ஜெயிலா....????? இல்லை...பள்ளிக்கூடமா...?????
Sat Jun 20, 2015 8:09 am
எனக்குத் தெரிந்த சில பிள்ளைகள், 9,10,11,12 ம்
வகுப்புக்களில் படிக்கின்றனர். சில பள்ளிகளில், காலையில்
6:30 மணிக்கு, பிள்ளையை உள்ளே தள்ள வேண்டும்.
இடையில், ஆயா அக்காவிடம், சாப்பாடு கொண்டு கொடுத்து விட்டு...மாலையில் 6:30 மணிக்குத் திரும்ப
வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அன்பானவர்களே ! உங்கள் குழந்தை ஒரு மெஷின்
அல்ல.. மெஷின்களைக் கூட சூடாகி விடும்....ஆஃப் பண்ணிப் போடு என்போம்...!!!
இந்தக் குழந்தைகள்
என்ன பாவம் செய்தார்கள்? எத்தனையோ ஆயிரம் பேர்
ஒரு குழந்தைக்காக ஏங்கும் போது உங்கள் குழந்தைக்கு
ஏன் இத்தனை பெரிய தண்டனை...???
அந்தக் காலத்தில், வீட்டில் 10 குழந்தைகள் இருந்தாலும்...செல்ல அப்பா ( செல்லப்பா), பொன்னு அப்பா, செல்வ ராணி, பொன்னம்மா என்றெல்லாம் பெயர்
வைத்து, பிள்ளைகளைப் பெருஞ்செல்வமாக மதித்தார்கள்.
ஆனால் தற்காலத்தில்...ஏய் ! எருமை மாடு....படுத்துத்
தூங்கிறீயே ? மணி 6 ஆகுதுடா...பள்ளிக்கூடத்திலே
கதவைப் பூட்டிடுவாங்க...என்ற வசை பாடல் தான்...
டாக்டராகணும்னா...ஓரு கோடி கொடுக்கணும்டா...
இங்கே யார்கிட்டே இருக்கு...ஒழுங்காப் போய்ப் படிடா...
என்ற வசை பாடல்...குழந்தைக்குப் படிப்பின் மீதும், பள்ளியின் மீதும்...ஒரு வெறுப்பு...
அன்பானவர்களே! சிந்திப்போம்..!!!! இந்த முறை ( system) மிகப் பெரிய தவறு...இடைவேளை, வாரவிடுமுறை, picnic, சுற்றுலா,இவை குழந்தைகளுக்குக்
கட்டாயம் வேண்டும்.
எனக்குத் தெரிந்த 11 ம் வகுப்பு மாணவனுக்கு, முதலில் கொடுத்தது...12 ம் வகுப்பு புத்தகங்கள். பாவம்....!!!
நூலகம், பத்திரிகைகள், பொது அறிவுப்புத்தகங்கள் படித்தல், அகராதி...பற்றித் தெரியவே தெரியாது...!!!
நாம் குழந்தைகளை, அழஅழ..இப்படிப்பட்ட ஜெயில்
பள்ளிகளில் அடைத்தால்...நம்மையும் ஒருநாள் முதியோர்
இல்லத்தில் அடைத்து விடுவார்கள் என்பதில் ஐயமேயில்லை...!!!
12 ம் வகுப்பு வரையிலும் தான் பிள்ளைகள் நம்முடன்
இருப்பர். அதன் பின் மேற்படிப்பு, வேலை, திருமணம் என்று
தூர இடங்களுக்குப் போய்விடுவர். எனவே இந்த அருமையான காலத்தில்,பிள்ளையை ஜெயில் பள்ளிக்கு
அனுப்பாதீர்கள் .....!!!
சிந்திப்பீர்...!!! பள்ளி மேலாளர்களிடம் இவற்றை எடுத்துச் சொல்லுங்கள்.....!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum