எடையைக் குறைக்க எளிய வழிகள்!
Tue Sep 22, 2015 10:44 pm
எடையைக் குறைக்க எளிய வழிகள்!
சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் பவானியின் பரிந்துரைகள்: கூடுதலாக இருக்கும் உடல் எடையைக் குறைக்க சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி என்று இயற்கையான வழிகள் உள்ளன. முதலில் ஆயில் உணவுகளையும், சர்க்கரை கலந்த உணவுகளையும் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 4 டீஸ்பூன் ஆயில் கலந்த உணவுகள் (மாதத்துக்கு அதிகபட்சமாக அரை கிலோ)எடுத்துக்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை:
பேக்கரி உணவுகள், கூல் டிரிங்க்ஸ், ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
சேர்க்க வேண்டியவை:
சேர்க்க வேண்டியவை:
கீரைகள், பச்சை காய்கறிகள், முழுதானியம் (ராகி, கேழ்வரகு, கோதுமை போன்றவை), முழு பயறு வகைகள்.
உடற்பயிற்சிகள்:
உடற்பயிற்சிகள்:
குறைந்தது ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடம் (வாரத்தில் குறைந்தது 5 நாட்கள்) நடைப்பயிற்சி அவசியம் (30 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து, நடுவில் சிறிது நேரம் எழுந்து நடத்தல், சின்ன சின்ன வேலைகளையும் நடந்து செய்து பழகுதல், குழந்தைகளை அருகில் உள்ள பள்ளியில் நடந்து சென்று விடுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், துணி துவைத்தல், குனிந்து பெருக்குதல் போன்றவை).
Permissions in this forum:
You cannot reply to topics in this forum