியுங்கள் ....வளமாகட்டும் உங்கள் வாழ்வு !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum