[size=undefined]‘கு ழந்தை ஓவர் குண்டாக இருப்பது அழகல்ல.. ஆபத்து. ஒல்லிக் குழந்தைதான் ஆரோக்கிய குழந்தை’ என்று நிரூபித்திருக்கிறது மருத்துவ உலகம். ‘ஒபிஸிடி’ எனப்படுகிற ‘அதிக உடல் பருமன்’ ஏற்படுத்துகிற தீய விளைவுகள் பற்றியும் இந்தப் பிரச்னையிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் விதம் பற்றியும் இங்கே விவரிக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபாலும் குழந்தை நல மருத்துவர் காயத்ரி சுப்ரமணியனும்.[/size] ‘‘இப்போது பலருக்கும் 30 வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. கிட்டத்தட்ட பத்தில் ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வருகிறது. ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 35-40 வயதுக்குள்ளாகவே இதய நோய், பக்கவாதம் ஏற்படுகிறது. இன்னும்.. ஆஸ்துமா, பெண் குழந்தைகள் 7, 8 வயதிலேயே பூப்படைதல், பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கர்ப்பப்பை புற்றுநோய், எலும்பின் வலிமை குறைந்து விடுவது.. என்று பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது, சிறு வயதிலிருந்து வந்த முறையற்ற உணவுப் பழக்கம்தான் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. நம் நாட்டின் நகர்ப் பகுதிகளில் ஐந்தில் ஒரு குழந்தை அளவுக்கதிக உடல் பருமனுடன்.. அதாவது ‘ஒபிஸிடி’ பிரச்னையுடன் இருக்கிறது. குழந்தையின் உணவுப் பழக்கத்தை முறைப் படுத்தினாலே ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை இந்த உலகத்துக்குத் தர முடியும்!’’ என்கிற ஜெயஸ்ரீயும் காயத்ரியும் கொடுத்த டிப்ஸ் கீழே.. குழந்தையை பசும்பாலுக்குப் பழக்கப்படுத்தும் போது பாலில் சர்க்கரை போடுவதைத் தவிருங்கள். முக்கிய மாக, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கிற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் எந்தச் சத்தும் இல்லை. தீமைதான் அதிகம். ‘ஒபிஸிடி’ ஏற்பட முக்கிய காரணமான ‘ஃப்ரக்டோஸ்’ என்ற பொருள் சர்க்கரையில் அதிகமாக உள்ளது. சர்க்கரை போடாவிட்டால் குழந்தை எப்படி பாலைக் குடிக்கும் என்று கேட்கிறீர்களா? தாய்ப்பாலில்கூட இனிப்பு இல்லைதான். அதை குழந்தை விரும்பிக் குடிக் கிறதே! அதேபோல பசும் பாலையும் குடிக்கும். நீங்களாகத் தான் சர்க்கரை போட்டு குடிக்க வைத்துப் பழக்கப் படுத்துகிறீர்கள். சர்க்கரை போட்டுக் குடித்துப் பழகிய குழந்தையெனில், கொஞ்சம் கொஞ்ச மாக சர்க்கரையின் அளவைக் குறையுங்கள். குழந்தை சாப்பிடும்போது டி.வி. பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். டி.வி-யை பார்த்துக் கொண்டிருந்தால் உணவில் கவனம் இருக்காது. அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடும்.
குழந்தைக்குப் பசி எடுப்பதற்கு முன், சாப்பாட்டைப் போட்டுத் திணிக்கக் கூடாது. அதேபோல, அதற்குப் பசியெடுக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனி கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். சரியாகத் தூங்காத குழந்தை குண்டாகும். இரவில் 7 மணிக்கெல்லாம் சாப்பிடவைத்து, 8 மணிக்கு பால், பழம் கொடுத்து, அரைமணி நேரம் கழித்து தூங்க வைத்துவிடுங்கள். றீ சாப்பிடுவதால் கிடைக்கிற உடலின் சக்தி சரியான முறையில் செலவிடப்படவேண்டும். இதற்கு குழந்தை தினமும் ஒரு மணி நேரமாவது ஓடி ஆடி விளையாட வேண்டும். நிறைய தூரம் நடக்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், பீட்ஸா, பர்கர், சிப்ஸ், சாக்லெட், ஐஸ்கிரீம் இதெல்லாம் முழுக்க முழுக்க தேவையில்லாத கொழுப்புகள். இவற்றை ‘எம்டீ கலோரிஸ்’ என்று சொல்வோம். இவற்றைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவித சக்தியும் கிடைப்ப தில்லை. அடிக்கடி எம்டீ கலோரிஸ் பொருட்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு 14 வயதுக்குள்ளாகவே மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் ஏற்படுவதற் கான வாய்ப்பு இருக்கிறது. குழந்தை விரும்பினால் எப்போதாவது வாங்கித் தரலாம். இரண்டு வயதுவரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ‘ஒபிஸிடி’ ஏற்படு வதற்கான வாய்ப்பு குறைவு. அதனால், குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுங்கள். புரோட்டீன் சக்திக்கு ஒரு பருப்பு வகை, கார்போஹைட்ரேட்டுக்கு அரிசி அல்லது கோதுமை, கொழுப்பு சக்திக்கு ஒரு ஸ்பூன் நெய், வைட்டமின்களும் தாது உப்புகளும் நிறையக் கிடைக்க காய்கறிகள், பழங்கள், இவற்றோடு 2 டம்ளர் பால், ஒரு கப் தயிர், ஒரு முட்டை.. இவை எல்லாம் தினமும் குழந்தையின் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வாரம் இருமுறை கீரை கொடுங்கள். இப்படி சரிவிகித உணவைச் சாப்பிடும் குழந்தைக்கு எடை அதிகரிக்காது. வீட்டிலேயே முறுக்கு, தட்டை செய்து மாலை நேரங்களில் கொடுங்கள். நொறுக்குத் தீனிக்கு பதிலாக ரவை உப்புமா, அவல் உப்புமா, சுண்டல், பொட்டுக் கடலை, பேரீச்சை போன்றவற்றைக் கொடுங்கள். கேழ்வரகு கஞ்சி, தானியக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றைக் கொடுப்பதும் மிக மிக நல்லது.’’ |