எச்சரிக்கை - எச்சரிப்பு
Mon Jun 15, 2015 3:36 pm
”நீ செய்வது தவறு” என்று சொல்வதற்கும் ”இவன் பாதை சரியில்லை” என்று சொல்வதற்குப் பெயர்தான் ”எச்சரிக்கை”!
அப்படிச்சொன்னால் அவன் கோபித்துக் கொள்வாவேனே என்று ஒதுங்கிக் கொள்வதற்குப் பெயர் “சுயநலம்”!
ஆராயாமல் எதிர்ப்பது “மூர்க்கத்தனம்”!
ஆதாயம் கெட்டுவிடும் என்று அவனை ஆதரிப்பது “கயமைத்தனம்”
"அவனிடமே சொல் என்னிடம் சொல்லாதே” என்பது “அலட்சியம்”.
அவனை எதிர்க்க நீயார் என்று கேட்பது “அயோக்கியத்தனம்”
நமக்கெற்குப் பொல்லாப்பு என்று ஒதுங்குவது ”கோழைத்தனம்”
அவன் செய்வதும் சொல்வதும் தவறு என்றுகூடத் தெரியாமல் இருப்பது “மூடத்தனம்”!
ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்வது “புத்திசாலித்தனம்”!
சகோ.பென்னி

Re: எச்சரிக்கை - எச்சரிப்பு
Mon Jun 15, 2015 3:38 pm
கார்களில் இருக்கும் ஜிபிஎஸ்(GPS) பற்றி அறிந்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்ல முயன்றால் உடனடியாகப் பாதையைத் தவறு என்றும், சரியான அடுத்த திருப்பம் எது என்றும் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே வரும். அந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தால் மட்டுமே சரியான பாதையைத் தெரிந்து செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியும். ஜிபிஎஸ் சொல்லும் வார்த்தைகளைக் காரில் அதிக சத்தத்துடன் வேறு பாடல் கேட்டுக் கொண்டு சென்றாலோ, இல்லை வெளிப்புறச் சத்தம் அதிகமாக இருந்தாலோ கேட்க இயலாது. அவ்வாறு கேட்க வேண்டியதைக் கவனிக்காமல் தேவையற்ற காரியங்களில் கவனம் சிதறிச் சென்றால் செல்லும் இடத்தை அடையச் சிரமப்பட வேண்டும், அல்லது, சென்று சேரவே முடியாமல், வழி தெரியாமல் செல்ல வேண்டிய நேரத்தில் செல்லமுடியாமலேயே போகலாம்.
தேவ வார்த்தைக்கு கவனிப்பதும் அசட்டை செய்வதும் கூட இப்படித்தான். அந்த உன்னத ஜீவ வார்த்தைகளைக் கேட்காமல், அல்லது கேட்டாலும் கீழ்ப்படியாமல், உலகம் உண்டாக்கும் சத்தத்திற்குள் மூழ்கிவிட்டாலும், சுய விருப்பத்தின்படியும் செல்ல நினைப்போருக்கு சென்று சேரும் இடம் விரும்பத்தகாததாகவே அமையும்!
”நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். ஏசாயா 30: 21.”
வசனத்தைக் கவனித்து, ஆவியானவரின் எச்சரிப்பின் குரலைக் கேட்டுக் கீழ்ப்படிந்தால் மட்டுமே, நித்திய ஜீவனுக்கல்லாத எந்தக் காரியத்தையும், அசுத்தங்களையும் விட்டு விலக முடியும். நாம் செல்லவேண்டிய பாதையை விட்டு விலகி செல்லச் வழிவகுக்கும் எதையும் ’சீ ’என விட்டு விலக அவரது வார்த்தை நமக்குள் இருக்க வேண்டும்.
”உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய். ஏசாயா 30: 22.”
இருதயத்தின் காதுகளைத் திறந்து வைத்திருப்போம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum