தயிர் அருமருந்து :-
Wed Apr 30, 2014 6:13 pm
சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. தயிர் ஒரு அருமருந்து. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் , சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும்.
தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும். தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான்.
அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு பக் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும். பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் எட்டப் போகும பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன. கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன.
தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்டும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து.
குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப்படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கும் மோர்க்கட்டு சிறந்த மருந்தாகும்.
தயிரை சோற்றுடன் கலந்து சாப்பிடபிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை அதிகம் சேர்த்துக கொண்டால் கொழுப்பு சத்தை அதிகப்படுத்தும். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக சாப்பிடும் போது தயிரை தவர விட்டுவிடாதீர்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum