விண்ணை நோக்கிக் காத்திருக்கும் கூட்டம்
Fri Jul 17, 2015 9:58 pm
அது மழைக்காலம். வீட்டு எஜமான் ஒரு புதிய குடை வாங்கினார். அதைக் கையில் பிடித்தபடி, செருப்பையும் அணிந்து கொண்டு வெளியே கிளம்பினார்.
குடையைப் பார்க்கப் பார்க்க செருப்புக்கு சிரிப்பு வந்தது. குடையைப் பார்த்து சொன்னது,
" என்னமோ பெரிய ஆள் மாதிரி தலையை உயர்த்தி நிக்கிறியே. நாலு நாள் மழை நின்னுட்டா இருந்த இடம் தெரியாமல் காணாப் போயிடுவ. அப்புறம் ஆறு மாசமோ , ஒரு வருஷமோ மறுபடி மழை வரும்போதுதான் உன் பந்தாவெல்லாம். என்னப் பாரு மழையாயிருந்தாலும், வெயிலா இருந்தாலும் எப்பப் பாத்தாலும் நான்தான் ஹீரோ" என்றது. குடையோ ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தது. குடை ஒன்றுமே பேசாமல் அடங்கிப் போனது செருப்புக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

பல மணி நேரம் அவற்றின் சொந்தக்காரர் வெளியே சுற்றினார். கடைசியாக வீடு வந்து சேர்ந்தார். அது வரைக்கும் செருப்பு வாய் ஓயாமல் தன் பெருமைகளைப்பேசிக் கொண்டே வந்தது. குடை பேசவேயில்லை.
வீடு வந்ததும் செருப்பை வாசலில் உதறிவிட்டார். குடையை மடக்கி வீட்டிற்குள் இருந்த ஒரு ஆணியில் மாட்டி வைத்தார்.
இப்போது குடை , செருப்பைப் பார்த்துக் கேட்டது.
இப்போது குடை , செருப்பைப் பார்த்துக் கேட்டது.
" என்ன நண்பா , வெளியிலயே நின்னுட்டே? உள்ளே வரலையா? " என்றது. செருப்பு தலை குனிந்து மௌனமானது.
செல்லமே! மண்ணோடு மட்டுமே சிந்தையை வைத்து, மண்ணோடு மட்டுமே உறவாடும் பிறவிகள் என்னதான் பெருமை அடித்துக் கொண்டாலும் கடைசியாக கௌரவப் படுத்தப் படுவதெல்லாம் விண்ணை நோக்கிக் காத்திருக்கும் கூட்டந்தான்.
அது நீயும் நானும்தான். இல்லையா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum