30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:13 pm
'இதோ வந்துட்டோம்ல...' என்பது போல ச்சும்மா சுள்ளென்று வாட்டியெடுக்க ஆரம்பித்துவிட்டார் சூரிய பகவான் வழக்கம்போல! நாமும் வழக்கம்போல சமாளித்துதானே ஆகவேண்டும்!
என்னதான், 'வாய்க்கு ருசியா கொடுக்கறேன்' என்று வகை வகையாக சமைத்து வைத்தாலும், அத்தனையையும் ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சொல்லப் போனால், 'இதையா சமைச்சே?' என்று சில அயிட்டங்கள் பலரையும் பதற வைத்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வைத்து, எல்லோரையும் 'கூல்... கூல்...' என்றாக்குவதற்காக... கிர்ணி, தர்பூசணி, பரங்கி, பூசணி, நெல்லிக்காய், இளநீர் என பலவற்றையும் பயன்படுத்தி, சர்பத் முதல் சாலட் வரை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
நாக்கும் மனதுக்கும் ஒருசேர மலர்ச்சியூட்டி, உடன் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் இந்த அயிட்டங்களை சமைத்துக் கொடுத்து, ச்சும்மா 'ஜில்’லுனு ஒரு சபாஷ் வாங்குங்க!
கிர்ணிப்பழ கீர் தேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தாலா ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.
என்னதான், 'வாய்க்கு ருசியா கொடுக்கறேன்' என்று வகை வகையாக சமைத்து வைத்தாலும், அத்தனையையும் ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சொல்லப் போனால், 'இதையா சமைச்சே?' என்று சில அயிட்டங்கள் பலரையும் பதற வைத்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வைத்து, எல்லோரையும் 'கூல்... கூல்...' என்றாக்குவதற்காக... கிர்ணி, தர்பூசணி, பரங்கி, பூசணி, நெல்லிக்காய், இளநீர் என பலவற்றையும் பயன்படுத்தி, சர்பத் முதல் சாலட் வரை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
நாக்கும் மனதுக்கும் ஒருசேர மலர்ச்சியூட்டி, உடன் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் இந்த அயிட்டங்களை சமைத்துக் கொடுத்து, ச்சும்மா 'ஜில்’லுனு ஒரு சபாஷ் வாங்குங்க!
கிர்ணிப்பழ கீர்
செய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும். கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.
பயறு தோசை
தேவையானவை: முழுப்பயறு (பச்சைப் பயறு முழுதாக), பச்சரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசி, பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, மாவை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:14 pm
தர்பூசணி பக்கோடா
தேவையானவை: தர்பூசணி - பாதி அளவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல், புதினா இலை, நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: தர்பூசணியின் வெண்மையான அடி பாகத்தை மட்டும் எடுத்து துருவிக் கொள்ளவும். இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
கலர் லெமன் சர்பத்
தேவையானவை: தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6, கேரட் - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
கீரை சாதம்
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, பாசுமதி அரிசி - 200 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, பூண்டு - 2 பல், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, நெய் - 50 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும். அரிசியைப் பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும். சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:14 pm
அவல் - நுங்கு சாலட்
தேவையானவை: நன்றாக சுத்தம் செய்த சிவப்பு அவல், நுங்கு துண்டுகள் - தலா 100 கிராம், பனங்கல்கண்டு - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - சிறிதளவு.செய்முறை: அவலுடன் நுங்கு, கேரட், பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.நுங்கில் உள்ள தண்ணீரில் அவல் ஊறிவிடும். சாப்பிட சுவையாக இருக்கும்.
வெந்தய மசியல்
தேவையானவை: வெந்தயம் - 25 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கடுகு,மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம் - பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:14 pm
பரங்கிக்காய் அடை
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பரங்கிக்காய் - ஒரு கீற்று, அரிசி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து... மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.
ஸ்டஃப்டு புடலை
தேவையானவை: சிறிய குழல் வடிவில் நறுக்கிய புடலங்காய் துண்டுகள் - 6, துருவிய கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 50 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வெறும் கடாயில் கடலை மாவை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். துருவிய கோஸ்,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வறுத்த கடலைமாவைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். நறுக்கிய புடலங்காய்களில் உட்புறம் இருக்கும் விதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதில் மசாலா கலவையை நிரப்பவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடைத்த புடலைங்காய்த் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மெள்ள வதக்கி எடுக்கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:15 pm
கிடாரங்காய் சாதம்
தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், கிடாரங்காய் - பாதி அளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியை உதிர் உதிராக வடித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும். கிடாரங்காயை சாறு பிழிந்து கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, கிடாரங்காய் சாறையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
சுரைக்காய் அல்வா
தேவையானவை: துருவிய சுரைக்காய், திக்கான பால் - தலா 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கலர் பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 50 கிராம், துருவிய முந்திரி - சிறிதளவு.செய்முறை: அடி கனமான கடாயில் நெய் விட்டு, சுரைக்காய் துருவலைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். பச்சை வாசனை போக வதங்கியதும் பாலை விட்டு, நன்றாகக் கொதித்து கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும். பிறகு கலர் பவுடர், துருவிய முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும்.
கொத்தமல்லி குணுக்கு
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, மைதா மாவு - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, ரவை - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கொத்த மல்லியைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ரவை, மைதா மாவு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சின்னச் சின்ன குணுக்குகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக் கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:15 pm
பீர்க்கங்காய் கூட்டு
தேவையானவை: பீர்க்கங்காய் - 1, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பீர்க்கங்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். சிறிது எண்ணெயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து அரைக்கவும். வெந்த பருப்புகளுடன், பீர்க்கங்காய் சேர்த்துக் கொதிக்க வைத்து, காய் நன்றாக வெந்ததும்... வறுத்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொதிக்கும் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பூசணிக்காய் அவியல்
தேவையானவை: பூசணிக்காய் - 2 கீற்று, பச்சை மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, புளிப்பில்லாத தயிர் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெயில் வறுத்து... தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெந்த பூசணியுடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்து, அவியலில் சேர்த்து, தயிரை விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:15 pm
வாழைத்தண்டு சூப்
தேவையானவை: வாழைத்தண்டு - 1, வெண்ணெய், துருவிய கேரட் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, ஸ்வீட் கார்ன் - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாழைத்தண்டை நாரெடுத்து துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு... வெங்காயம், கேரட், ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி, அரைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்து, கொதித்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
ஜவ்வரிசி மோர்க்களி
தேவையானவை: மாவு ஜவ்வரிசி, தயிர் - தலா 200 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், மோர் மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: ஜவ்வரிசியை தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்க்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் களி மாதிரி வந்ததும் இறக்கவும்.
முள்ளங்கி ரோல்ஸ்
தேவையானவை: துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 100 கிராம், கோதுமை மாவு, மைதா மாவு - தலா 50 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிது உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். முள்ளங்கி சேர்த்துப் பிசைந்த மாவை சிறு அப்பளங்களாக இட்டு, அதில் சிறிது மசாலா கலவை வைத்து மூடி, உருளை வடிவில் செய்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:16 pm
ஐஸ்க்ரீம் வித் சப்ஜா விதை
தேவையானவை: சப்ஜா விதை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பழக்கலவை (பைனாப்பிள், ஆப்பிள், திராட்சை, கிர்ணி) - 200 கிராம், சைனா கிராஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 50 கிராம், சர்க்கரை - 25 கிராம், வெனிலா ஐஸ்க்ரீம் - மீடியம் சைஸ் கப், விரும்பிய கலர் பவுடர் - சிறிதளவு.செய்முறை: சைனா கிராஸை தண்ணீரில் நனைத்து பத்து நிமிடம் வைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டு சூடாக கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கலர் பவுடர் சேர்க்கவும். சிறிது நேரத்தில் நன்றாக செட்டாகிவிடும். இதை தனியே எடுத்து வைக்கவும்.
சப்ஜா விதையில் சிறிது தண்ணீர் விட்டு வைக்கவும். ஒரு ஐஸ்க்ரீம் பவுலில் பழக்கலவை, ஐஸ்க்ரீம், சைனா கிராஸ், சப்ஜா விதை என ஒவ்வொன்றின் மேல் ஒன்றாக போட்டு பரிமாறவும்.
சுரைக்காய் பொரியல்
தேவையானவை: சுரைக்காய் - 1, சின்ன வெங்காயம் - 10,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: சுரைக்காய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் சுரைக்காய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கடைசியில் வேர்க்கடலைப்பொடியைத் தூவி இறக்கவும்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 100 கிராம், இஞ்சி - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தயிர் - 100 கிராம், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: நெல்லிக்காய் களைத் துருவி... இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து தயிரில் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:16 pm
மிக்ஸட் சாலட்
தேவையானவை: நறுக்கிய தக்காளி, ஊற வைத்து முளை கட்டிய பச்சைப் பயறு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், மாதுளை முத்துக்கள் - தலா 50 கிராம், நறுக்கிய தர்பூசணி, வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு - தலா அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு - தேவையான அளவு, ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: தக்காளி, பயறு, வெள்ளரிக்காய், மாதுளை, தர்பூசணி, வெங்காயம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு... சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். கொத்தமல்லியை மேலாகத் தூவவும்.
சௌசௌ ஸ்ட்டூ
தேவையானவை: சௌசௌ - 1, தேங்காய் - 1, பச்சை மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: சௌசௌவை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியான பால் எடுக்கவும். வேக வைத்த சௌசௌவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க வைத்து, பச்சை மிளகாயைக் கீறி சேர்த்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:16 pm
தக்காளி ஜாம்
தேவையானவை: பெங்களூர் தக்காளி - 10, சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.செய்முறை: தக்காளியை கேரட் துருவியால் மெள்ள துருவிக் கொள்ளவும். அடி கனமான கடாயில் துருவிய தக்காளி, சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். ஜாம் பதத்துக்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
நாரத்தை பச்சடி
தேவையானவை: நாரத்தங்காய் - 5, வெல்லம் - 250 கிராம், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: நாரத்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நாரத்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
பரங்கிக்காய் சட்னி
தேவையானவை: பரங்கிக் காய் - ஒரு கீற்று, காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைபாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, பரங்கிக்காயை நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:17 pm
இளநீர் - பால் ஜூஸ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வழுகல் தேங்காய், இளநீர் - தலா 100 கிராம் (வழுகலுடன் சேர்ந்த இளநீராக இருக்க வேண்டும்), திக்கான பால் - 200 கிராம், சர்க்கரை - 4 டீஸ்பூன்.செய்முறை: வழுகல் தேங்காயுடன் இளநீர், சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து, பால் ஊற்றி மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்று கொடுக்கவும்.
வெண் பூசணி தோசை
தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, தோல், விதை நீக்கிய பூசணிக்காய் - ஒரு கீற்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசியுடன் உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து, பூசணிக்காயை நறுக்கி சேர்த்து மையாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கரைக்கவும். மாவு சிறிது புளித்தவுடன், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, மாவை தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
பனங்கல்கண்டு அப்பம்
தேவையானவை: பனங்கல் கண்டு, மைதா மாவு - தலா 100 கிராம், வெல்லம், அரிசி மாவு - தலா 25 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கொதிக்கும் நீரில் வெல்லத்தை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி, பனங்கல் கண்டை சேர்த்து, கரையும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சிறிது ஆறியதும் மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இந்த மாவை அப்பக்குழியில் ஊற்றி அப்பங்களாக வார்த்தெடுக் கவும்.
Re: 30 வகை சம்மர் ரெசிபி
Mon Apr 06, 2015 1:17 pm
இளநீர் ஆப்பம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 200 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், இளநீர் - 1, ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன், பால் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசி வகைகள், உளுத்தம்பருப்பை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும்.
ஆரஞ்சு கத்லி
தேவையானவை: ஆரஞ்சு - 2, முந்திரி - 200 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: முந்திரியை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும், இதில் ஆரஞ்சை ஜூஸாக பிழிந்துச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி... சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது சேர்த்துக் கிளறி, தீயை மிதமாக வைத்து, நெய் விட்டு நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். விருப்பப்பட்டால் ஃபுட் கலர் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum