சவுலும் கிறிஸ்தவ வாழ்க்கையும்
Mon Jun 15, 2015 3:27 pm
சவுல் இராஜாவின் வாழ்க்கையை கவனித்துப்பார்த்தால் இன்று பெரும்பாலன கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்ததுபோல் இருப்பதை உணரலாம். சவுல் தேவனுக்கு பலிபீடம் கட்டினார், ஜெபிக்கவும், ஒருமுறை தீர்க்கதரிசனமும் உரைக்கவும்கூடச் செய்தார். ஆனால், துணிகரமாகப் பொய்சொல்லுதல், குறிகேட்டல், வஞ்சம் வைத்தல், பொறாமை, கொலைவெறி, வீணான சிந்தை, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமை என்று எல்லாமே அவரிடம் குடிகொண்டிருந்தன.
இவையெல்லாவற்றிக்கும் மேலாக தேவன் தன்னுடன் இருக்கிறார் என்ற குருட்டு நம்பிக்கையில் தன்னைத்தான் ஏமாற்றிக் கொண்டிருந்தார். கடவளால் அபிஷேகிக்கப்படவராக இருந்தாலும் முரண்பாடுக்கும், துணிகரத்திற்கும் அவரிடம் பஞ்சமே இல்லை. அவரது அபிஷேகத்தை அவரே கெடுத்துப் போட்டார்.
இன்று அபிஷேகம் பெற்றவர்கள் என்று (தாங்களாகவே) கருதிக்கொள்கிறவர்களின் நிலைமையும் இப்படித்தான் சாட்சியற்றுக் காணப்படுகிறது. சபைகளில் புரட்டு உபதேசம், துணிகரமாக காணிக்கையில் கைவைத்தல், சக உழியக்காரரிடம் அல்லது சக விசுவாசியின்மேல் பொறாமை, எரிச்சல், மூர்க்கம், குறிகேட்டல் மற்றும் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் குறி சொல்லுதல் என்று எதற்குத்தான் பஞ்சமில்லை. இவர்கள், சவுலைபோல் பலிபீடம் கட்டுவதிலும், ஜெபிப்பதிலும், தீர்க்கதரிசனம் சொல்லுவதிலும் குறையே வைப்பதில்லை.
இதைச் சொன்னால் தேவ அபிஷேகம் பெற்றவர்களை தூஷிக்கிறாயா என்று கடுமையாகச் சாடுபவர்கள், சவுல் தற்கொலை செய்து பிசாசின் மடியில் வீழ்ந்த பரிதாப முடிவை நினைத்துக் கொள்வது நல்லது. இப்பொழுது சொல்லுங்கள். சவுலின் வரலாறு எதற்காக வேதத்தில் இடம் பெற்றுள்ளது? கதையென்று வாசித்துவிட்டுக் கடந்து செல்லவா? இல்லை, எச்சரிக்கவா? எச்சரிக்கை தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு வேதாகமம் ஒரு கதைப்புத்தகம் மட்டுமே!!!
கீழ்க்கண்ட வசனங்களை ஒருதடவை வாசித்துப் பாருங்கள்:
I சாமுவேல் 13:9 அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.
I சாமுவேல் 14:35 பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.
I சாமுவேல் 14:37 அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.
I சாமுவேல் 14:41 அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்;
I சாமுவேல் 15:24 அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
I சாமுவேல் 18:28 கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்;
I சாமுவேல் 19:6 சவுல் யோனத்தானுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
I சாமுவேல் 19:10 அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்;
I சாமுவேல் 19:11 தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்;
I சாமுவேல் 28:10 அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல்ஆணையிட்டான்.
I சாமுவேல் 28:8 அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
சகோ.பென்னி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum