வாட்ஸப்பினால் - சிறை வரை செல்லும் அபாயம்
Tue May 05, 2015 6:31 pm
Ravi Nag
Learn Something New - 30 How to avoid WhatsApp hacking and other danger in your life - இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் - 30 - வாட்ஸப்பினால் உங்களுக்கு உண்டாகும் சோதனைகள் சிறை வரை செல்லும் அபாயம்.
வாட்ஸப் நமக்கு நாமே சீவி வைத்து கொள்ளும் ஆப்பு என்பதே சரியான வார்த்த்தை என்ன கவனமாய் இருந்தாலும் ஒரு நாள் அல்ல் ஒரு நாள் அதில் வழுக்கி விழும் அபாயம் இருக்கிறது என்ப்து ஆணித்தரமான உண்மை. அதுக்காக நீங்க ஒழுக்கம் இல்லாதவர் என்பதல்ல - எவ்வகை ஒழுக்கம் இருப்பினும் சக நண்பர்களால் சந்தி சிரிப்பதை தவிர்க்க இயலாது.
சிலருக்கு சிற்றின்பம் பிடிக்கும் தப்பில்லை அது தனிப்பட்ட பிரச்சினையாகும். அதற்க்காக அவர் இன்னொருவருடன் களமாடின விஷயமாகட்டும் கில்மா வீடியோ பார்த்த வீடியோ ஆகட்டும் எல்லாவற்றிலும் ரிஸ்க் அதிகம் இருக்கும் ஒரு நச்சு ஆலை இந்த வாட்ஸப். எனக்கெல்லாம் பிராபளத்தை பஸ்பம் செய்ய தெரியும் விலகு விலகு காத்து வரட்டும்னு இல்லாத ஷோல்டரை உயர்த்தும் நண்பர்களே நீங்க எப்படி வேனும்னாலும் போங்க உங்களை நம்பி சாட் செய்தவரும் சில புகைப்படம் மற்றும் வீடியோவை அனுப்பியவரையும் நீங்கள் ரிஸ்க்கில் மாட்டி விடுகிறீர்கள் என்பது தான் முக்கியமான உண்மை. இந்த வகை முன்னேற்பபாடுகள் செய்தால் ஓரளவுக்கு நீங்க தப்பிக்கலாம் - கண்டிப்பா இந்த வாட்ஸப் மூலம் பல குடும்பங்கள் / பல உறவுகள் / பலர் வாழ்க்கை சீர்ழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
1. வாட்ஸப் டேட்டா ஆட்டோ பேக் அப் ஆப்ஷனை உடனே ரிமூவ் செய்யவும். - அது எப்படி ரிஸ்க் என கேட்பவர்கள் நீங்கள் சேட் அல்லது ஏதாவது ஒரு தொடர்பு வைத்திருந்தாலும் அந்த சாட் முடிஞ்ச உடனே நீங்க அழிச்சிட்டா உடனே அங்கும் அழியும் என நினைக்க வேண்டாம். அங்க அவங்க அழிக்காம விட்டாலும் இல்லை - பேக் அப் வாட்சப் டேட்டா என்ற அப்ஷனை தேர்வு செய்திருந்தாலும் எத்தனை வருசமானாலும் உங்க பழைய கதை புதுசா எத்தனை மொபைல்ல வேண்டுமானாலும் டவுன்லோட் ஆகும்.
2. HACKING - உங்க ஃபோனை ஒரு நிமிஷம் கொடுங்க ஒரு கால் பண்ணிட்டு தரேன்னு சொன்னா தரவே தராதீர்கள் ஏன் என்றால் உதாரத்திர்க்கு உங்க வாட்ஸப் சேட் எனக்கு வேன்டுமெனில் நான் என்னுடைய மொபைலில் வாட்ஸப்பை இன்ஸ்டால் செய்து உங்க் மொபைல் நம்பரை போட்டு அது வெரிஃபிக்கேஷன் அனுப்பும் வரை கையில் ரெடியாய் வச்சிகிட்டு ஒரு கால்னு மொபைலை உங்ககிட்ட வாங்கிட்டு போய் தன்னுடைய மொபைலில் ஒகெ சென்ட் நோட்டிஃபிக்கேஷன் என்று அனுப்பினால் உங்க மொபைலுக்கு எஸ் எம் எஸ் அல்லது கால் வந்து அந்த ஒன் டைம் பாஸ்வோர்ட் கிடைத்த உடன் உங்க வாட்ஸப் அப்படியே இருக்கும் உங்க மொபைலில் ஆனால் அவர்களில் மொபைலில் உங்க அனைத்து சேட் வீடியோ அப்படியே ஒரு காப்பி அவங்க கிட்ட போயிரும் நீங்க என்னடா வாட்ஸப்பே வரலைனு அன் இன்ஸ்டால் செய்துட்டு இன்னொரு வாட்டி ஒன் டைம் பாஸ்வோர்ட் போட்டு அக்கவுன்ட்டை மீட்டாலும் அவங்க கிட்ட உங்க அனைத்து வாட்ஸப் சேட் மற்றும் அனைத்து விஷயங்களும் அவங்ககிட்ட இருக்கும் என்பது ஒரு அதி பயங்கர டேஞ்சர்.
3, இப்ப வாட்சப் ஒன்டைப் பாஸ்வோர்ட் அல்லது வெரிஃபிக்கேஷன் அனுப்பாம கால் வெரிஃபிக்கேஷன் கூட அனுப்புவதால் உங்களுக்கு தெரியாம உங்க அக்கவுன்ட் அத்தனை விஷயங்களும் அவர்களிடத்தில்.
4. மொபைல் ரிப்பேர் ஆகி கொடுக்கும் போது உங்க அனைத்து விஷயங்களையும் அவர்களிடத்தில் போகும் ஆபத்து சிம் எடுத்து விட்ட்டால் கூட. அதனால் கவனம் மிகஅதிகமா ய் தேவை ஏன் என்றால் ஆன்ட்ராயிட்டில் அதிக ஆபத்து இந்த வாட்ஸப்பில். உங்களுக்கு தெரியாம ஏதாவ்து குருப் சேட் அல்லது நீங்க ஒப்பனே பண்ணாம ஒரு நடிகையின் குளியல் காட்சியை வைத்திருந்தால் அது கிரிமினல் செயலுக்கு ஒப்பாகும்.
இதெல்லாம் எங்களுக்கு தெரியமப்ப்பு - நாங்கெல்லாம் அப்பவே அப்படி இப்ப ஸ்வீட் சோன் பப்படினு சொல்றவங்களே நீங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் உங்க அனைத்து சேட் மற்றூம் இதர விஷயங்கள் வாட்ஸப் எத்தனை வருடமானாலும் சேமித்து வைக்கிறது மற்றும் சைபர் கிரைம் ஒவ்வொரு பரிமாற்றதையும் கண்கானிக்கவும் எப்ப வேண்டுமானாலும் வாட்ஸப் நிறுவனத்திடம் இருந்து கேட்டு பெற முடியும் என்றூ கூறி கொண்டு கவனம் கவனம் கவனம் அது மட்டுமே உங்க தாரக மந்திரமாய் இருக்கட்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum