நாகை மாவட்டத்திற்க்காக ஜெபியுங்கள்
Thu Mar 19, 2015 7:33 pm
மிஷனரி வாழ்க்கை வரலாறு
நாகை மாவட்டத்திற்க்காக ஜெபியுங்கள்
இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதால் நாகை மாவட்ட மீனவர்கள் பலவேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றார்கள். இவர்களுக்காக ஜெபியுங்கள்.
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகார் மீனவர் தெருவை சேர்ந்த அல்லிமுத்து என்பவர் உள்பட 20 குடும்பத்தை சேர்ந்த சுமார் 50 பேர் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ. பெஞ்சமின்பாபுவிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் நாகை மாவட் டம் சீர்காழி தாலுகா பூம்புகார் மீனவர் தெருவில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென்று கோயில் இருந்தாலும், எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் திருப்பதி, நாகூர் திருவண்ணாமலை, சபரிமலைக்கு சென்று வருகிறார்கள்.
நாங்கள் 20 குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்கள் மன நிம்மதிக்காக வாரந்தோறும் ஞாயிறன்று கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறோம். எங்கள் விருப்பத்தின் பேரில் செல்கி றோம். எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இந்நிலையில் எங்கள் ஊரில் உள்ள 11 பேர் எங்களை கிறிஸ்தவ ஆலயத்திற்கு போகக் கூடாது என்று கட்டாயப்படுத்தியும், அங்கு சென்றதால் எங்கள் 20 குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைத்து விட்டனர். இது குறித்து ஊர் முழுவதும் அறிவித்து விட்டனர். மேலும் எங்களுடன் யாரும் பேசக்கூடாது என்றும், எங்களை மீன்பிடிக்க அழைத்துச் செல்ல கூடாது என்றும், சொந்தமாக படகு வைத்திருப்பவர்கள் பிடித்து வரும் மீனை யாரும் வாங்க கூடாது என்றும், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைக்க கூடாது என்றும், எங்கள் வீட்டு விசேஷங்களிலும் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். மேலும் எங்கள் பெண்களை திருமணம் செய்ய கூடாது என்றும், எங்களுக்கு பெண் கொடுக்க கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பிடித்து வந்த மீனை ஏஜென்ட்களும் வாங்கவில்லை. இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி, மீன்களை வாங்க மறுக்ககூடாது. அவர்கள் விரும்பிய கடவுளை கும்பிடலாம் என்று எழுத்து பூர்வமாக எழுதி கையெழுத்திட்டார்கள். ஆனால் அதன்படி நடக்கவில்லை. வருமானம் இல்லாததால் பள்ளி, கல்லூரிக்கு தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். எங்களுடைய ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு, கலெக்டர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள போகிறோம். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட டி.ஆர்.ஓ. பெஞ்சமின்பாபு, கலெக்டர் சென்னை சென்றிருப்பதால் அவர் வந்த பின்பு பேசி தீர்வு காணலாம் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=136607
Permissions in this forum:
You cannot reply to topics in this forum