எந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு : ஜெயப்பிரகாஷ் காந்தி
Tue May 19, 2015 7:24 pm
எந்த படிப்பைத் தேர்வு செய்யலாம், எதற்கு நல்ல வேலை வாய்ப்பு என்பது குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கினார்.
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்பில் ஐ.டி., துறைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஐ.டி., படித்தவர்களுக்கு எங்கும், எப்போதும் வேலை உள்ளது. மற்ற துறைகளில் எல்லாம் நூற்றுக்கணக்கானவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என்றால், ஐ.டி., துறையில் மட்டும் ஆயிரக்கணக்கில் பணி அமர்த்தப்படுகின்றனர். ஐ.டி., துறையில் தேக்கம் ஏற்பட்ட போது கூட, பணியிடங்கள் சற்று குறைந்ததே தவிர முற்றிலும் முடங்கி விடவில்லை.
ஐ.டி. துறைக்கு எப்போதும் மதிப்பு குறையாது. ஐ.டி.யை தேர்வு செய்து படித்தால் நல்லது. அது கிடைக்கவில்லை என்றால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம். இவை இரண்டிற்கும் பிறகு கம்யூனிகேஷன் துறையை தேர்ந்தெடுத்து படித்தால் நல்லது. இதற்கு பிறகு, சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகள் சிறந்தது. இன்ஜினியரிங் படிப்பில் மற்ற துறைகளில் உங்களுக்கு மிகவும் ஆர்வம் இருந்தால், அவற்றை தேர்வு செய்யலாம் தப்பில்லை. பிளஸ் 2வில் எது படித்தாலும் அத்துடன் கணிதப் பாடம் இருந்தால் நல்லது. அதுபோல் மருத்துவத் துறையிலும், கட்-ஆப்பில் அதிக மதிப்பெண் கிடைத்தால், அதை தேர்வு செய்யலாம்.
அது இயலாதவர்கள், கால்நடை மருத்துவத் துறை போன்ற பிற துறைகளைத் தேர்வு செய்யலாம். இப்போது புதிதாக வந்துள்ள, பார்மசி டாக்டர் என்ற படிப்பை தேர்வு செய்யலாம். மருத்துவத் துறையில் உள்ள துணை படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். மற்றவர்கள் சொல்கிறார்களே என்று ஆராய்ச்சி படிப்புகளை தேர்வு செய்து, பின் சிரமப்படாதீர்கள். உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுப்பதை விட, கிடைத்ததை பிடித்தமானதாக்கிக் கொள்ளுங்கள்.
ஐ.டி., துறைக்கு அடுத்தது, பேங்கிங், இன்சூரன்ஸ், பைனான்ஸ் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளை படித்தாலும் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. எது படித்தாலும் ஆங்கில அறிவு முக்கியமானது. எனவே, ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பின் தற்போது, ஜியாலஜி படிப்பிற்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. பலரும் கடந்த காலத்தை கணக்கிட்டு படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் தான், அவர்கள் படிப்பிற்கும், அவர்கள் பணிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. அதை விடுத்து எதிர்காலத்தில், எந்த படிப்பு படித்தால் நல்ல வேலை கிடைக்குமோ அதை கணக்கிட்டு உங்கள் படிப்பை தேர்ந்தெடுங்கள். அப்போது தான் வெற்றியாளர்களாக நம்மால் திகழ முடியும்.
நாம் அனைவரும் அப்துல் கலாம் ஆகிவிட முடியாது. இருந்தாலும், நமக்கு நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அவசியம். அவர் சொன்னது போல் கனவு காணுங்கள். அதை தினமும் எழுதி வைத்து பாருங்கள். உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். இவ்வாறு ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum