தேவையற்ற பயம்
Tue Aug 11, 2015 12:37 am
ஒரு முறை பிசாசு கொள்ளை நோய் ஒன்றைக் கொண்டு ஒரு கிராமத்தில் சிலரைக் கொல்ல வேண்டிய அவசியம் வந்தது. ஆனால் அந்த கிராமத்தினர் அனைவருமே ரட்சிக்கப் பட்டவர்கள் . அவன் பயந்தபடியே தேவனிடம் சென்று, " ஐயா! இந்த கிராமத்தில் கொள்ளை நோயைப் பரப்பி ஐம்பது பேரைக் கொல்ல எனக்கு அனுமதி வேண்டும்" என்றான்.
கடவுள் அந்த கிராமத்தில் ஒரு அழிவு ஏற்பட வேண்டும் என்று அறிந்திருந்தார். இருந்தாலும் ஐம்பது பேர் ஒரே நேரத்தில் இறப்பது அவருக்கு விருப்பமில்லை.
"இதோ பார் சாத்தானே! என் ஜனத்தில் இத்தனை பேரை எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. மரணத்தை ஆதாயம் என்று அறிந்திருக்கிற, பண்பட்ட ஆத்துமாக்கள் ஐந்து பேரை நான் சொல்கிறேன். அவர்களை மட்டும் மரிக்கச் செய்யலாம். வேறு யார் மீதும் உன் விரல் கூடப் பட அனுமதி கிடையாது " என்று கண்டிப்பாகக் கூறினார். பிசாசும் தலையை சொறிந்தபடி என்னவோ முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.
மறுநாள் துவங்கியது வாதை.
ஒன்று, இரண்டு, மூன்று என்று ஆரம்பித்த மரணங்கள் ஐநூறைத் தொட்டது. வீட்டுக்கு ஒரு சாவு. வீதியெங்கும் மரண ஓலம். " கர்த்தாவே! கர்த்தாவே!"என்ற கதறல்.
கடவுளுக்குக் கோபம் வந்தது.
" ஏ பொய்யனே! நான் அனுமதித்தது ஐந்து பேர் மட்டும்தானே? நீ எதற்காக ஐநூறு பேரை வாரிக் கொண்டாய்" என்றார்.
பிசாசு அலறியடித்தபடி ஓடிவந்து சொன்னான்,
" ஐயா! நீங்கள் கட்டளையிட்டபடி ஐந்து பேரை மட்டுந்தான் நான் கொன்றேன்" என்றான்.
" கடவுள் இன்னும் கோபமானார் . " நீ கொல்லாமலா இத்தனை மரணங்கள் சம்பவிக்கும்?" என்றார். பிசாசு பல்லை இளித்தபடி சொன்னான்,
" நான் கொன்றது ஐந்து பேர் மட்டுந்தான். ஆனால் பயத்தினால் இறந்ததுதான் மற்ற 495. உங்கள் ஜனங்கள் அப்படி இருந்தால் நான் என்ன செய்ய? " என்று சொல்லி விட்டு உற்சாகத்தோடு ஓடிமறைந்தான்.
செல்லமே! கர்த்தர் என்னதான் நம்மைப் பாதுகாத்தாலும் , நம்முடைய பயத்தினாலும் , அவிசுவாசத்தினாலும் நம்மை நாமே சாகடித்துக் கொள்கிறோம். சின்னக் கட்டி வந்துவிட்டால் மரண பயம், மார்பு லேசாக வலித்தால் மரண பயம், அதிகமாய்ப் பசி வந்தால் பயம், ஒரு வேளை பசியெடுக்கா விட்டாலும் பயம்.
அப்பப்பா! உலகத்தாருக்கு இருக்கிற தைரியமும், நம்பிக்கையும் கூட பல விசுவாசிகளிடம் இல்லை. நாம் தைரியத்துடன் சொல்லுவோம் , " கிறிஸ்து நமக்கு ஜீவன்! சாவு நமக்கு ஆதாயம்! " .
இப்ப பாருங்க ஒருத்தன் துண்டக்காணும் துணியக்காணும்னு பயந்து உங்கள விட்டு ஓடிப் போய்ட்டான்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum