திருமணம் - விவாகம்
Wed Mar 25, 2015 11:46 pm
விவாகம்.
விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். (எபி 13 :4 )
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
விவாகம் கனமுள்ளது. அதாவது மிகுந்த மரியாதைக்குரியது என்று வேதம் கூறுகிறது. கனமுள்ள எதுவொன்றையும் பெற்றுகொள்வது என்பது மிகச் சிரமமான ஒன்றேயாகும்.
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கூறும் வேதம், மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையைக் கண்டடைகிறான் என்றும் சொல்லுகிறது. நீதிமொழிகள் 18:22
யார் தங்கள் திருமணம் குறித்த அறிவற்ற சூழ்நிலையில் அல்லது திருமணமே வேண்டாம் என்று இருக்கிறார்களோ, அவர்கள், தேவ திட்டத்தை அசட்டை பண்ணும் பிள்ளைகள் ஆவர். அவர்கள் ஜெபித்து, தங்கள் திருமண வாழ்வுக்கு, தேவதிட்டத்தின்படி ஆயத்தம் ஆகவேண்டும்.
திருமணமானவர்களின் விவாகமஞ்சம் சுத்தமாய் இருக்கவேண்டும். விபச்சாரம் இருக்கக்கூடாது. வேசித்தனம் ஆகாது. அவர்களை தேவன் நியாயம் தீர்ப்பார். எந்த ஒரு உடல் ரீதியான உறவும், திருமணத்திற்குப்பின், கணவன் அல்லது மனைவியுடன் மட்டும்தான் இருக்கவேண்டும். மற்றவை அனைத்தும் விபச்சாரமே!
ஆண்டவர் குடும்பங்களை ஏற்படுத்துவது, பரிசுத்த சந்ததியைப் பெற்றெடுக்கவே. அந்த நோக்கம் நிறைவேறவும், நம் சந்ததி பரிசுத்தமானதாய் இருக்கவும் ஒப்புக்கொடுப்போம். ஆமென்.
அன்பானவர்களே நாம் எவ்வளவு அந்தஸ்து உடையவர்களாயிருந்தாலும் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு. எனவே எச்சரிக்கையாயிருங்கள்.
ஜெபம்:
அன்பின் பிதாவே, எங்கள் திருமண வாழ்வு உமக்குப் பிரியமானதாகமட்டும் இருப்பதாக.இந்த கனமுள்ள வாழ்வுக்காக நன்றி. எங்கள் சந்ததிகள் பரிசுத்த சந்ததிகளாய் இருப்பதாக. இயேசுகிறிஸ்துவின் இணையற்ற பெயரால் வேண்டுகிறோம் பிதாவே, ஆமென்.
நன்றி: தேவனுடைய சத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum