Page 2 of 4 • 1, 2, 3, 4
Re: பால்பியின் சிந்தனை துணுக்குகள்
Mon Mar 16, 2015 9:55 am
நீங்க ஏன் சார் கிறிஸ்தவனா மாறுனீங்க.
-------
அதையேன் சார் கேட்கிறீங்க. நாங்கூட கிறிஸ்தவங்களை கேலி கிண்டல் பண்ணினவந்தான் சார்.
ஆனா பாருங்க,ஒரு காலகட்டத்தில மனசு சரியில்லாம போச்சு. எதிர்கால பயம், குடும்பத்தில சமாதானமில்ல, நிம்மதியில்ல அடுத்து என்ன செய்யப்போறோம்ற கவலையில தற்கொலை முயற்சிவரைக்கும் போனேன். உடம்பு சரியில்லன்னா பல மாத்திரைங்கள போட்டு அட்ஜஸ்ட் பண்ணின எனக்கு அப்ப மனசு சரியில்லன்னா என்ன மாத்திரை போடுறதுன்னு தெரியல. அந்த நாட்களில நான் தங்கியிருந்த பேச்சுலர் ரூமுக்கு பக்கத்து வீட்டில கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடக்கும். அன்னைக்கி என்னவோ எனக்கு அந்த கூட்டத்துக்கு போவணும்ன்னுற ஒரு உந்துதல் வந்துச்சு. அங்க கடைசியா ஜெபம் படிக்கும் போது யாருக்காவது ஜெபம் பண்ணனுமான்னு கேட்டாங்க. நாங் கைய தூக்கி எனக்காக ஜெபம் பண்ணுங்க. எதுக்காக ஜெபம் பண்ணனுமுன்னு கேட்டாங்க. மனசில சமாதானமில்லங்கன்னேன்.
அவங்க நாங்க சொல்லறதை திருப்பி சொல்லுங்கன்னாங்க. சரிங்க சொல்லுறேன்னேன்.
இயேசுவே உம்மை விசுவாசிக்கிறேன். நீர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். நீர் கல்வாரி சிலுவையில் எனக்காக என்னுடைய ஸ்தானத்தில் நான் செலுத்த வேண்டிய பாவத்தின் சம்பளமான மரணத்திற்காக நீர் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். இயேசுவே என் பாவங்களை மன்னியும். எனக்குள் வாரும்ன்னு அவங்க சொன்னாங்க.( இந்த ஜெபம் எழுதப்பட்ட ஒரு துண்டுப்பிரதியையும் எனக்கு குடுத்தாங்க )
அவங்க சொன்னத திருப்பி சொன்னேன். சொல்ல சொல்ல எனக்குள் எதோ ஒரு இனம் புரியாத ஒரு சந்தோசம் சமாதானம் எனக்குள் இறங்கியதை உணர்ந்தேன். அதை வார்த்தைகளால வெவரிக்க முடியாது. இயேசு இயேசுன்னு அவரு பேர திரும்ப திரும்பச் சொல்ல சொல்ல எனக்குள்ள எதோ ஒரு புதுசா ஒரு சக்தி கிளம்புன்னத உணர்ந்தேன். அந்த சக்திதான் இன்னைக்கும் வரைக்கும் என்னய நடத்துதுங்க சார்.
நான் தெரிஞ்சிக்கிட்டது இதுதான் சார்.. காய்ச்சல் ஜூரம் வந்தா பாராசிட்டமல், உடம்பு வலிக்கு புரூப்பீன், வயித்தோட்டம் நிக்கறதுக்கு எல்டோபர்ன்ன்னு அவரசத்துக்கு நாலு மாத்திரைகங்க பேர தெரிஞ்சிக்கிட்டு ஆஸ்பத்திரி பக்கமே போகமா இருந்தேன். உடம்பு சுகமில்லன்னா டாக்டருகிட்ட போகணும். மனசு அதாங்க ஆத்துமாவில சுகமில்லன்னா அதை சுகமாக்க இயேசுசாமியால தான் சார் முடியும்.
மனுசனுக்கு தேவை மதமாற்றமில்ல சார். மனமாற்றம் தான் சார் தேவை. எதோ மனசு மாறினவன் சொல்லுறேன். தயவு செஞ்சு கேளுங்க சார்..இயேசுவை உங்க சொந்த இரட்சகரா ஏத்துக்கங்க சார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum