எடையைக் குறைக்க எளிய வழிகள்!
Thu Jul 09, 2015 7:36 am
எடையைக் குறைக்க எளிய வழிகள்!
சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் பவானியின் பரிந்துரைகள்: கூடுதலாக இருக்கும் உடல் எடையைக் குறைக்க சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி என்று இயற்கையான வழிகள் உள்ளன. முதலில் ஆயில் உணவுகளையும், சர்க்கரை கலந்த உணவுகளையும் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 4 டீஸ்பூன் ஆயில் கலந்த உணவுகள் (மாதத்துக்கு அதிகபட்சமாக அரை கிலோ) எடுத்துக்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை:
பேக்கரி உணவுகள், கூல் டிரிங்க்ஸ், ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
சேர்க்க வேண்டியவை:
கீரைகள், பச்சை காய்கறிகள், முழுதானியம் (ராகி, கேழ்வரகு, கோதுமை போன்றவை), முழு பயறு வகைகள்.
உடற்பயிற்சிகள்:
குறைந்தது ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடம் (வாரத்தில் குறைந்தது 5 நாட்கள்) நடைப்பயிற்சி அவசியம் (30 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து, நடுவில் சிறிது நேரம் எழுந்து நடத்தல், சின்ன சின்ன வேலைகளையும் நடந்து செய்து பழகுதல், குழந்தைகளை அருகில் உள்ள பள்ளியில் நடந்து சென்று விடுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், துணி துவைத்தல், குனிந்து பெருக்குதல் போன்றவை). #எடை #அவள்விகடன்
Re: எடையைக் குறைக்க எளிய வழிகள்!
Fri Jul 24, 2015 2:07 pm
நீங்கள் குண்டா ?? அப்ப இங்க வாங்க !!!
எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்!
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
5. இது தவிர பப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum