'இந்தியாவின் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகிறது!'
Mon Jun 22, 2015 5:25 pm
உலகத்தின் நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து கொண்டே வருவதாக நாஸாவின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் சிந்து சமவெளி நீர்ப்பரப்பில் உள்ள நிலத்தடி நீர்தான் மிக வேகமாக குறைந்து வருவதில் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருப்பது 60 மில்லியன் மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் அரேபியன் நிலத்தடி நீர்பரப்பு.
பிரச்னை என்னவென்றால் நிலத்தடி நீர் குறையும் வேகம், அது மீண்டும் நிரம்பும் வேகத்தைவிட அதிகமாக இருக்கிறதாம். 2003 முதல் 2013 வரை உலகின் மிகப்பெரிய 37 நிலத்தடி நீர்ப்பரப்புகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இதில் 13 நீர்ப்பரப்புகள் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பவை. இதில் 2-வது இடத்தில்தான் இந்தியாவின் சிந்து நீர்பரப்பு இருக்கிறது.
நாஸா-வின் GRACE (Gravity Recovery and Climate Experiment) சேட்டிலைட் மூலம் முதல் முறையாக உலகின் நிலத்தடி நீர்ப்பரப்பு குறித்த இந்த ஆராய்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. நீர் புவியில் இடம் பெயர்ந்துகொண்டே இருக்கும் என்பதால், அது பூமியின் ஈர்ப்பு விசையைப் பாதிக்கிறது. இதனால் விண்வெளியில் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் GRACE சேட்டிலைட் மீதான ஈர்ப்பு விசை மாறிக்கொண்டே இருக்கும். எனவே, இந்த சேட்டிலைட்டின் கிராவிட்டேஷனல் ஆர்பிட்டை 10 வருடங்களாக சோதித்தன் மூலம் புவியின் நீர்ப்பரப்பைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர்.
ஆனால், கச்சிதமாக எவ்வளவு நிலத்தடி நீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. உதாரணத்துக்கு மேலே உள்ள படத்தில் 2-வதாக இருக்கும் நார்த்வெஸ்ட் சஹாரா நிலத்தடி நீர்ப்பரப்பு முழுவதும் தீருவதற்கு 10 ஆண்டுகள் முதல் 21,000 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறது ஆய்வு. ஆனால், எவ்வளவு நீர் மீதம் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க நிறைய பாறை அடுக்குகளை ட்ரில் செய்ய வேண்டும். இது மிக மிகக் கடினமான வேலை. ஆனால், செய்ய முடியாதது இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலத்தடி நீர்ப்பரப்பு முழுவதும் நிரம்ப ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகுமாம். இப்போது உலகம் முழுக்க நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் நிரம்பும் வேகத்தைவிட, பயன்படுத்தப்படும் வேகம் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்கிறார்கள்.
நீர்ப்பாசனம் மூலம் கொஞ்சம் நீர் மீண்டும் நிலத்தடி நீர்ப்பரப்புக்கு சென்றாலும், அவை பெரும்பாலும் புவியின் வெப்பத்தில் ஆவியாகி விடுகின்றன அல்லது வீணாக கடலில் சென்று கலந்து விடுகின்றன. இதனால், கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருவதாக 2012-ல் செய்யப்பட்ட ஒரு ஜப்பானிய ஆய்வு தெரிவிக்கிறது.
நாஸாவில் பணிபுரியும் உலக புகழ்பெற்ற நீர் ஆராய்ச்சியாளர் Jay Famiglietti, நிலத்தடி நீர் குறைந்துவரும் பிரச்னையுடன் புவி வெப்பமடைதலும், காலநிலை மாற்றமும் சேருவது இன்னும் சிக்கல் என்கிறார். இதனால் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பகுதிகள் மிக வேகமாக வறட்சியடையும் எனவும், அதனால் இந்தப் பகுதிகளில் இருக்கும் மக்கள் இன்னும் அதிக நிலத்தடி நீரை உறிஞ்ச, அவை மீண்டும் வெப்பத்தினால் ஆவியாகி செல்லுமே தவிர, நிலத்தடி நீரை மீண்டும் நிரப்பப்போவதில்லை என்கிறார். இப்போது இதனுடன் மக்கள் தொகை பிரச்னையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இது எங்கு போய் முடியும் என்று உணரமுடிகிறது அல்லவா?!
''நிலத்தடி நீரை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்று இனி தீவிரமாகப் பேசவேண்டும். ஏனென்றால், நிலத்தடி நீர் தீரப்போகிறது'' என்கிறார் Jay Famiglietti.
ர. ராஜா ராமமூர்த்தி
(மேப்: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் நிரம்புவதைவிட அதிகமாக உறிஞ்சப்படுகிறது. நீல வண்ணத்தில் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மீண்டும் நிரம்பியுள்ளது - ஆராய்ச்சி செய்யப்பட்ட காலம் 2003 முதல் 2013 வரை)

Re: 'இந்தியாவின் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகிறது!'
Tue Jun 23, 2015 9:27 am
'இந்தியாவின் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகிறது!'
உலகத்தின் நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து கொண்டே வருவதாக நாஸாவின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.நாஸாவில் பணிபுரியும் உலக புகழ்பெற்ற நீர் ஆராய்ச்சியாளர் Jay Famiglietti, நிலத்தடி நீர் குறைந்துவரும் பிரச்னையுடன் புவி வெப்பமடைதலும், காலநிலை மாற்றமும் சேருவது இன்னும் சிக்கல் என்கிறார். இதனால் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பகுதிகள் மிக வேகமாக வறட்சியடையும் எனவும், அதனால் இந்தப் பகுதிகளில் இருக்கும் மக்கள் இன்னும் அதிக நிலத்தடி நீரை உறிஞ்ச, அவை மீண்டும் வெப்பத்தினால் ஆவியாகி செல்லுமே தவிர, நிலத்தடி நீரை மீண்டும் நிரப்பப்போவதில்லை என்கிறார்.

Tue Jun 23, 2015 9:28 am
தவிக்க விடாதா தாமிரபரணி..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum