ஊரிம்/தும்மிம் என்பது...
Wed Jul 01, 2015 5:34 pm
Bro. Augustin JebaKumar
ஊரிம்/தும்மிம் என்பது...
பழைய ஏற்பாட்டுக்காலத்தி்ல் பிரதான ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லும்போது அணியும் நியாயவிதி மார்பகத்தில் ஊரீம் தும்மீம் என்பவைகள் இருந்தன. இச்சொற்களின் சரியான பொருள் “ஜோதிகள்” , ”பரிபூரணங்கள்” என்று பொருள்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், இது எப்பொருளால் செய்யப்பட்டவை என்பதும் தெரியாது. எந்த வடிவில் செய்யப்பட்டது என்பதும் தெரியாது. ஆனால், இவை ஆசாரியனுடைய ஏபோத்துடன் இணைக்கப்பட்டிருந்தன எனக் காண்கிறோம்.
இதைப்பற்றி யாத்திராகமம் 28:30 நாம் வாசிக்கலாம். ஊரீம் தும்மீம் என்பவைகள் தேவனுடைய சித்தத்தை அறிந்து சொள்வதற்காக உபயோகிக்கப்படட புனித பொருள்களாகும்.மனிதனின் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிப்பது இவற்றின் பணியாகும். 1 சாமுவேல்23:9-12, 28:6, 30:7-8, 14:36-37 போன்ற வசனங்களில் ஊரீம் தும்மீம் என்பவை உபயோகி்ப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
அக்காலத்தில் தேவனுடைய சித்தத்தை அறிய விரும்புபவர்களுக்கு தேவன் இவற்றின் மூலம் தனது சிதததத்தை அறிவித்தார். எனினும், தாவீதினுடைய காலத்திற்குப் பிறகு இவை உபயோகிக்கப்பட்டது பற்றி வேதாகமத்தில் எவ்வித குறிப்பும் இல்லை. இஸ்ரவேலில் தீர்க்கதரிசிகளின் பணி வளர்சியுற்ற காலத்தில் இவற்றின் உபயோகம் இல்லாமல் போய் விட்டது.
இச்சன்னதக் கட்டைகள் இக்கட்டான வேளைகளில் தேவனுடைய சித்தத்தை அறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டன என அறிகிறோம்.
1. ஆகான் விஷயத்தில் - (யோசுவா 7 அதிகாரம்)
2. சவுல் - யோனத்தான் விஷயத்தில் - (1சாமுவேல் 14 . 41,42)
3. தாவீதின் காலத்தில் - (1சாமுவேல் 23. 9-12., 30 . 7,
ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இவை பயன்படுத்தப்பட்ட விதம் நமக்குத் தெரியாது.
வேதாகமம் தரும் தகவல்களை வைத்து ஆராய்கையில், இவற்றின் மூலமாக ”ஆம்” ”இல்லை” என்ற விடை மட்டும் தான் கிடைத்தது என்று நாம் அறியலாம்.
இப்படியாக, ஆகான் விஷயத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரை நான்கு முறை இக்கட்டைகள் குலுக்கப்பட்டன என அறியலாம்.
அப்படியே சவுல், யோனத்தான் விஷயத்திலும் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டன. நன்றி.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum