படிக்கட்டுகள் அமைக்கும்போது..
Thu Jul 02, 2015 3:07 am
படிக்கட்டுகள் அமைக்கும்போது..
Structural Specialist : Mr.A.P. Arul Manikkam
--------------------------------------------------------------------------------------------------------
ஒரு கட்டிடத்தை எடுத்தக்கொண்டால் அது தனிவீடு, ப்ளாட்டுகள், அலுவலகம், வணிக மையம் என எந்த வகையான கட்டிடம் ஆனாலும் அதில் படிக்கட்டுக்களை அமைத்தல் குறித்து மிகுதியாக திட்டமிடப்பட வேண்டும். அவற்றில் வணிக வளாகம் மற்றும் அபார்ட்மெண்ட் வகை கட்டிடங்கள் தவிர்த்து தனி வீட்டிற்கான படிக்கட்டுகளின் அமைப்பு என்பது முழுக்க முழுக்க வாடிக்கையாளரின் திருப்தியைச் சார்ந்தே அமைகிறது.
வீடுகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிகவளாகங்கள், நடைமேடைகள் போன்ற ஒவ்வொரு கட்டிட வகைகளுக்கேற்ப, பல வேறுபட்ட விதிகளைத் திருப்தி செய்யும் வகையில் படிக்கட்டுகள் திட்டமிடப்படுகின்றன.
இவை நிரந்தரமான படிக்கட்டுகள், தற்காலிகப் படிக்கட்டுகள், அவசர காலப் படிகட்டுகள் என்று பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. சில படிக்கட்டுகள் கட்டி டங்களின் வெளிப்புறச் சுவரை அடைக்கப்பட்ட அறைக்குள்ளும், சில படிக்கட்டுகள் கட்டிடங்களுக்குள் சுற்றிலும் திறப்புடனும் அமைக்கப்படுகின்றன. பொதுவாக, வீடுகளில் உள்ள படிக் கட்டுகளைச் சிறியவர், வாலிபர், முதியோர் எனப் பல வயதினரும் பயன்படுத்துவார்கள், ஆதலால் அனைத்து வயதினரும் சிரமமின்றிப் பயன்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட வேண்டும்.
I.வீடுகளில் அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கான சில பொதுவான தேவைகள் குறித்து முதலில் பார்க்கலாம்.
1) ஒவ்வொரு படியின் உயர்வு (Rise) 6 அங்குலத்திற்குக் குறையாமலும், 7 அங்குலத்திற்கு மிகாமலும், படிக்கிடை (Tread ) 10 அங்குலத்திற்குக் குறையாமலும், 16 அங்குலத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
2) படிக்கட்டின் அகலம் இருபுற கைப்பிடிச் சுவர்களுக்கு நடுவே 3 அடிக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
3) படிக்கட்டின் அகலத்திற்குக் குறையாமல் கிடைத்தரை ((Landing) யின் அகலம் அமைய வேண்டும்.
4) பொதுவாக மனிதர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வீட்டு உபயோகப் பொருட்களும் சிரமமின்றி எடுத்துக்
செல்லப்படும் வகையில் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
5) இரு மாடித் தளங்களுக்கிடையே ஒரு பாய்ச்சலில் தொடர்ச்சியாக படிகள்அமைக்கப்படக் கூடாது. ஒரு பாய்ச்சலில் (Flight) 12 படிகளுக்கு மேல் இருக்கக் கூடாது. ஆகவே, அடுத்தடுத்த தளங்களுக்கிடையே ஒரு கிடைத்தரையுடன் இரு பாய்ச்சல்கள் அமைப்பது சிறந்தது.
6) கைப்பிடிச் சுவர்கள் அல்லது கம்பிகள் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். படிக்கட்டின் அகலம் 6 1/2 அடிக்கு மேல் அதிகரிக்கும் பட்சத்தில் அது இரண்டாக பிரிக்கப்பட்டு நடுவில் ஒரு கைப்பிடிக் கம்பி அமைக்கப்பட வேண்டும்.
7) படிக்கட்டு அமையுமிடம் கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எளிதில் அடையக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும்.
பொதுவாக பல அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டிடங்களில் ஒவ்வொரு தளமும் வெவ்வேறு குடும்பங்களால் பயன்படுத்தப் படுகின்றன. ஒரே தளத்திலேயே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்புகள் அமைகின்றன. ஆகவே அத்தகைய பலமாடிக் கட்டிடங்களில் படிக்கட்டுகள் வீட்டின் பிற அறைகளுடன் இணைக்கப் படாமல், அனைவரும் பொதுவாகப் பயன்படுத்தும் வண்ணமும், ஒவ்வொரு குடியிருப்பிற்கும் தனித்தனியே நுழைவு வாயில் அமையும் வண்ணமும் வடிவமைக்கப்படுகின்றன. இத்தகைய படிக்கட்டுகளில் சில அசாதாரண சந்தர்ப்பங்களில் (தீ விபத்து, நில அதிர்வு) நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே கட்டிடத்திலுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப போதிய அகலத்திலும் ஒன்றிற்கு மேலான எண்ணிக்கையிலும் படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன.
II. வீட்டினுள் அமையும் படிக்கட்டுகளைக் குறித்து அடுத்து பார்க்கலாம்.
ஒரு கட்டிடத்தின் அடுத்தடுத்த தளங்களை ஒரே குடும்பத்தினர் பயன்படுத்தும்போது, தளங்களை இணைக்கும் பொருட்டு வீட்டினுள்ளேயே படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கையில் கவனிக்கப்படவேண்டியவை.
1) இப்படிக்கட்டுகள், பொதுவான படிக்கட்டுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள தேவைகளை முழுமையாய் பூர்த்தி செய்ய வேண்டும்.
2) மொட்டை மாடிக்கதவுகள் வழியாக திருடர்கள் வீட்டினுள் நுழைந்துவிடாதபடி பாதுகாப்புடன் அமைக்கப்பட வேண்டும். படிக்கட்டுக்காக பாளங்களில் ஏற்படுத்தப்படும் திறப்பு மழைநீர் புகாதபடி மூடப்பட வேண்டும்.
3) சிறு பிள்ளைகள் தவறிவிழாதவாறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
4) கீழ்த்தளத்திலுள்ள பிற அறைகளின் பயன்பாட்டிற்குகுந்தகம் விளைவிக்காதபடி படிக்கட்டிற்கான இடம் தெரிவு செய்யபட்ட வேண்டும்.
5) மேல்தளத்திற்கு ஏறியவுடன் அங்குள்ள அனைத்து அறைகளுக்கும் இலகுவில் சென்றடையும் வகையில் படிக்கட்டின் பாய்ச்சல்கள் அமைக்கப்பட வேண்டும்.
6) பொதுவாக வீட்டினுள் படிக்கட்டு அமைக்கப்படும் அறை இரட்டை மாடி உயர அறையாக இருத்தல் நல்லது.
7) எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய படிக்கட்டுகள் வரவேற்பு அறையில் அமைக்கப்படுவதால், வீட்டிற்கு வரும் விருந்தினர் , நண்பர்கள் அனைவரும் பார்க்கக் கூடியதாயிருக்கும். ஆகவே, சிறந்த பார்வைக்காக அழகிய கைப்பிடிகளுடன் அமைக்கப்பட வேண்டும்.
மொத்தத்தில் படிக்கட்டுகள் அமைக்கையில் அதன் பயன் பாட்டுத் தேவைகள் மற்றும் உபயோகிப்போரின் பாதுகாப்புத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் அவை திட்டமிட்டு வடிவமைக்கப்பட வேண்டும்.
கண்கவரும் அமைப்பு, பயன்படுத்துவதற்கு இலகுவான வசதி, 100% இடத்தை உபயோகித்து வடிவமைத்தல் ஆகிய இம்மூன்றும் ஒரு தேர்ந்த படிகட்டு வடிவமைப்பிற்கான ஆதார காரணிகளாக நிபுணர்களால் கருதப்படுகிறது. யாவற்றுக்கும் மேலாக மாற்றுத் திறனாளிகள் கூட மிக எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் படிக்கட்டுகளின் வடிவமைப்பு இருக்க வேண்டும்.
- From Builders line Magazine

Permissions in this forum:
You cannot reply to topics in this forum