தயிர் வேண்டாம், மோர் குடியுங்கள்!
Wed Mar 18, 2015 11:39 pm
இயல்பாகவே ஜில்லென்று இருக்கும் தயிரை ஃபிரிஜ்ஜில் வைத்து இன்னும் குளுமையாக்கிச் சாப்பிடுவது வெயிலுக்கு ரொம்ப இதமானது என நிறையப் பேர் நினைக்கிறார்கள்.
ஆனால், உண்மை அது இல்லை... தொட்டுப் பார்க்கும்போது ஜில்லென்று இருந்தாலும் தயிர் நிஜமாகவே உடல் சூட்டைக் கிளப்பிவிடும். கெட்டியான தயிரைப் பார்த்தாலே பசி கிளர்ந்தெழும். யாரையும் சாப்பிடவைக்கும் இனிமையான சுவை கொண்டது அது. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, தயிரில் நல்ல குணங்கள் எதுவும் கிடையாது.
தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். உடலின் எல்லா சுரப்பிகளையும் தாறுமாறாகச் செயல்பட வைத்து ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும்.
கண்டிப்பாகத் தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது. கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது.
தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை! தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு களுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதை யில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது! நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட் கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது! அந்த மாதிரி சமயத்தில் 'ஸ்பெஷல் மோர்' குடிக்கலாம். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். (ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது!)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum