'பத்து' வம்! - தத்துவம்
Mon Jun 22, 2015 11:58 am
'பத்து' வம்!
* முடிவு *'நான் எடுத்தால் அந்த முடிவு சரியாகத்தான் இருக்கும்' என்று நினைத்தீர்களானால், நிச்சயம் அது சரியான முடிவு இல்லை!
* இலக்கு *
எங்கே நிற்கிறீர்கள் என்பதை விட, எங்கே போகிறீர்கள் என்பது முக்கியம்.
* சந்தோஷத் திருடர்கள்! *
நேற்றைப் பற்றிய வருத்தம், நாளை பற்றிய கவலை - இரண்டும் நம் சந்தோஷத்தைப் பறிக்கும் திருடர்கள்.
* நமக்குள்ளே... *
நமக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியம் அல்ல; நமக்குள் என்ன நடக்கிறது என்பதே முக்கியம்.
* பெரிய தோல்வி *
எதையாவது செய்தால் தோல்வி வருகிறதே என்று தயங்காதீர்கள். எதையுமே செய்யாமல் இருப்பதுதான் மகா தோல்வி!
* உங்களுக்குத் தெரியுமா? *
சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். காரணம், தாங்கள் திறமைசாலிகள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
* சரி... சரி... சரித்திரம்! *
வரலாறு என்பது, வெற்றியாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பே!
*புத்திமதிப்பு!*
நல்ல புத்திமதிகள் அதிகம் வைத்திருப்பவர் பெரும்பாலும் யாருக்கும் அவற்றை வழங்குவது இல்லை.
* ஆமாம்! *
வசீகரம் - தெளிவில்லாத கேள்விக்கும் 'ஆமாம்' என்று பதில் வாங்கிவிடும்!
* நெருப்பு! *
முள்ளை முள்ளால் எடுக்கலாம்; ஆனால், நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது!
ஷெல்லி' ராணி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum