நிலையான வீடு
Fri Jul 17, 2015 10:21 pm
ஒரு பன்றிக்கு மூன்று குட்டிகள் இருந்தன. மூன்றும் பெரியவைகளாயின. அப்பா பன்றி அவற்றிடம் சொன்னது,
" பிள்ளைகளே! நீங்கள் உங்கள் சொந்த உழைப்பில் வாழும் அளவிற்கு வளர்ந்து விட்டீர்கள். இனி நான் ஓய்வெடுக்கலாம். நீங்கள் போய் ஆளுக்கொரு வீடு கட்டுங்கள். நானும் , உங்கள் அம்மாவும் ஒவ்வொரு வீட்டிலும் மாறிமாறி தங்கி எங்கள் இறுதி நாட்களை நகர்த்துகிறோம். செய்வீர்களா? " என்றது.

மூன்றுமே மகிழ்ச்சியாகத் தலையசைத்தன. அடுத்த நாளே ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்தன. முதலில் தனது பெற்றோரை அழைத்தது மூத்த குட்டி. அவையும் அங்கே சென்றன. மூத்தது கடலில் இருந்து நிறைய உப்பை சேகரித்து அதைக் கொண்டே அழகான வீட்டைக் கட்டியிருந்தது. வெள்ளை வெளேறென்ற நிறத்தில் , பார்த்தவுடனே மனதைக் கவரும் விதத்தில் வீடு ஜொலித்தது. பன்றிகள் இரண்டும் பரவசமாக உள்ளே நுழைந்தன. அடடா! தரைகள், தூண்கள், சுவர்கள் அனைத்துமே பளீரிடும் வெண்மை.
" இது வெள்ளி மாளிகை ! வெள்ளி மாளிகை! " உற்சாமாய்க் சத்தமிட்டு மூத்ததை பாராட்டின. ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை.
அடுத்தது இரண்டாவது குட்டியின் வீடு.
அது வைக்கோலை ஏராளமாய்த் திரட்டி அழகான வீடு கட்டி இருந்தது. தூரத்தில் வரும்போதே வீடு வெயில் பட்டுத் தங்க நிறமாக மின்னியது . ஆசையாய் வீட்டுக்குள் ஓடின. எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற வைக்கோல். மனம் மயக்கும் அழகு.
" ஆஹா! இது தங்க வீடு! தங்க வீடு! " அப்பா சொல்லி அகமகிழ்ந்தது. அங்கும் ஒரு மாதம் சந்தோஷமாய் நகர்ந்தது.
" ஆஹா! இது தங்க வீடு! தங்க வீடு! " அப்பா சொல்லி அகமகிழ்ந்தது. அங்கும் ஒரு மாதம் சந்தோஷமாய் நகர்ந்தது.
அடுத்தது கடைசி பிள்ளை.
" இவன் என்ன பண்ணிருப்பான் ?" கேள்வியுடன் வந்த பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடைசி பிள்ளையின் வீடு மின்னவும்
இல்லை , ஜொலிக்கவும் இல்லை. விரக்தியாய் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.
கடைசிப் பிள்ளை ஓடி வந்து தாய், தந்தையைக் கட்டி அணைத்து
" வாங்க உள்ளே " என அன்பொழுக அழைத்தது. அது கல்லால் கட்டப்பட வீடு கருப்பாக , எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் இருந்தது. உள்ளே கருங்கல் தூணும், தரையும் , சுவரும் முரட்டுத்தனமாகக் காட்சியளித்தன.
" வாங்க உள்ளே " என அன்பொழுக அழைத்தது. அது கல்லால் கட்டப்பட வீடு கருப்பாக , எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் இருந்தது. உள்ளே கருங்கல் தூணும், தரையும் , சுவரும் முரட்டுத்தனமாகக் காட்சியளித்தன.
அப்பாவின் சிந்தனையில் வெள்ளி வீட்டின் அழகும், தங்க வீட்டின் கவர்ச்சியும் வந்து போயின,
" இது ஒன்றுக்கும் உதவாத குப்பை வீடு! எனக்குப் பிடிக்கவில்லை "
வேகமாக மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறியது.
" இது ஒன்றுக்கும் உதவாத குப்பை வீடு! எனக்குப் பிடிக்கவில்லை "
வேகமாக மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறியது.
கடைசிக் குட்டி இதை எதிர்பாக்கவேயில்லை.
" அப்பா! அம்மா! " என்றபடி பின்னாலேயே ஓடியது. அவை திரும்பியும் பார்க்காமல் மூத்த பிள்ளை வீட்டுக்குப் போய் விட்டன.
"வீடுன்னா இதுதான் வீடு. இனிமேல் இதுவும் ரெண்டாவது மகன் வீடுந்தான் நமக்கு" . நடந்து போன களைப்பும் , கடைசிப் பிள்ளையின் வீடு குறித்த நினைவும் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி இருந்தன. அப்படியே தூங்கிப் போயின.
திடீரென அவற்றின் மேல் தண்ணீர் படும் உணர்வு. பதறி எழுந்தன. கணத்த மழை பெய்து கொண்டிருந்தது. வெள்ளி வீட்டின் கூரையைக் காணவில்லை. மழையில் வீடு கரைந்து கொஞ்ச நேரத்திலேயே கட்டாந்தரையாகிப் போனது. குளிரில் நடுங்கியபடி நின்று கொண்டிருந்த பெற்றோரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் மூத்த குட்டி தலையைக் குனிந்து கொண்டது.
விடியும் வரை ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த பன்றிகள் இரண்டாவது பிள்ளையின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தன.
" இது தங்க வீடு! இது மழையில் கரையாது" . அப்பா சொன்னது போலவே அன்று பெய்த அடை மழையிலும் வைக்கோல் வீடு பத்திரமாக இருந்தது.
"இனிமேல் இது மட்டுந்தான் நம்ம வீடு " அப்பா, அம்மாவிடம் சொன்னது.
ஓரிரு நாட்கள் நிம்மதியாகவே கழிந்தன. ஒரு மாலை நேரத்தில் ஒரு காற்று வீச ஆரம்பித்தது. விரைவில் அது சூறாவளியாய்ச் சுழன்று அடித்தது. இப்போது தங்க வீட்டின் கூரை பெயர்ந்து பறந்து போனது. சிறிது நேரத்திற்குள்ளாகவே சுவர்களும். தூண்களும் கூட இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. மீண்டும் கட்டாந்தரையில் நின்றன பன்றிகள். இப்போது போக இடமில்லை.
அப்போது அம்மா கேட்டது .
" ஏங்க, நம்ம சின்னவன் வீட்டுக்குப் போய் வேணா பாத்துட்டு வந்துடலாமா?"
அப்பா மறுக்கவில்லை. கிளம்பியுள்ளது. சின்னப் பன்றிக்கு மிகவும் சந்தோஷம். தாய், தந்தையை பெரிய அறையில் காய்ந்த புற்களால் படுக்கை அமைத்து கதகதப்பாய்ப் படுக்க வைத்தது. வெளியே பலத்த சூறாவளியுடன் மழை. ஆனாலும் வீட்டுக்கு ஒரு சேதமும் இல்லை. நீண்ட நாளின் பின் நிம்மதியாக உறங்கின.

காலையில் அப்பா சொன்னது,
" கண்ணுக்கு அழகாய் இருந்தவையெல்லாம் காணாமல் போயின. ஆனால் நாங்கள் அலட்சியப் படுத்திய கல்வீடு எங்களைக் காப்பாற்றி விட்டது" .
" கண்ணுக்கு அழகாய் இருந்தவையெல்லாம் காணாமல் போயின. ஆனால் நாங்கள் அலட்சியப் படுத்திய கல்வீடு எங்களைக் காப்பாற்றி விட்டது" .
செல்லமே! உப்பு வீடும், வைக்கோல் வீடும் சில காலம் உலகின் கவனத்தை ஈர்க்கலாம் ஆனால் நீ கற்பாறை மேல் கட்டியிருக்கும் உன் வீட்டைப் போல அது காற்றிலும், புயலிலும் நிலைக்காது. பொறுமையுடன் நம்பிக்கையாய்க் காத்திரு. உன் கண்கள் அதைக் காணும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum