தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Empty என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்?

Thu Jul 09, 2015 3:11 pm
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? P68b 
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? P68c
[size=undefined]என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? P68a‘கு ழந்தை ஓவர் குண்டாக இருப்பது அழகல்ல.. ஆபத்து. ஒல்லிக் குழந்தைதான் ஆரோக்கிய குழந்தை’ என்று நிரூபித்திருக்கிறது மருத்துவ உலகம். ‘ஒபிஸிடி’ எனப்படுகிற ‘அதிக உடல் பருமன்’ ஏற்படுத்துகிற தீய விளைவுகள் பற்றியும் இந்தப் பிரச்னையிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் விதம் பற்றியும் இங்கே விவரிக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபாலும் குழந்தை நல மருத்துவர் காயத்ரி சுப்ரமணியனும்.[/size]
‘‘இப்போது பலருக்கும் 30 வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. கிட்டத்தட்ட பத்தில் ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வருகிறது. ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 35-40 வயதுக்குள்ளாகவே இதய நோய், பக்கவாதம் ஏற்படுகிறது. இன்னும்.. ஆஸ்துமா, பெண் குழந்தைகள் 7, 8 வயதிலேயே பூப்படைதல், பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கர்ப்பப்பை புற்றுநோய், எலும்பின் வலிமை குறைந்து விடுவது.. என்று பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது, சிறு வயதிலிருந்து வந்த முறையற்ற உணவுப் பழக்கம்தான் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? P68
நம் நாட்டின் நகர்ப் பகுதிகளில் ஐந்தில் ஒரு குழந்தை அளவுக்கதிக உடல் பருமனுடன்.. அதாவது ‘ஒபிஸிடி’ பிரச்னையுடன் இருக்கிறது. குழந்தையின் உணவுப் பழக்கத்தை முறைப் படுத்தினாலே ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை இந்த உலகத்துக்குத் தர முடியும்!’’ என்கிற ஜெயஸ்ரீயும் காயத்ரியும் கொடுத்த டிப்ஸ் கீழே..
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 குழந்தையை பசும்பாலுக்குப் பழக்கப்படுத்தும் போது பாலில் சர்க்கரை போடுவதைத் தவிருங்கள். முக்கிய மாக, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? P69aகிடைக்கிற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் எந்தச் சத்தும் இல்லை. தீமைதான் அதிகம். ‘ஒபிஸிடி’ ஏற்பட முக்கிய காரணமான ‘ஃப்ரக்டோஸ்’ என்ற பொருள் சர்க்கரையில் அதிகமாக உள்ளது.
சர்க்கரை போடாவிட்டால் குழந்தை எப்படி பாலைக் குடிக்கும் என்று கேட்கிறீர்களா? தாய்ப்பாலில்கூட இனிப்பு இல்லைதான். அதை குழந்தை விரும்பிக் குடிக் கிறதே! அதேபோல பசும் பாலையும் குடிக்கும். நீங்களாகத் தான் சர்க்கரை போட்டு குடிக்க வைத்துப் பழக்கப் படுத்துகிறீர்கள்.
சர்க்கரை போட்டுக் குடித்துப் பழகிய குழந்தையெனில், கொஞ்சம் கொஞ்ச மாக சர்க்கரையின் அளவைக் குறையுங்கள்.
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 குழந்தை சாப்பிடும்போது டி.வி. பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். டி.வி-யை பார்த்துக் கொண்டிருந்தால் உணவில் கவனம் இருக்காது. அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடும்.

என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 குழந்தைக்குப் பசி எடுப்பதற்கு முன், சாப்பாட்டைப் போட்டுத் திணிக்கக் கூடாது. அதேபோல, அதற்குப் பசியெடுக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனி கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 சரியாகத் தூங்காத குழந்தை குண்டாகும். இரவில் 7 மணிக்கெல்லாம் சாப்பிடவைத்து, 8 மணிக்கு பால், பழம் கொடுத்து, அரைமணி நேரம் கழித்து தூங்க வைத்துவிடுங்கள். றீ சாப்பிடுவதால் கிடைக்கிற உடலின் சக்தி சரியான முறையில் செலவிடப்படவேண்டும். இதற்கு குழந்தை தினமும் ஒரு மணி நேரமாவது ஓடி ஆடி விளையாட வேண்டும். நிறைய தூரம் நடக்க வேண்டும்.
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? P69என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 ஃபாஸ்ட் ஃபுட், பீட்ஸா, பர்கர், சிப்ஸ், சாக்லெட், ஐஸ்கிரீம் இதெல்லாம் முழுக்க முழுக்க தேவையில்லாத கொழுப்புகள். இவற்றை ‘எம்டீ கலோரிஸ்’ என்று சொல்வோம். இவற்றைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவித சக்தியும் கிடைப்ப தில்லை. அடிக்கடி எம்டீ கலோரிஸ் பொருட்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு 14 வயதுக்குள்ளாகவே மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் ஏற்படுவதற் கான வாய்ப்பு இருக்கிறது. குழந்தை விரும்பினால் எப்போதாவது வாங்கித் தரலாம்.
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 இரண்டு வயதுவரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ‘ஒபிஸிடி’ ஏற்படு வதற்கான வாய்ப்பு குறைவு. அதனால், குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுங்கள்.
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 புரோட்டீன் சக்திக்கு ஒரு பருப்பு வகை, கார்போஹைட்ரேட்டுக்கு அரிசி அல்லது கோதுமை, கொழுப்பு சக்திக்கு ஒரு ஸ்பூன் நெய், வைட்டமின்களும் தாது உப்புகளும் நிறையக் கிடைக்க காய்கறிகள், பழங்கள், இவற்றோடு 2 டம்ளர் பால், ஒரு கப் தயிர், ஒரு முட்டை.. இவை எல்லாம் தினமும் குழந்தையின் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வாரம் இருமுறை கீரை கொடுங்கள். இப்படி சரிவிகித உணவைச் சாப்பிடும் குழந்தைக்கு எடை அதிகரிக்காது.
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? Bullet4 வீட்டிலேயே முறுக்கு, தட்டை செய்து மாலை நேரங்களில் கொடுங்கள். நொறுக்குத் தீனிக்கு பதிலாக ரவை உப்புமா, அவல் உப்புமா, சுண்டல், பொட்டுக் கடலை, பேரீச்சை போன்றவற்றைக் கொடுங்கள். கேழ்வரகு கஞ்சி, தானியக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றைக் கொடுப்பதும் மிக மிக நல்லது.’’
என்ன சாப்பிடனும்? எப்படி சாப்பிடனும்? White_spacer
- நா.எழிலரசி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum