தேவன் தம்முடைய பிள்ளைகளை உயர்த்தும் வேளை
Sat Aug 08, 2015 5:58 pm
இது தேவன் தம்முடைய பிள்ளைகளை உயர்த்தும் வேளை.
கண்ட கனவுகளை மறந்து சிறைச்சாலையில் தவித்து கொண்டிருந்த யோசேப்பை தேடி வந்து அதிபதியாக உயர்த்தின கர்த்தர்.;
இருந்த லட்சியங்களை மறந்து பேச கூட முடியாத நிலையில் இருந்த மோசையை வனாந்திரத்தில் தேடி வந்து தலைவனாய் உயர்த்தின கர்த்தர்;
குடும்பத்தினரால் மறக்கப்பட்டு மோவாபின் சமவெளியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த தாவீதை தேடி வந்து ராஜாவாய் உயர்த்தின கர்த்தர்;
தாய் தகப்பன் இன்றி அனாதையாய் வாழ்ந்து வந்த எஸ்தரை தேடி வந்து ராணியாக உயர்த்தின கர்த்தர் ;
38 வருடமாக பெதஸ்தா குளத்தண்டையில் வியாதியோடு இருந்த மனிதனை நான்கு மண்டபங்களையும் தாண்டி தேடி வந்து சுகமாக்கி உயர்த்தின கர்த்தர் ;
இன்றும் ஒரு வேளை நீயும் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு, நண்பர்களால் கைவிடப்பட்டு, கனவுகளை மறந்து, நிந்தனைகளோடு, வேதனைகளோடு கஷ்டபடுகிறாயோ, இன்று உன்னை சந்திக்க அவருடைய கிருபை போதுமானது.
நீ எங்கு இருந்தாலும் உன்னுடைய முகவரியை அறிந்தவர்,
இன்று உன்னை உன் சத்துருக்களுக்கு முன்பாக உயர்த்தி மேன்மை படுத்தபோகிறார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum