"காயீனை உருவாக்குவது எப்படி?
Fri Jul 31, 2015 6:34 pm
"காயீனை உருவாக்குவது எப்படி?
1.பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு.
2.கெட்ட வார்த்தைகைளைப் பேசும்போதுச் சிரித்து மகிழ்.
3.ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும்.
4.தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே.
5.அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய்.
6.அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!)
7.பிள்ளைகளுக்குமுன் கணவனுடன்/மனைவியுடன் சணடைபோடு.
8.பணம் கேட்கும்போதெல்லாம் கொடு.
9.அவனுக்கு எதையும் மறுக்காதே.
10.மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு.
11.அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு.
12.கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்"
ஆபேலை உருவாக்குவது எப்படி?
1.கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு-நீதி 22:6.
2.தேவையானபோது தண்டனை கொடு-நீதி 22:15.
3.முன்மாதிரியாக வாழ்ந்துக்காட்டு-2 தீமோ 1:5.
4.நாள்தோறும் வேதம் வாசிக்கக் கற்றுக்கொடு-சங் 119:9.
5.ஜெபிக்கக் கற்றுக்கொடு-மத் 18:20.
6.தன் கைகளால் வேலை செய்யக் கற்றுக்கொடு-புலம் 3:27.
7.ஆவிக்குரியவைகளுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்-1 தீமோ 4:8.
8.பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடு-1 பேது 5:5.
9.தாய்மையின் மேன்மையை உணர்த்து-1 தீமோ 5:25.
10.சபை வழிபாட்டுக்கும், ஆவிக்குரிய கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வதில் முன்மாதிரியாக இரு-எபி 10:25.
11.நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடு-ரோமர் 13:1.
12.நன்னடத்தை நற்பயனைத் தரும் என்பதை விளக்கிச் சொல்-ரோமர் 12:17"
கர்த்தர் நல்லவர்!!!
Thanks: Face Book
Permissions in this forum:
You cannot reply to topics in this forum