ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்?
Tue Apr 21, 2015 4:00 pm
விஜிபி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை:
ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்?கட்டாயம் இதைப் படியுங்கள்...
நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி, வயது மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். நீங்கள் PAN நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால் உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.
இங்கு தான் பிரச்சனையே. உங்கள் PAN நம்பரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எப்படி?
தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை. இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஒருவர் ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார். அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார்.
குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார். அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்கலாகத் தான் இருப்பார்கள் என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார்.
எனவே ரயில் பயணிகளே உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப் பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License or Ration Card போன்றவற்றை அடையாள அட்டையாக காட்டவும்.இதை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் அனைவரும் SHARE செய்யுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum