மனிதனுடைய பாவங்களை மன்னிக்கும்படி இயேசு வெளிப்பட்டார்:-
Thu May 22, 2014 6:01 pm
அன்றொறு நாள் இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படி மனிதனோடு மனிதனாக வெளிப்பட்டார். சிலுவையில் பாடுகளை சகித்தார், நம்மை தம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டார்.
ஆதாம், ஏவாள் தேவனுடைய வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்று சொன்ன கனியை புசித்தார்கள். அதனால் அவர்களில் இருந்த தேவ சாயல், தேவ ரூபம், தேவ மகிமை யாவையும் அவர்கள் இழந்து போனார்கள். அதனால் அவர்கள் மரணத்தையும் சந்திக்க வேண்டியதாயிற்று."நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்."
(ஆதி.3.:19) இப்படி இவன் நியாயந்தீர்க்கப்பட்டான். தேவன் இவனை சிருஷ்டித்ததின் நோக்கம் இவன் தேவனோடு நித்திய நித்தியமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஆனால் இவனுடைய சரீரம் பாவத்திற்குரியதாகிவிட்டது. இழந்து போன இவனுடைய தேவ சாயல், தேவ ரூபம், தேவ மகிமை யாவையும் மறுபடியும் இவன் பெற வேண்டும். இவனில் ஜன்ம, கரும பாவங்கள் சூழந்திருக்கிறது. தேவன் மோசயின் மூலம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுகிறது. ஒரு மனிதனுடைய பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் இரத்தம் சிந்தப்பட வேண்டும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று கூறுகிறார். அன்பின் தேவாதி தேவன். "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." (எபி.9:22) இந்த நியாயப்பிரமாணத்தினால் ஒரு மனிதனுடைய பாவம் முற்றிலும் மன்னிக்கப்பட இயலவில்லை. "அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே." (எபி 10 :4) அதனால் இயேசு பூமியில் வெளிப்பட வேண்டியதாயிற்று.
மனிதனுக்கு ஆதரவாக, இயேசு மனிதனின் பாவங்களை மன்னித்து, இரட்சிக்கும்படி இயேசு பூமியில் வெளிப்பட்டார். தேவாதி தேவனே மனிதனுக்கு ஆதரவாக பூமியில் வெளிப்பட்டதினாலே இந்த மனுக்குலம் பாக்கியம் பெற்றது. அதையே காபிரியேல் தூதன் அறிவிக்கிறார். "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்." (லூக் 2 :10,14) உண்மையாகவே எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி தான் இது.
பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண நியமத்தின்படி குற்றமில்லாத ஆடு அல்லது மாடு இவைகளின் இரத்தம் பலிபீடத்திலே தெளிக்கபடும்போது அந்த மனிதனுடைய பாவம் மன்னிக்கப்படும். ஆனால் இவைகளின் இரத்தம் இவனை பூரண படுத்த முடியவில்லை. ஆனபடியினாலே இயேசு பூமியிலே மனிதனாக வெளிப்பட்டார்.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
(யோவா 3 :16)
" உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்."
(யோவா 3 :17)
" பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான்."
(1தீமோ 1 :15)
" அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காகஎழுப்பப்பட்டும் இருக்கிறார்."
(ரோம 4 :25)
" அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
(கலா 1 :4)
" கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்."
(எபி 9 :28) மேற்காணும் வசனத்தின்படி பாவிகளின் பாவங்களை மன்னித்து அவர்களை இரட்சிக்கப்பட இயேசு பூமியில் அவதரித்தார்.
இயேசு சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காய் பாடுகளை சகித்தார்:-
சர்வ வல்லமையுல்லவர் நமக்காக நமது ஜன்ம, கரும பாவங்கள் மன்னிக்கப்பட வியாகுலங்களையும், பாடுகளையும் சகித்தார். ஏற்றுக்கொண்டார்.
" அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக்கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்."
(மத்.27:28-31)
"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
(ஏசா 53 :6-
இப்படியாக அன்பின் மீட்பர் இயேசு நாம் சீயோனாகிய நித்தியத்தில் பிரவேசிப்பற்காக தன்னை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் தாமே நமக்காக பட்ட பாடுகளை சொல்லி மாளாது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட அவருடைய சரிரத்தில் 1531 காயங்களை ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு காயமும் 1 1/4 இஞ்சி நீளம் கொண்டதாக இருந்தது. இப்படி அவர் இத்தனை பாடுகளை சகித்த போதும் அவர் வருத்தப்படவில்லை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். சிலுவையில் வெற்றி சிறந்தார்.
இப்போது அவருடைய வார்த்தைகளை கேட்டு அவைகளை கைக்கொள்ளும் போது நம்மில் இருக்கின்ற ஜன்ம, கரும பாவங்களை நம்மை விட்டு முற்றிலும் அகற்றுகிறார்.
மெய்யாகவே "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்."
(சங்.103:12)
"உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன்."
(ஏசா.44 :22) இந்த நியாயப்பிரமாணத்தினால் ஒரு மனிதனுடைய பாவம் முற்றிலும் மன்னிக்கப்பட இயலவில்லை. "அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே." (எபி 10 :4)
அவர் மரிக்காவிட்டால் நாம் சீயோனாகிய நித்தியத்தில் ஒருபோதும் பிரவேசிக்க முடியாது. இப்போதோ சீயோனாகிய நித்தியத்தில் பிரவேசிக்ககூடிய ஸ்லாக்கியத்தை அவர் இரத்தத்தின் மூலமாக இயேசு தந்திருக்கிறார்.
அருமையான அன்பின் மனுக்குல மீட்பரான இயேசுவின் பிள்ளைகளே, நீயும், நானும் நித்தியத்தை சுதந்தரித்து கொள்ளும் சுதந்திரவாளியாவதற்கு அவர் பலியானார்.உன்னை தன்னுடைய இரத்தத்தினாலே கிரயத்திற்கு எடுத்துக்கொண்டார்." கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்."
(1கொரி 6 :20)
நீ அவருக்கென்று வாழ உன்னை ஒப்பக்கொடுப்பாயா.? ஒப்புக்கொடுப்பாயென்றால் அவர் மூலமாய் பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு சீயோனாகிய நித்தியத்தையும் சுதந்தரித்துக்கொள்வாய். நீ எந்த நிலையில் இருந்தாலும் வா...
வா, பாவி, மலைத்து நில்லாதே, வா-2
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே; (2)
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவனே,
உள்ளபடி வாவேன். - வா
பாதத்தண்டை வா என்று இயேசு அழைக்கிறார்.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum