தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இணையதளம் உருவாக்குவது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இணையதளம் உருவாக்குவது எப்படி? Empty இணையதளம் உருவாக்குவது எப்படி?

Sun Aug 18, 2013 9:36 am
இணையதளம் உருவாக்கல்

     


இணையதளம் உருவாக்குவது எப்படி? Webconstruction_230_105
 இணையதளம் உருவாக்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது, ஒரு இணையதளம் உருவாக்க இடம் தேவை, அவ்விணையத்துக்கு ஒரு முகவரி தேவை. இடத்தை இலவசமாகவோ அல்லது காசு மூலம் கொள்வனவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம். முகவரியும் அப்படியே, எனினும் இலவசமாகப் பெற்றவற்றில் பல குறைபாடுகள் காணப்படலாம்; ஒரு குறிப்பிட்ட அளவு இடமே வழங்கப்படலாம், வழங்குவோரின் விளம்பரங்கள் இடப்படவேண்டிய சூழ்நிலை அமையலாம்.
 
திரளப் பெயர் (domain name)
இணைய முகவரியைப் பொருத்தவரை அது டொமைன் (domain) அல்லது திரளம் என அழைக்கப்படுகிறது.
www.akaramuthali.com
மேற்குறிப்பிட்ட இணைய முகவரியில் மூன்று பகுதிகள் உள்ளன. "www" , "பெயர்", "com"
இங்கு "www" இல்லாமலேயே akaramuthali.com இயங்கும், இதனை உயர் நிலைத் திரளம் (Top Level Domain) என்கின்றோம். இவற்றில் பின்னொட்டுக்கள் ‘.com’, ‘.org’, ‘.net’, ‘.co.in’, ‘.edu, ‘.info’, ‘.me’ என்று பலவகையில் அடங்கும். எ.கா: sakthivel.me
துணைத் திரளம் (Sub Domain) என்பது பிரதான பெயருக்கு முன்னர் வரும் முன்னொட்டு ஆகும். அனைவரும் பயன்படுத்தும் பொதுவான முன்னொட்டு "www" ஆகும். "www" இல்லாமல், அல்லது "www" ஐ முன்னொட்டாகச் சேர்த்து ஒரு இணையதளத்தின் பிரதான பகுதி பெரும்பாலும் அணுகப்படலாம். துணைத்திரளம் ஒரு இணையதளத்தை பல்வேறு பகுதிகளாக வகைப்படுத்த உதவுகிறது. வெவ்வேறு இணைய உருவாக்கு மென்பொருளைப் பயன்படுத்தவும் இது உதவுகின்றது.
நிழற்படங்களுக்கு என்று மட்டும் ஒரு தளத்தை உருவாக்க விரும்புபவர் 'photo.palkalaikazhakam.com' என உருவாக்கலாம். எ.கா: இணைய உருவாக்கு மென்பொருளில் ஒன்றான ஜூம்லா (ஜூம்லா (JOOMLA) - 1) எனும் உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியத்தைப் பயன்படுத்தி பிரதான இணையதளமும் (palkalaikazhakam.com), அந்தத் தளத்துக்கு ஒரு கருத்துக்களம் தேவைப்படின்  'phpBB' மென்பொருள் பயன்படுத்தி 'forum.palkalaikazhakam.com' எனும் துணைத்திரளத்தில் உருவாக்கலாம். 
சொந்தமாக ஒரு முகவரியை வாங்க  5 - 15  அமெரிக்க டொலர்கள் தேவைப்படலாம், இது பின்னொட்டிலும் தங்கியுள்ளது. பெரும்பாலானோர் விரும்புவது '.com' பின்னொட்டையே. சில இணையதளங்கள் முகவரியை இலவசமாக வழங்குகின்றனர், ஆனால் அவர்களிடம் இருந்து இணைய இடம் பெற்றுக்கொள்ள வேண்டும். இணைய இடமும் அதன் கொள்ளளவைப் பொறுத்து வேறுபடலாம், சிலர் வரையறை அற்ற அளவை வழங்குவதுண்டு. இவற்றைப் பற்றிய விவரத்தை பின்னர் படிக்கலாம்.
இணைய இடம்
இலவசமாக இணைய இடத்தை எடுக்கலாம், ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில் பல விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும்,
எ.கா 1) :இணைய இடத்தின் அளவு  300 mb அல்லது 1gb என்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
         2) ஒரு மாதத்துக்கு இணையத்தின் பயன்பாட்டு அளவு (உதாரணத்துக்கு) 2Gb ஆக வரையறுக்கப்பட்டிருக்கும், இதன் படி குறிப்பிட்ட அளவு கோப்புகளை அல்லது உலவல்களை மட்டுமே மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட இணையம் பிரபலமாகி, வருவோர் எண்ணிக்கை அதிகரித்தால் இணையம் முடக்கப்படலாம்.
எனினும் கூகிளில் தேடிப்பார்ப்பது மூலம் உங்களுக்குத் தேவையான இலவச சேவையை அறிந்துகொள்ளலாம்.
சில இலவச இணைய இடம் வழங்குனர்கள்:

  1. http://www.000webhost.com/
  2. http://x10hosting.com/
  3. http://hosting.india.to/free-web-hosting.html

இங்கு முகவரி இலவசமாக வழங்கப்படுமாயின் அது துணைத் திரளத்திலேயே அமையும். எ.கா: kanthan.x10hosting.com, murugan.000webhost.com.
முகவரியை மட்டும் கொள்வனவு செய்து, இடத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலும் ஒரு சிறந்த முறையாகும். இங்கு வலப்புறத்தில் தோன்றும் விளம்பரத்தில் உங்களுக்குத் தேவையான இணைய இடவழங்குனர் இருக்கக்கூடும்.
 நன்றி: பல்கலைக்கழகம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum