தனி மனிதனுடைய மனம் திரும்புதல்
Sat Jul 18, 2015 8:53 am
அன்று சனிக்கிழமை மாலை நேரம். போதகர் ஒருவர் அடுத்த நாள் ஞாயிறுக்கிழமை ஆராதனைக்காக செய்தியை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். எங்கும் பாவம் பெருகி அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் உலகம் மாறவேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே அந்த செய்தியின் சாராம்சம்.
அவர் வெகு நேரம் தேவ சமுகத்தில் காத்திருந்தும் கர்த்தருடைய வார்த்தையை அவர் தெளிவாய் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
அதே சமயம் அவருடைய 8 வயது மகன் தந்தையிடம் விளையாட்டு பொருட்களை வாங்கித்தரும்படி அழுது நச்சரித்து கொண்டிருந்தான். அவனுடைய இடையூறு ஒருபக்கம்.
இந்த உலகம் கர்த்தருடைய வழியில் திரும்புவதற்கு என்ன தீர்வு என்பதை கர்த்தருடைய சமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் வேதத்தை தியானித்து கொண்டிருந்த போது அவருடைய மகன் திரும்பவும் இடையூறு செய்ய ஆரம்பித்தான். இதனால் அந்த போதகர் எரிச்சலடைந்தார்.
உடனே அவனுடைய கவனத்தை திசைதிருப்பும்படியாக அருகிலிருந்த ஒரு உலக வரைபடத்தை குறுக்கும் நெடுக்குமாய் வெட்டி பலதுண்டுகளாக்கி அவைகளை திரும்பவும் ஒழுங்குபடுத்தி எடுத்து வருமாறு மகனை கேட்டுகொண்டார். அவரது மகனும் ஆர்வத்தோடு அவைகளை கையில் வாங்கி கொண்டு இடத்தை காலி செய்தான்.
அந்த போதகர் நிம்மதி பெருமூச்சி விட்டவராய் தனிமையில் வேதத்தை தியானிக்க ஆரம்பித்தார். இன்னும் சரியான தீர்வை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சற்றுநேரத்திலேயே அவரது மகன் திரும்பவும் வந்தான். அதுவும் ஒழுங்கு படுத்தப்பட்ட உலக வரைபடத்துடன். சரிபடுத்த குறைந்தது அரைமணி நேரமாவது ஆகுமென்று எதிர்பார்த்திருந்த போதகர் இரண்டு நிமிடத்தில் சரிபடுத்தின மகனை பாராட்டினார்.
ஆனாலும் யாராவது அவனுக்கு உதவி செய்திருப்பார்கள் என்கிற சந்தேகத்தில் அவனைப்பார்த்து, “உன்னால் எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் இதை ஒழுங்குபடுத்த முடிந்தது?” என்று கேட்டார்.
அவன் ஒரு ரகசியத்தை அப்போது தான் சொன்னான், “ அப்பா இந்த உலக வரைபடத்தை நான் ஒழுங்குபடுத்தவில்லை. இந்த படத்திற்கு பின்னால் ஒரு மனிதனுடைய உருவம் இருந்தது. அந்த மனித உருவத்தை சரியாக பொருத்தினேன், உலகம் தானாக பொருந்திவிட்டது” என்றான்.
இதை கேட்ட போதகர் மகிழ்ச்சியில் மகனை கட்டியனைத்தார். காரணம் அவருடைய செய்திக்கு தீர்வு கிடைத்துவிட்டது.
ஆம் அது இதுதான் “பாவத்தால் நிறைந்துள்ள இந்த உலகம் மாறவேண்டும் என்றால், கர்த்தருடைய வழிக்கு திரும்ப வேண்டும் என்றால் தனி மனிதனுடைய மனம் திரும்புதல் மிகவும் அவசியம்”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum