பாடத் திட்டத்தைத் தாண்டி, குழந்தைகள் சிந்திப்பது இல்லையே, ஏன்?
Sat Mar 14, 2015 2:30 pm
பெரும்பாலும் பாடத் திட்டத்தைத் தாண்டி, குழந்தைகள் சிந்திப்பது இல்லையே, ஏன்?''
''அதற்குக் காரணம் குழந்தைகள் அல்ல. கலீல் ஜிப்ரானின் கீழ்க்கண்ட வரிகள் பலரும் அறிந்ததுதான்,
'பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்லர்;
அவர்கள்
உங்களிடமிருந்து வரவில்லை.
உங்கள் வழியாக வருகிறார்கள்!’
இந்தக் கவிதையின் அடுத்த வரிகள்தான் உங்கள் கேள்விக்கான பதில்.
'உங்கள் குழந்தைகளைத்
தயவுசெய்து
படித்த ஆசிரியரிடம்
ஒப்படைக்காதீர்கள்;
படிக்கின்ற ஆசிரியரிடம்
ஒப்படையுங்கள்!’
வெறுமனே பாடப் புத்தகங்களிலும் பாடத் திட்டங்களிலும் தேங்கிப் போய்விடாமல், புதிது புதிதாகக் கற்று தன்னைப் புதுப்பித்துக்கொள்கிற
ஆசிரியர்தான் குழந்தைகளிடமும் புதிய சிந்தனைகளை விதைக்க முடியும்!''
- பா.அமுதா, மதுரை.
நானே கேள்வி... நானே பதில்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum