அழைப்பை அசட்டை செய்யாதே
Fri Jul 17, 2015 9:51 pm
மேல் மாடியில் நின்றுகொண்டிருந்த எஜமான் கீழே நின்றுகொண்டிருந்த தனது வேலைக்காரனை மேலிருந்த படியே சத்தமிட்டு அழைத்தார். அவர் எவ்வளவோ சத்தமிட்டும் அவன் மேலே நிமிர்ந்து பார்க்கவேயில்லை.
உடனே எஜமானர் ஒரு சிறிய வெள்ளி நாணயத்தை அவனருகில் வீசினார். அவன் உடனடியாக அதைப் பொறுக்கியெடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். ஆனாலும் நிமிர்ந்து பாக்கவில்லை.
எஜமானர் மீண்டும் ஒரு வெள்ளி நாணயத்தை வீசினார். அது முந்தைய நாணயத்தை விடப் பெரியது. அதையும் எடுத்துக் சந்தோஷமாய்ப் பையில் போட்டுக் கொண்டான். எஜமான் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெள்ளி நாணயத்தை வீசினார். இப்போதும் அதே கதைதான்.
பொறுமையிழந்த முதலாளி இம்முறை ஒரு சிறிய கல்லை எடுத்து அவன் தலையில் போட்டார். கல் தலையில் விழுந்த உடனே, "ஐயய்யோ, எஜமானே! கூப்பிட்டீங்களா?" என்று அலறி அடித்தபடி மேலே பார்த்தான்.
செல்லமே! நமக்குத் நன்மைகள் கிடைக்கும் போதெல்லாம் நாம் அவற்றிலேயே முழுமையாக மூழ்கிப் போய்க் கர்த்தரை நினைப்பதில்லை. ஆனால் துன்பம் வந்து விட்டாலோ உடனே அவரை நோக்கிப் புலம்புகிறோம். இனியாவது நம்முடைய இன்பங்களிலும் அவரை மறவாதிருப்போம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum