பிரகாரங்களின் ஆசீர்வாதம்
Sat Jul 18, 2015 9:00 am
சங்கீதம் 92: 13 – கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள்.
Introduction:
Introduction:
தேவனே நம்மை செழித்திருக்கப்பண்ணுகிறவர். அவருடைய ஆலயத்தில் நாம் நாட்டப்பட்டிருந்தால் நம்மை ஆசீர்வதிப்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது. ஒருவேளை ‘நான் இரட்சிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தேவன் என்னை ஆசீர்வதிக்கவே இல்லை’ என்று நீங்கள் சொன்னால், நீங்கள் ஆசீர்வாதம் என்றால் என்ன என்பதை தவறாய் புரிந்து வைத்துள்ளீர்கள் என்றே பொருள். நீங்கள் ஆசீர்வாதம் என்று நினைப்பது ஒன்று, ஆசீர்வாதம் என்பதற்கு தேவன் கொள்ளும் அர்த்தம் வேறு. ஆசீவாதத்தை என்னுடைய அளவுகோலால் தருவதில்லை. “எங்கள் பிரகாரங்களில்’ செழித்திருப்பார்கள். கர்த்தருடைய செழிப்பு என்பது அவருடைய பிரகாரங்கில் கிடைக்கு செழிப்பு.
129 – ம் சங்கீதத்தின் படி – மனைவியின் ஆசீர்வாதம் – வீட்டு ஓரத்தின் ஆசீர்வாதம், பிள்ளைகளின் ஆசீர்வாதம் – பந்தி ஓரத்தின் ஆசீர்வாதம் – ஆனால் விசுவாசிகளின் ஆசீர்வாதம் கர்த்தருடைய பிரகாரங்களின் ஆசீர்வாதம்.
கர்த்த்தருடைய பிரகாரத்தின் ஆசீர்வாதம் என்பது என்ன?
நான்கு முக்கியமான ஆசீர்வாதம்:
1. சங்கீதம் 84: 10 – கோராகின் புத்திரர் பாடுகிறார்கள். “ஆயிரம் நாளைப்பார்க்கிலும், உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப்பதை பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசலில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்.
“ஆயிரம் நாள் தேடி கிடைக்காத ஒன்று தேவனுடைய சமுகத்தில் ஒரே நாளில் கிடைக்கும். இதுவரைக்கும் கிடைத்ததை காட்டிலும் நல்லதை அவரது பிரகாரத்திலே வைத்திருக்கிறார்.
இந்த ஆசீர்வாதத்தை இரண்டு நிலையில் தேவன் தருகிறார். 11- ம் வசனம் – “கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர் – கர்த்தர் கிருபையையும் நன்மையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். who God is, what God offers to me (தேவன் யார்? எவர் எனக்கு என்ன தருகிறார்) என்னும் இரண்டையும் புரிந்து கொள்வதின் மூலம் உண்டாகும் நன்மை. இவை இரண்டையும் தேவன் சமுகத்தில் தான் புரிந்து கொள்கிறோம். தேவனை அறிந்துகொள்ளவேண்டிய ஆர்வம் இருந்தால்தான் ஆசீர்வாதம். நாம் செய்வதற்கு தேவையான கிருபையையும், செய்து முடித்ததற்கு ஏற்ற மகிமையையும் தேவன் தர வல்லவர்.
2. சங்கீதம் 65: 4 – “உம்முடைய வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.” – திருப்தி என்பதே அவர் பிரகாரத்தின் ஆசீர்வாதம். எல்லாவற்றிற்கும் கரை கண்டவன், கடைசியில் சொன்னது மாயை, மாயை, மாயை. Divine Satisfaction. சங்கீதம் 63 – 2-5 – உம் சமுகத்தில் ஆசையாய் வந்தேன் – நிணத்தின் கொழுப்பை உண்டது போல் திருப்தி அடைந்தேன். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் திருப்தி அடைவார்கள். கொரிந்து சபை மிகவும் நெருக்கப்பட சபை – அவர்களுக்கு பவுல் இப்படியா எழுதுகிறார் “இப்போழோது நீங்கள் திருப்தி அடைந்திருக்கிறீர்கள். சங்கீத 37: 09 – உலகமே பஞ்சத்தில் இருந்தாலும் தேவ பிள்ளைகளை திருப்தியாக்குகிறவர். யாத் : 16 :6 – எகிப்திலே நீங்கள் பெற்ற திருப்தியை பார்க்கிலும், காலைதோறும் எனது மகிமையால் திருப்தியாக்கினேன்.
3. ஏசாயா : 62: 8,9 – கர்த்தருடைய பிள்ளைகளில் பிரயாசங்களின் பலனை, சத்துருக்கள் அல்லது வேறு யாரோ அனுபவிக்காதபடி, பிள்ளைகளே அவர் சமுகத்தில் அனுபவிக்கும்படி செய்வார். ஏசாயா : ஓசியா 7:09 – எப்ராயிம் அவன் பலனை அந்நியன் தின்கிறார்கள். அவன் அதை அறியாமல் இருக்கிறான்.
4. சகரியா 3:7 – ஆசாரியனாகிய யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்து ஒரு பக்கம் இருக்கிறான். சத்துரு அவனைக்குறித்து ஒரு பக்கம் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கர்த்தருடைய தூதன் அவனுக்கு புதிய வஸ்திரம் தரித்து இப்படியாக யோசுவாவுக்கு சொல்கிறார் “நீ என் பிரகாரங்களை காவல் காப்பாய்”. அப்படி நிற்கும்போது இங்கார் உலாவுகிரவர்களுக்குள்ளே உனக்கு இடம் கொடுப்பேன். யார் உலாவுவது? தேவ தூதர்கள் மாத்திரமே. தேவ தூதருக்கு நிற்பதற்கு இடம் கொடுக்கிறவர், அவர் பிள்ளைகளுக்கு உலாவ இடம் கொடுக்கிறார். இது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்.
தேவ சமுகத்தில் தேவ பிள்ளை அனுபவிக்கும் மூன்று இணையற்ற ஆசீர்வாதங்கள், தேவ தூதரும் ஆசைப்படுகிற ஒன்று:
• யாத்: 14:6-9 – பலிபீடமும், வெண்கல தொட்டியும்தான், பிரகாரத்தில் தெரியும். ஒரே முறை செலுத்தப்படும் பலியும், அனுதின சுத்திகரிப்பிற்கான தொட்டியும் அங்கு இருந்தது. ஒரேமுறை தரும் மன்னிப்பு (இரத்தம்), அனுதின சுத்திகரிப்பிர்கான தண்ணீர். விலையேற பெற்ற ஆசீர்வாதம் பரிசுத்ததினால் உண்டாகும் ஆசீர்வாதம். இந்த ஒரு தேவன்தான், பரிசுத்தத்தை எதிர்பார்கிறவர். மற்றவர்கள் சுத்தத்தை எதிர்பார்க்கிறவர்கள். அவர் பரிசுத்தர், ஆகவே எதிர்பார்க்கிறார்.
பரிசுத்ததினால் விலையேற பெற்றவர்களாய் தனித்து தெரியும்படி தேவன் செய்கிறார். God make us Holy by the blood of the Lamb, by word of God and by working of the Holy Spirit. நம்மை பரிசுத்தமுள்ளவர்களாய் வைக்கும்படி தேவன் விரும்புவதின் முதல் நோக்கம், நாம் எப்ப்டிப்பட்டவர்களாய் இருக்கிறோமோ அப்படியே உலக ஜனங்களால் தேவன் அறியப்படுகிறார்.
ஆகவேதான் என்னை பரிடுத்தப்படுத்துங்கள் என்று ப்ரிசுத்ததுக்கே எல்லையான தேவன் சொல்லுகிறார். பரிசுத்தத்தில் வளர தேவ பிள்ளை தன்னை ஒப்புகொடுக்கும்போது, தேவன் சில ஆசீர்வாதங்களை தருகிறார். பரிசுத்தமான பின்பு தேவன் சில ஆசீர்வாதங்களை தருகிறார். இவை இரண்டையும் யாரும் எடுத்துகொள்ள முடியாது. பரிசுத்தமாகாமலே தேவன் தரும் ஆசீர்வாதத்தை யாரும் எடுத்து கொள்ள முடியாது.
யோசேப்பை தேவன் வசனத்தினால் புடமிட்டார். அதற்க்கு முன்பு அவனுக்கு இருந்த வண்ண உடைகள் பறிக்கப்பட்டது. அவன் புடமாக்கப்பட்ட பின்பு வரங்களையும் அவனுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தையும் யாரும் பறிக்க முடியவில்லை. இளைய குமாரனுக்கு உள்ள எல்லாம் எடுக்கப்பட்டது. தகப்பன் அவனை சுத்திகரித்த பின்பு, அவனுக்கு நித்தியமாய் கொடுக்கப்பட்டது.
• எரேமியா : 26: 2 – அவருடைய பிரகாரத்தில் கர்த்தருடைய வார்த்தை உண்டு. வார்த்தையின் அனுபவத்திலே செழிக்க வேண்டும். பாவியோடும் பேசுவார், பரிசுத்தவாநோடும் பேசுவார். அதற்காய் தவமிருக்க தேவை இல்லை. பல நெருக்கங்களை அனுபவித்த தாவீதோடு, 119 சங்கீதத்தில் 107 “தேவன் தன் வார்த்தையை அனுப்பி நிற்கச் செய்தார் – 107: 20 – வார்த்தையை அனுப்பி குணமாக்குவார். கர்த்தருடைய வார்த்தை(தான்) கர்த்தருடைய இதயம். நம்முடைய விண்ணப்பம் நமது இதயம்.
• சங்கீதம் 100: 4 – decalaring the praises of the one who kept me thus far.. தேவனுக்கு கொடுக்கும் புகழ்ச்சி (துதியை அவருக்கு கொடுத்தல்) அவர் நமக்கு தந்திருக்கும் மேன்மை. தூதர்களுக்கு “பரிசுத்தர் என்பதை தவிர வேறு தெரியாது”. நாம் தான் பாவங்களை மன்னிந்தவரே, எனது மேய்ப்பரே, தாயினும் மேலானவரே என்று சொல்ல முடியும். முதல் அனுபவம் பரிசுத்தத்தில் வளர, இரண்டு வார்த்தையில் வளர – மூன்று கொடுப்பதில் வளர ...
மூன்று காரியங்களை தேவ சமுகத்தில் கொடுக்க வேண்டும்
யோசேப்பை தேவன் வசனத்தினால் புடமிட்டார். அதற்க்கு முன்பு அவனுக்கு இருந்த வண்ண உடைகள் பறிக்கப்பட்டது. அவன் புடமாக்கப்பட்ட பின்பு வரங்களையும் அவனுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தையும் யாரும் பறிக்க முடியவில்லை. இளைய குமாரனுக்கு உள்ள எல்லாம் எடுக்கப்பட்டது. தகப்பன் அவனை சுத்திகரித்த பின்பு, அவனுக்கு நித்தியமாய் கொடுக்கப்பட்டது.
• எரேமியா : 26: 2 – அவருடைய பிரகாரத்தில் கர்த்தருடைய வார்த்தை உண்டு. வார்த்தையின் அனுபவத்திலே செழிக்க வேண்டும். பாவியோடும் பேசுவார், பரிசுத்தவாநோடும் பேசுவார். அதற்காய் தவமிருக்க தேவை இல்லை. பல நெருக்கங்களை அனுபவித்த தாவீதோடு, 119 சங்கீதத்தில் 107 “தேவன் தன் வார்த்தையை அனுப்பி நிற்கச் செய்தார் – 107: 20 – வார்த்தையை அனுப்பி குணமாக்குவார். கர்த்தருடைய வார்த்தை(தான்) கர்த்தருடைய இதயம். நம்முடைய விண்ணப்பம் நமது இதயம்.
• சங்கீதம் 100: 4 – decalaring the praises of the one who kept me thus far.. தேவனுக்கு கொடுக்கும் புகழ்ச்சி (துதியை அவருக்கு கொடுத்தல்) அவர் நமக்கு தந்திருக்கும் மேன்மை. தூதர்களுக்கு “பரிசுத்தர் என்பதை தவிர வேறு தெரியாது”. நாம் தான் பாவங்களை மன்னிந்தவரே, எனது மேய்ப்பரே, தாயினும் மேலானவரே என்று சொல்ல முடியும். முதல் அனுபவம் பரிசுத்தத்தில் வளர, இரண்டு வார்த்தையில் வளர – மூன்று கொடுப்பதில் வளர ...
மூன்று காரியங்களை தேவ சமுகத்தில் கொடுக்க வேண்டும்
(i) சங்: 135: 2 (அவருக்கே உரியது) அவருடைய துதி.
(ii) 96: 9 – பலிகளை செலுத்துவேன். காணிக்கை என்பது கர்த்தருக்கு நாம் கொடுக்கும் நன்றியின் விதம். எவ்வளவு என்று பார்பதில்லை. எப்படி என்றுதான் பார்கிறார்.
(iii) 116: 19 – பொருத்தனைகளை. செய்தால் செலுத்துவேன் என்பது அல்ல. பண்ணினாலும் பன்னாவிடாலும் செய்வேன் என்கிற பொருத்தனை.
what must i to receive these blessings?
பிரகாரத்தின் ஆசீர்வாதத்தை பெற என்ன செய்ய வேண்டும்?:
(I) சங்கீதம் 92: 13 – நாட்டப்பட வேண்டும் – (those who are planted and rooted) வந்து போகிறவர்கள் அல்ல. never negotiate the appoinment with God daily
(II) II ராஜா 23: 12 – வேறே இரண்டு பலி பீடங்களை ஏற்படுத்தினான். ஏன்? அந்நியர்களை பார்த்து. don’t compramise with your spiritual stand. don’t try to copy the sytem of the world to serve God. தேவனை தொழுகொள்ள உலக பாணியை பின்பற்றாதீர்கள். தேவனை பின்பற்ற ஓலைக பாணியையோ குறுக்கு வழிகளையோ பின்பற்றாதிருங்கள்.
(III) நெகேமியா 13: 4-8 – தேவ திட்டத்துக்கு விரோதமாய் செயல்பட்ட தோபியா, நெகேமியா ராஜாவுக்கு நன்றிசொல்ல தன தேசத்துக்கு சென்ற வேளையில் – ஆசாரியன் ஒருவன் தொபியாவோடு திருமணத்தில் சம்பந்தம் வைத்தான். அப்படி செய்ததினாலே தொபியாவை கொண்டு வந்து பிரகாரத்திலே ஒரு அரை கட்டி தங்க வைத்தான். எதிரியால் இன்னை சந்திக்க முடியாவிட்டால், சமரசம் பேசி வருவான் அல்லது ஒப்பந்தம் பேசி வந்தான். நெகேமியா வந்து தட்டு முட்டு சாமன்களை எடுத்து துரத்திவிட்டான். மூன்றாவது, நமது உறவுகளை குறித்து கவனமாய் இருக்க வேண்டும். தேவனுக்கு பிரியமில்லாத எந்த காரியமும், பழக்கமும், நபரும் அவருடைய உறவுக்கு தடையை வராதபடி காக்க எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum