அனுதின வேத வாசிப்பில் - ஒரு அனுபவ கட்டுரை
Sat Aug 08, 2015 9:11 am
பொதுவாக எனது அனுதின வேத வாசிப்பில், நீதிமொழிகளில் அன்றைய தினத்தின் எண்ணுடைய அதிகாரத்தை வாசிப்பது வழக்கம். ஆனால், ஒவ்வொரு முறையும் 7ம் அதிகாரம் வரும் போது இது பல முறை வாசித்தது தானே? இந்த பகுதியை தியானித்து அருளுரையும் ஆற்றியிருக்கிறேனே! அதில் உள்ள கருத்துக்கள் எனக்குத் தேவையற்றதே! எனக்கும் 50 வயதாயிற்றே... என்று எல்லா மாதங்களைப் போல இன்றையத் தினத்திலும் அந்த அதிகாரத்தைத் தள்ளி வைத்து விட்டு, வேறு பகுதிக்குச் செல்ல எத்தனித்தேன்.
ஆனால், இன்றையத் தினத்திலோ பரிசுத்த ஆவியானவர் அதே ஏழாம் அதிகாரத்தை வாசிக்கும் படி உணர்த்தினார். இதே நீதிமொழிகளை எழுதின சாலமோன், பெண்களினால் பாவத்தில் வீழ்ச்சி அடைய வில்லயா என்று என்னை எச்சரித்தார். அவருடைய சத்ததிற்கு கீழ்படிந்து அந்த நீதிமொழிகளின் ஏழாம் அதிகாரத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
இன்றைய தினம் நான் விடுப்பு எடுத்து வீட்டில் சில வேளைகளைக் கவனித்து வந்ததால், இந்த பகுதியை மீண்டும், மீண்டும் வாசிக்க தேவன் உதவி செய்தார்.
இந்த தியானத்தில் பல போதனைகளைத் தேவன் கற்றுக் கொடுத்தாலும், ஒரே ஒரு கருத்தினை மாத்திரம் இங்குப் பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.
நீதிமொழிகளின் இந்த அதிகாரத்தில், ஒரு இளைஞன் ஒரு திருமணமான பெண்ணின் விபசார பாவத்திற்கு கவர்ந்திழுக்கும் அழைப்பிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்பதை விவரிக்கிறது.
அந்தப் பெண் எவ்வாறு முகம் நாணாமல் இந்த வாலிபனுக்கு முத்தம் கொடுத்தாள்' என்று குறிப்பிடப் பட்டுள்ளது (நீதி 7: 13).
வாலிபனாகிய இயேசுவுக்கும் ஒரு பாவியான பெண் முகத்தில் அல்ல. . அவரது கால்களில் கொடுத்தால் என்று வாசிக்கிறோம் (லூக் 7: 38). அந்த நாட்களின் வழக்கத்தின் படி ஒரு அடிமை தன் எஜமானின் கால்களைக் கழுவி முத்தம் செய்வது வழக்கம். இந்தப் பகுதியில் பரிசேயர்கள் அவள் பாவியான பெண் என்பதை இயேசு உணரவில்லையே என்று தான் குற்றம் கண்டு பிடித்தார்களே அல்லாமல் அவளது இந்தச் செயலைக் குறை கூற வில்லையே! இயேசுவும் இந்த செயல், தான் பாவி என்பதை அவள் உணர்த்துவதாக உள்ளது என்று விளக்குகிறார்.
தாவீதும் இதனை முண்ணோட்டமாக 'குமாரன் கோபம் கொள்ளாமாலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தம் செய்யுங்கள்' (சங் 2: 12) என்று அறிவிக்கிறான்.
இதற்கு முந்தின வசனத்திலே பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரை சேவிக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். இதனையே பவுலும் 'பயத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப் படுங்கள் ( பிலி 2: 12) என்று குறிப்பிடுகிறார்.
அப்படியானால், அனுதினமும் தேவனுடைய சமுகத்தில் அந்தப் பெண்ணைப் போல 'நான் அதிகம் பாவம் செய்யும் சுபாவம் உடையவன்; என்னால் பரிசுத்தமாக வாழ பெலனில்லை' என்று அவருடைய சமுகத்திலே (அவருடைய பாதத்திலே)
நம்மைத் தாழ்த்துவதே அவரை முத்தம் செய்வதாகும்.
இவ்வாறு நம்மைத் தாழ்த்தும் போது அவர் பாவம் நம்மை மேற் கொள்ளாதவாறு காத்திடும் கிருபையைத் தருவார்.
அந்த இளைஞன் நேர் பாதையில் செல்லாதவாறு அந்த பெண்ணின் வீட்டுக்கடுத்த சந்தின் வழியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தான் தவறு செய்ய முடியாது என்ற வறட்டுக் கவுரமே அவனை ஆட்கொண்டது.
நானும் பாவம் செய்ய முடியும் என்ற பயமும், நடுக்கமும் உங்களை இது வரைப் பீடிக்க வில்லையா?
எச்சரிக்கையாக இருங்கள்.
கிருபையை இழந்து விடாத படி உங்களைத் தாழ்த்துங்கள். தேவன் உங்களை எல்லா இடங்களிலும் வெற்றி சிறக்கப் பண்ணுவார்.
வேதத்தைக் கவனமாக ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் நித்திய ஜீவனை அடைவீர்கள். தேவை இல்லாத பகுதி என்று எதனையும் உதாசினப் படுத்தாதீர்கள். தேவன் உங்களை ஆசீவதிப்பார்.
நன்றி: சகோ.பாபு ஜான் - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum