தேவ பிள்ளைகளின் காரியத்தை பிசாசு தடை பண்ண முடியுமா?
Fri Jul 17, 2015 9:55 pm
மிகுந்த மன பாரம் ரவியை அழுத்தியது. ஜெபிக்க முடியவில்லை. வேதம் வாசிக்க முடியவில்லை. குழப்பம். குழப்பம். அவனது குழப்பத்துக்குக் காரணம் உண்டு. அவன் ரட்சிக்கப் பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பக்கத்து வீட்டில் வசிக்கும் திமோத்தி
அண்ணனின் ஒழுக்கமும், தூய்மையுமான வாழ்க்கையினால் கவர்ந்து இழுக்கப்பட்டு , இதற்கெல்லாம் பின்புலமாக விளங்கும் ஏசு என்ற தேவனை அறிந்து கொண்டு , அவரை நோக்கிக் கூப்பிடுகையில் நிரந்தர சமாதானம் உண்டு என்பதை உணர்ந்து, படிப்படியாய்த் தீய பழக்கங்களை வென்று ஒவ்வொரு படியாகக் கடந்து கர்த்தரே வழியும் , சத்தியமும், ஜீவனுமானவர் என்பதை உணர்ந்து அவரிடம் தன்னை ஒப்புக் கொடுத்தான். பயமுறுத்தும் எத்தனையோ பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போயின.

ஆனால் கடந்த சில மாதங்களாக எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தடை. முக்கியமான பல முயற்சிகள் பாதியிலேயே தடைபட்டு நிற்கின்றன. எத்தனையோ ஜெபம் செய்தும் சின்னச் சின்ன அசைவுகள் தவிர வேறேதுமில்லை. தேவ பிள்ளைகளின் காரியத்தை பிசாசு தடை பண்ண முடியுமா? அப்படி என்றால் கர்த்தரின் பிள்ளைக்கு என்னதான் விசேஷித்த பலன்? கேள்விகள் மனதைக் குடைந்தன.
ஒரு வாரமாக மனதில் ஒரு வெறுமை குடியேறி விட்டது. திமோத்தி அண்ணனினிடமே ஆலோசனை கேட்டால் என்ன? என்று அவரைத் தேடிப் போனான். அவர் ஒரு வங்கியில் காசாளர். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் கர்த்தருக்காக எதையேனும் செய்து கொண்டே இருப்பார். அன்று அவர் ஏதோ வேலையாக விடுப்பு எடுத்திருந்தார். ரவி வந்ததுமே அவன் மனதில் ஏதோ குழப்பம் என்று அறிந்து கொண்டார். அவராக எதையுமே கேட்கவில்லை. நீண்ட மௌனத்தின் முடிவில் அவனே சொல்லி முடித்தான்.
" எதற்காக இத்தனை தடைகள்? என்னிடம் என்னதான் தவறு? " . திமோத்தி அண்ணன் அவன் தோளில் கைபோட்டுக் கொண்டார். "சரி வா .கொஞ்சம் காலாற நடந்து வரலாம். மனசு கொஞ்சம் லேசாகும் " என்றார். அவனும் மௌனமாய் பின் தொடர்ந்தான். அவர் அவனை அழைத்துச் சென்ற இடம் அவர் பணியாற்றும் வங்கி . உள்ளே அழைத்துச் சென்றார்.
நுழைந்ததுமே புகார்ப் பெட்டி கண்ணில் பட்டது. அதன் சிறிய கதவு மிகச்சிறிய பூட்டைக் கொண்டு பூட்டப்பட்டிருந்தது. திமோத்தி அண்ணன் கேட்டார்,
" இது என்ன தெரியுதா? " ரவி உடனே சொன்னான், " பூட்டு அண்ணா! " . அடுத்து அவனைக் கோப்புகள் இருக்கும் அலமாரிகள் அருகில் அழைத்துச்சென்றார். அதில் கதவோடு இணைந்த பூட்டு பொருத்தப் பட்டிருந்தது. அவர் மீண்டும் கேட்டார், " இது என்ன தெரியுதா? " .ரவி மீண்டும் சொன்னான்,
" இதுவும் பூட்டுதான் அண்ணா . ஆனா அந்தப் பூட்டைவிடக் கொஞ்சம் பெரிசு " . திமோத்தி அண்ணன் புன்னகைத்தார். இப்போது அவனை நகைகள் வைக்கும் பாதுகாப்பு அறைக்கு அருகே இட்டுச்சென்றார். அதில் மிகவும் வலிமையான பூட்டு , கணமான கதவுடன் ஒட்டியவாறு அமைக்கப் பட்டிருந்தது. இப்போது அண்ணன் என்ன கேட்பார் என்பதைப் புரிந்து கொண்டு ரவி சொன்னான்,
" இதுவும் பூட்டுதான் அண்ணா. ஆனா இதை யாராலும் சாவி இல்லாம அசைக்கக்கூட முடியாது ".
இப்போது திமோத்தி அண்ணன் கேட்டார்.
" ரவி! நீ இப்ப மூனு விதமான பூட்டுகளப் பாத்தே. மூனும் பூட்டுதானே? அப்படின்னா வாசல்ல பாத்தியே சின்னப் பூட்டு அதை வச்சே இதையும் பூட்டலாமே! இதுக்கு மட்டும் எதுக்கு இத்தனை பெரிய பூட்டு? " என்றார்.
ஏற்கனவே அவர் கேட்ட அர்த்தமற்ற கேள்விகளினாலும் , மனக்குழப்பத்தினாலும் ரவிக்கு எரிச்சல்தான் வந்தது. " என்னண்ணே கேள்வி இது? சாதாரணக் காகிதத்தை வைக்கிற பெட்டிக்குப் போடுற முப்பது ரூபாய்ப் பூட்டைப் போய்க் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உள்ள பொக்கிஷ அறைக்கு யாராவது போடுவாங்களா ?" என்றான்.
அவனது குரலில் இருந்த எரிச்சல் அவரை பாதித்ததாகத் தெரியவில்லை. சிரித்த முகத்துடன் சொன்னார்,
" நீ கேட்ட கேள்விக்கு நீயே விடை சொல்லிட்டே பார்.
ஈசியா திறக்கும் பூட்டுக்குப் பின்னாடி மதிப்பில்லாத பொருள்தான் இருக்கும். ஆனா பூட்டு ரொம்ப கடினமானதா இருந்தா நிச்சயமா அதுக்குப் பின்னால பெரிய பொக்கிஷம் இருக்குதுன்னுதானே அர்த்தம் ? பெரிய ஆசீர்வாதங்கள் வரும்போது பெரிய தடைகளால் பிசாசு அதைத் தடுக்கத்தான் முயற்சிப்பான். ஆனா உங்கிட்டதான் ஜெபம்ங்கிற பெரிய சாவி இருக்கே! " திமோத்தி அண்ணன் சொல்லிக் கொண்டே அவன் முகத்தை ஏறிட்டார்.

அவன் கண்களில் நீர் வழிந்தாலும் முகத்தில் தெளிவு பூத்திருந்தது. செல்லமே! பெரிய காரியங்கள் எல்லாமே பெரிய தடைகளைக் கொண்டு பூட்டப்பட்டிருந்தவைதான். உன்னிடம்தான் எதையும் உடைக்கும் சாவி உண்டே ! மனம் தளராமல் முயன்றால் பொக்கிஷங்கள் உனக்கே சொந்தம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum