குரங்கின் பாசம்
Tue Aug 11, 2015 12:44 am
இது நான் சிறு வயதில் கேட்ட ஒரு விஷயம். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.
ஒரு குரங்கை அதன் குட்டியோடு ஆராய்ச்சி செய்வதற்காக அந்தக் குரங்கையும் அதன் குட்டி யையும் ஒரு உயரமான, குறுகலான கண்ணாடித் தொட்டியில் இறக்கி அதன் வயிறு வரை நீர் நிரப்பி னார்கள்.
குரங்கு உடனே குட்டியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டது.
இப்போது இடுப்பு வரை நீர் நிரப்பப் பட்டது. குரங்கும் குட்டியைத் தோளில் வைத்துக் கொண்டது.
இப்போது நீர்மட்டம் அதன் தோள்வரை உயர்த்தப்பட குட்டியைத் தன் தலையின் மீது வைத்துக் கொண்டது.
இப்போது கடைசி கட்ட சோதனையாக அதன் தலை முழுகிப் போகும் அளவிற்குத் தண்ணீர் நிரப்பப் பட்டது. குரங்கு தாவியது, குதித்தது மூச்சு விட என்னென்னவோ செய்து பார்த்தது.
கடைசியாகத் தன் குட்டியைக் கீழே தண்ணீருக்கு அடியில் போட்டு அதன் மேல் ஏறி நின்று தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது. தனது உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அது தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தன் குட்டியைக் கூடக் கொல்லும் என்பது அப்போது நிரூபணம் ஆனதாம்.
பிசாசும் இப்படிப்பட்டவன்தான். தூக்கி சுமப்பதாய் நடிப்பான். கடைசியில் கீழே போட்டு மிதித்துக் கொல்லுவான். தனக்காக உன் உயிரை எடுப்பவனை அல்ல, உனக்காகத் தன் உயிரைக் கொடுத்தவரையே நேசி. நேசிக்கின்றாயா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum