ஒப்புரவாகுதல்....
Wed Mar 25, 2015 11:18 pm
ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து,
மத்தேயு 5 :23-24
பிரியமானவர்களே !!!
நமது கர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் அவர் தமது சீடர்களுக்கு நேரடியாக மலையின் மேல் வைத்து கூறிய வார்த்தை தான் இந்த வசனம்.
மன்னிப்பு , ஒப்புறவாகுதல் நமது ஜீவியத்தில் மிக முக்கியமான ஒன்று ,
இங்கே ஆண்டவர் சொல்லுகிறார் ,"ஒருவனுக்கு உன் பேரில் குறை உண்டு என்று நீ அறிவாயனால் உன் காணிக்கையை பலிபீடத்தண்டையில் வைத்து விட்டு போய் உன் சகோதரனிடத்தில் ஒப்புரவாகி விட்டு மீண்டும் வந்து உன் காணிக்கையை செலுத்து "
மற்றவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்று பார்க்க சொல்லவில்லை
நீ மற்றவர்களுக்கு செய்ததை குறித்தே இங்கு சொல்லுகிறார் . ஒருவேளை நாம் மற்றவைகளை வார்த்தையில் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ பேசி காயபடுத்தி இருக்கலாம் ! அதனால் அவர்களுடைய இருதயம் நம்மை குறித்து வேதனை பட்டு ஆண்டவரே அவர்கள் எனக்கு இப்படி செய்து விட்டார்களே என்று முறையிட்டால் அது நமக்கு ஆசீர்வாதமாக இருக்காது,
மற்றவர்கள் உனக்கு செய்த குறை பற்றி சொல்லவில்லை , நீ மற்றவர்களுக்கு செய்த குறை பற்றி சொல்லுகிறார் , ஆகவே ஒப்புரவாகுதலை தேடி போக வேண்டியது நீ தான். நீ யாருக்கு குறை செய்தாயோ அவர்களை தேடி நீ தான் போக வேண்டும். அவர்கள் உன்னை தேடி வரமாட்டார்கள் இப்படி தான் வசனம் சொல்லுகிறது ,தேவனுக்கு கீழ்படிய வேண்டும் என்ற ஆசை இருந்தால் , யாருக்கெல்லாம் குறை செய்தாயோ அவர்களை தேடி சீக்கிரமாக போ, ஒப்புரவாகி சமாதானம் என்னும் பாலத்தை திடபடுதிக்கொள்ளவும் .மணவாளன் வருகிறார்.அவரை சந்திக்க ஆயத்தபடு..
காணிக்கை என்பது நமது ஸ்தோத்திரம் ( சங்கீதம் 50:23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;
சங்கீதம் 50:14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;)
நாம் மற்றவர்களுடன் ஒப்புறவாகாமல் விண்ணப்பம் , ஸ்தோத்திரம் செய்தால் அந்த பலி ஏற்றுக்கொள்ளப்படுமா?
காயீன் ஆபேல் காணிக்கை பற்றி நமக்கு தெரியும் ஏன் காயீனுடைய பலி ஏற்றுக்கொள்ளப்படவில்லை தெரியுமா ? அவனுக்குள் ஒரு பொறமை எரிச்சல் சுபாவம் இருந்தது,அதனால் அவன் அவனுடைய சகோதரன் ஆபேலை கொலை செய்தான் ,(நாமோ வார்த்தையால் மற்றவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறோம்.) இன்று நம்மில் அநேகர் இப்படி தான் இருக்கிறோம் , எரிச்சல் பொறமை , முரட்டாட்டம் , சுய கர்வம் , இப்படி எல்லாம் வைத்து கொண்டு ஸ்தோத்திரம் செய்கிறோம் தேவன் எப்படி நமக்கு பதில் கொடுப்பார்
நமது சுய மரியாதையை , பெருமை , அந்தஸ்து இவைகளை முன்வைத்து , நான் எப்படி அவர்களிடம் மன்னிப்பு கேட்க முடியும் ? நான் கடவுளிடம் சொல்லி ஜெபித்து விட்டேன் அது போதும் என்று இருந்தால் தேவனுடைய வார்த்தையை அவமதிக்கிறோம். நாம் தேவனுக்கு கீழ்படியவில்லை .
ஒப்புறவாகுதல் இல்லாமல் பலிபீடத்துக்கே போக முடியாது என்றால் பரலோகத்துக்கு போக முடியுமா ?
தேவனுக்கு கீழ்படிய வேண்டும் .அப்போது நாம் நிறைவான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடியும் தேவன் நம்மில் பிரியமாயிருப்பார்.
அவருடைய வீட்டிலும் நமக்கு ஒரு இடத்தை ஆயத்தம் செய்வார்,
பிரியமானவர்களே !!!
இந்த வார்த்தை உங்களுடைய இருதயத்தை தொட்டு இருக்குமானால் உடனே கீழ்படிந்து ஒப்புரவாகி கொள்ளுங்கள் .தேவன் பெரியவர் .
நன்றி: தேவனுடைய சத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum