லேகியோன் என்பது பிசாசா...?
Sat Sep 13, 2014 6:25 am
'லேகியோன்' என்ற வார்த்தை வேதாகமத்தில் சில இடங்களில் வருவதைப் பார்த்திருப்போம்.
லூக்கா 8:30ல் கூட இயேசு ஒருவனுக்குள் புகுந்திருக்கும் பிசாசை பார்த்து, 'உன் பெயர் என்ன? என்றுக் கேட்பதையும், அதற்கு பிசாசு, அநேகராயிருக்கிறபடியால் 'தன் பெயர் லேகியோன்' என்று சொல்வதையும் பார்த்திருப்போம்.
'லேகியோன்' வேதகமத்தின் மற்றொரு இடத்தில்.
கெத்செமனே தோட்டம்:
இயேசுவை பிடிக்க ஒருவன் அவர்மேல் கைப்போட்டான். உடனே இயேசுவின் சீடர்களில் ஒருவன், அவர்மேல் கைப்போட்டவனின் காதை வெட்டினான்.
அதற்கு இயேசு, நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? என்று கேட்பதை மத்தேயு 26:53ல் பார்க்கலாம்.
*முதல் பகுதியில், இயேசு 'லேகியோன்' என்று சொன்ன பிசாசை துரத்தினர். பிற்பாடு தான் கூப்பிட்டால் 'லேகியோன்கள்' வருமென்று இயேசு சொல்கிறாரே..? என்ற குழப்பத்துடன் ஒரு கேள்வி எழலாம்.
உண்மையாகவே இயேசு 'பிசாசைத் தான் கூப்பிடுவேன்' என்பதாக சொன்னாரா..?
(தொடர்ந்து வாசியுங்கள்)
'லேகியோன்' என்றால் என்ன..?
ரோம படையில் 6000 போர் வீரர்களை கொண்ட பெரிய படை பிரிவுக்குத் தான் லேகியோன் என்று பெயர்.
மற்றப்படி அது பிசாசு இல்லை.
இங்கே அவர் எத்தனை லேகியோன் தூதர்கள் வருவாரென்று சொல்கிறார்..?
12 லேகியோனுக்கும்மேல்.
1 லேகியோன் என்பது 6000 வீரர்கள்.
அப்படியென்றால் 12 லேகியோன்..?
12 * 6000 = 72000 வீரர்கள்.
72000 த்துக்கும் அதிகமான தூதர்களை வரவைக்க என்னால் முடியும் என இயேசு சொல்லுகிறார்.
ஆனாலும் அவர் அதை செய்யவில்லை.
அவர் ஒருவரும் செய்யக்கூடாத, செய்யமுடியாத அற்புதங்களை செய்திருந்தும், தெய்வத்துவம் நிறைந்தவராக இருந்தும் இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார். கட்டாயத்தினால் அல்ல, நம்மேல் வைத்த அன்பினாலே அவர் அதை ஏற்றுக் கொண்டார். பரம பிதா நினைத்திருந்தால் தன் ஒரே பேறான குமாரனை சிலுவையில் அறைய விடாமல் தடுத்திருக்க முடியும். இயேசு நினைத்திருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் சிலுவையில் இருந்து மறுரூபமாகி அனைவரையும் அழித்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
காரணம் நம்மை நினைத்ததினால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார். கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக தான் சிந்தினார். நீங்களும் நானும் பாவி என்றென்னப்படக் கூடாது என்பதற்காக, பரிசுத்தமான அவர் பாவியாக சிலுவையில் தொங்கினார்.
சிறு நாய்க்குட்டி கூட தன்னை தடவிக் கொடுப்பவர்க்கு நன்றி காட்டும் வகையில் தன் வாலை அசைக்கும்.
நம் நன்றியை இயேசுவுக்கு எவ்வாறு காண்பிக்கப் போகிறோம்..?
பேச்சில் மட்டுமா..? அல்லது செயலிலா..?
சிந்திப்போம்.
கிறஸ்துவின் பணியில்,
{உண்மை கிறிஸ்தவம்}

Permissions in this forum:
You cannot reply to topics in this forum