காப்பீடு பெறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
Sat Aug 08, 2015 4:51 pm
ஆயுள் காப்பீடு, அனைவருக்கும் அவசியமான ஒன்று. காப்பீடு பெறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை...
எப்போதும் குறைந்த வயதில் பாலிசி எடுத்துக் கொள்வது பலவகையிலும் நல்லது. கட்டும் பிரீமியம் குறைவாக இருப்பதோடு, கிடைக்கும் பயன்கள் கணிசமாக இருக்கும். அதுவே, வயது கூடியபிறகு பாலிசி பெற்றால், பாலிசி காலம் குறைவாக இருக்கும் என்பதால் பிரீமியம் அதிகமாக கட்டவேண்டியிருக்கும்.
பாலிசி எடுக்காமல் விட்டுவிட்டோமே என்று நடுத்தர, பெரிய வயதுக்காரர்கள் சும்மா இருக்க வேண்டாம். நமது தகுதிக்குத் தகுந்த மாதிரியான பாலிசியை கட்டாயம் எடுக்கலாம்.
ஆயுள் காப்பீட்டில் பலவிதம் இருக்கிறது. நம்முடைய தேவைக்கும், தகுதிக்கும் ஏற்ற மாதிரி ஒரு பாலிசியை தேர்வு செய்துகொள்ளலாம். முழுக்க முழுக்க காப்பீட்டை மட்டும் நோக்கமாகக் கொண்ட திட்டம், கொஞ்சம் காப்பீடு, கொஞ்சம் முதலீடு என்று இரண்டும் கலந்து கிடைக்கும் திட்டம், முதலீட்டிலேயே நல்ல லாபம் தரக்கூடியதாக திட்டம்போட்டு செயல்படுத்தப்படும் திட்டம் என்று பலவித திட்டங்கள் உள்ளன.
காப்பீட்டை மட்டும் நோக்கமாகக் கொண்ட திட்டம், 'டேர்ம் இன்சூரன்ஸ்'. இதில் பாலிசி எடுத்தால், காப்பீடு மட்டும்தான். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், அவர் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். பாலிசி காலம் முழுதும் பாலிசிதாரர் நல்லவிதமாக இருந்தால் அவருக்கு, கட்டிய பிரீமியம் கிடைக்காது. அதனாலேயே பலர் இதை விரும்புவதில்லை.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். டேர்ம் இன்சூரன்சில் பிரீமியம் மிகவும் குறைவு. 35 வயதான ஒருவர் 25 லட்ச ரூபாய்க்கு இருபது வருடத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்தால், வருடத்துக்கு சுமார் 6 ஆயிரம் ரூபாய்தான் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒருவகையில் நல்ல விஷயம்தானே?
டேர்ம் இன்சூரன்சில் ஐந்து வருடத்தில் இருந்து முப்பது வருடம் வரைக்கும் பாலிசிக் காலத்தை நமது வசதிக்கு ஏற்ற மாதிரி தேர்வு செய்துகொள்ளலாம். எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்கலாம் என்பது பாலிசிதாரரின் வருமானத்தைப் பொறுத்தது. பொதுவாக ஒருவர் தன்னுடைய ஆண்டு வருமானத்தைப் போல சுமார் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுக்கலாம்.
சாதாரணமாகவே டேர்ம் இன்சூரன்சுக்கு பிரீமியம் குறைவு என்றால், இதையே குழு காப்பீடாக எடுத்தால் இன்னும் குறைவாக பிரீமியம் செலுத்தலாம். அதாவது, தனிநபர் பிரீமியத்தில் 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு குறைவாக கிடைக்கும். ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான பாலிசிதாரர்கள் கிடைப்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் சலுகையை அளிக்கின்றன.
காப்பீட்டுடன் முதலீடும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்கேற்ற திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum