தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
KPN Travels நிறுவனம் - ஒரு எச்சரிக்கை பதிவு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

KPN Travels நிறுவனம் - ஒரு எச்சரிக்கை பதிவு Empty KPN Travels நிறுவனம் - ஒரு எச்சரிக்கை பதிவு

Sat Apr 11, 2015 7:16 pm
இன்று எனக்கு நேரிட்ட சம்பவம்.உங்களுக்கும் கூட நடந்திருக்கலாம்.இனிமேல் நடக்கலாம்.இவர்களை இப்படியே மட்டும் விட்டுவிடக் கூடாது.(I have written in English for those who can't read Tamil in the end of this post.Spread this awareness via all social networking media like What's App etc) What's App,Email ,Telegram என அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இச்செய்தியைப் பரப்புங்கள்.
KPN Travels.,இந்த நிறுவனத்தின் வாகனங்களையோ,பார்சல் சர்வீஸ்களையோ--கூடியமட்டிலும் நான் தவிர்த்து விடுவேன்.காரணம் : உயிர் பயம்,மற்றும் பொருள் இழப்பின் பயம்.
நேற்று மாலை சங்கரன்கோவிலில் இருந்து கோவைக்கு,என்னுடைய இருசக்கர வாகனம் ஒன்றை ஏதேனும் ஒரு பார்சல் சர்வீஸ்ல் போட்டு அனுப்புமாறு நான் கேட்க-என்வீட்டார்களோ,இந்த நிறுவனத்தைப் பற்றி தெரியாத காரணத்தால்,KPN parcel service ல் போட்டு அனுப்பி வைத்துவிட்டார்கள்.இன்று மதியம் 3 மணிக்கு உங்கள் வாகனம் கோவையில் உங்களுக்குத் தரப்படும் என்ற உத்திரவாதத்துடன்,சேவைக் கட்டனமாக ரூபாய் 1200 யும் நோகாமல் பெற்றுக் கொண்டனர்.அப்போதே அடடா இந்த நிறுவனமா என்று எனக்குப் பட்டது.இருந்தாலும் சற்றேனும் திருந்தியிருப்பார்கள் என்ற எண்ணத்தில்,அவர்கள் கூறியது போல இன்று கோவை காந்திபுரத்தில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்கு வாகனத்தை எடுத்து வரச்சென்றேன்--அப்போது நடந்த உரையாடலை,அப்படியே தருகிறேன்.
"சார்,சங்கரன்கோவில்ல இருந்து பைக்கை நேத்து அனுப்பி வச்சாங்க,வந்துருச்சா? எடுத்துக்கலாமா"?
"இன்னும் பார்சல் வண்டி வரலை.போயிட்டு நாளைக்கு வாங்க"-அங்கிருந்த மேலாளர் என்று தன்னைக் கூறிக் கொண்டவர் கூறினார்.
"வரலையா? இன்னைக்கு மதியம் வரும்ன்னு சொன்னாங்களே"
"அப்படியா,...அப்ப அப்படி சொன்னவங்கட்ட போய் கேளுங்க.,"
"என்ன சார் இது?..இப்படி பேசுறீங்க...அதுல என் பைக் வருதுங்க"
"உங்க பைக் மட்டுமா வருது? பல லட்சக்கணக்கான பொருளும் அதோட வருது"
"வெரிகுட்...அப்ப அந்த எல்லா பொருளுக்கும் சேர்த்து நான் கேக்குறேன்...எப்பங்க பார்சல் வரும்"
"அதெல்லாம்...உங்கட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை"
"அவசியமில்லையா???...சார் அதுல வர்றது என் பைக்.எனக்கு அது முக்கியம்."
"என்ன சார் நீங்க...உங்க பைக் மட்டுமே முக்கியம்ங்றீங்க...பைக்ல்லாம் இன்னைக்கு கிடைக்காது...பார்சல் ஏத்திட்டு வந்த வண்டி பிரேக்டவுன் ஆகிருச்சுன்னு நெனைச்சுக்கோங்க..
போங்க...கிளம்புங்க"
"ஏங்க...இது முறையற்ற,பொறுப்பற்ற பதில்.,உங்க பார்சல் சர்வீஸில் போட்ட என் பைக்கைத் தான் நான் கேட்கிறேன்.எப்ப கிடைக்கும் ன்னு கேட்டா,அதுக்கு நீங்க பொறுப்பற்ற பதிலைத் தர்றீங்க.கொஞ்சம் கூட நல்லாயில்லை.அப்புறம் கன்ஸ்யூமர் கோர்..."என்று நான் முடிக்க கூட விடவில்லை.
"போங்க சார்...உங்கள மாதிரி லட்சக்கணக்கா பாத்தாச்சு...போயி நீங்க வண்டியை எங்க போட்டு விட்டீங்களோ அங்க போயி கேளுங்க...கோர்ட்..போலீஸ்ன்னு எங்க வேணும்னாலும் போங்க.." என்ற பதிலை மிக மிக அலட்சியமாகத் தந்தார்கள்.இதில் அவருடன் இருந்தவர்களின் தனிக் கூப்பாட்டைச் சேர்க்கவில்லை.இந்த இடத்தில் தான் என் பொறுமை அதன் கொதிநிலையைத் தொட்டது.நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை யிடம் புகார் செய்யலாம் என்றால்-கஸ்டமரைப் பற்றியே கவலைபடாதவர்களுக்கு,கஸ்டமர் கேர் பற்றியெல்லாமா நினைவிருக்கும்? வேறுவழியின்றி,வாக்குவாதம் நடந்து,காவல்துறை புகாரில் வந்து நின்றது.மேற்சொன்ன மொத்த களமாடலின் போதும்-அப்போதும் தங்கள் பார்சல்களை அனுப்ப வரிசையில் நின்றிருந்தவர்கள்-ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லை.நாளை நமக்கும் இது நடந்தால்? என்ற அறிவும்,எண்ணமும் வரவேயில்லை.நமக்கு நடக்கவில்லையே என்ற எண்ணத்தில் நல்ல டைம்பாஸ் என்று வேடிக்கை பார்த்தனர்.
ஒரே ஒருவர் மட்டும் நெளிந்தபடி வந்தார்,என் சண்டையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்தாராம்."சார் சென்னைல இருந்து கோவைக்கு-KPN ல நேத்து பொருட்களைப் போட்டு அனுப்பி வச்சாங்க.அதுல முக்காவாசிப் பொள்ளாச்சிக்கு போயிருச்சாம்.மீதியிருந்த பொருட்கள்ல பாதியைக் காணோம்.இங்க கேட்டா-சென்னைல கேளுங்கறாங்க,அங்க கேட்டா கோவைல கேளுங்கறாங்க.மேனஜர் போன் நம்பர்ன்னு ஒரு நம்பரைத் தந்தாங்க.அவருக்கு போன் செஞ்சேன்.முதல் தடவை மட்டுந்தான் போனை எடுத்தாரு.அடுத்து எடுக்கவேயில்லை.இப்ப என்ன சார் செய்ய? " என்று பரிதாபமாக கேட்டார்.அவரைக் காவல்துறையில் "KPN ல் அனுப்பி வைத்த என் பொருட்களை காணவில்லை என்று உங்கள் ரசீதைக் காட்டி புகார் தந்து,FIR போடச் சொல்லுங்கள்...அதான் ஒரே வழி" என்று வழிமுறையைச் சொன்னேன்.
KPN நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு,நம் நிறுவனத்தை நம்பித்தானே வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை அனுப்புகின்றனர்,பயணம் செய்கின்றனர் என்ற அக்கறை துளி கூட கிடையாது என்ற என் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் இந்நிறுவனத்தினர். பயணிகளை ஏற்றிக்கொண்டு-அவர்கள் எதிர்பார்த்த அளவில் பேருந்து நிரம்பவில்லையென்றால்,கண்ட கண்ட இடங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது,ஓட்டுனருக்கு இலவசமாக உணவு தருகிறான் என்ற ஒரே காரணத்திற்காக- சாலையோர குப்பை உணவகத்தில் வாகனங்களை நிறுத்துவது,பண்டிகை காலங்களில் அநியாய விலைகளுக்கு டிக்கெட்டுகளை விற்பது,சட்ட விரோதப் பொருட்களை கொண்டு செல்வது என ஏகப்பட்ட முறைகேடுகளைத் துணிந்து செய்கின்றனர்.தனியார் துறை மட்டுமல்ல அரசுத்துறைகளில் கூட இருக்கக்கூடாத-அலட்சியம்,ஏளனம்,பொறுப்பற்றத்தன்மை போன்றவை இந்நிறுவனத்தில் மித மிஞ்சிய அளவில் காணப்படுகின்றது.நம்மை யார் கேட்பார்கள்,அப்படியே கேட்டாலும் லஞ்சம் தந்து அவர்களை சரிகட்டி விடலாம் என்ற அகங்காரம் தரும் தைரியமே அவர்களை இவ்வாறு செயல்பட வைக்கின்றது.பெரும்பாலான ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்றாலும்-KPN travels போன்ற கார்ப்பரேட் வாகன நிறுவனம் இதில் எல்லாம் ஆராய்ச்சி முனைவர் பட்டமே பெற்றுள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், சென்னையிலிருந்து கோவையை நோக்கி கிளம்பிய,இதே KPN நிறுவனத்தின் தரமற்ற குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நடுவழியில் தீப்பிடித்து எரிந்து-அதில் பயணம் செய்த அனைவரும் உடல்கருகி இறந்தது நினைவிருக்கலாம்.அதை அப்படியே மூடி மறைத்ததும் கூட நினைவிருக்கலாம்.
நாம் வாடிக்கையாளர்கள்.பணத்தை செலுத்தி சேவைகளைப் பெறுகிறோம்.குறித்த பணத்திற்கான சேவையை வழங்கா விட்டால்-அவர்களின் பிடறி மயிரைப் பிடித்து உலுப்பி கேள்வி கேட்க நமக்கு முழு உரிமையுள்ளது.துணிந்து கேள்விகளைக் கேளுங்கள்.மரியாதையான பதில் வராவிட்டால்-உங்கள் உறவினர்கள்,நண்பர்களிடம் அந்த நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள்.இன்றைக்கு நமக்கிருக்கும்,இந்த சமூக வலைதளங்களைப் போல ஒரு வாய்ப்பு பத்தாண்டுகளுக்கு முன்னர் இருக்கவில்லை.அதைப் பயன்படுத்தி இது போன்ற கார்ப்பரேட் நிறுவனக் கொள்ளைகளுக்கு சாவு மணி அடிப்போம்.மிக நேர்மையான,நியாயமான போக்குவரத்து சேவையைத் தரும் எத்தனையோ சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன.அவற்றை ஆதரிப்போம்.KPN Travels போன்ற கார்ப்பரேட் ஆதிக்க யானைகளின் காதில் புகுந்த எறும்பாக நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.
வாடிக்கையாளர்களுக்காத் தான் நிறுவனங்கள்.நிறுவனங்களுக்காக வாடிக்கையாளர்கள் அல்ல என்பதை உணர்த்துவோம்.
இதோ நான் சொல்கிறேன்,எவ்வளவு அவசர,அவசிய பணியாக இருந்தாலும்.இந்த KPN Travels நிறுவனத்தின் வாகனங்களையோ,பார்சல் சர்வீஸ்களையோ பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள்.

நன்றி: முகநூல் - G Durai Mohanaraju
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum