குழந்தைகள் அந்த குழந்தைகளாகவே இருக்கட்டும்
Mon Apr 13, 2015 11:20 pm
நேத்து விஜய் டிவி நீயா நானாவுல counsilling கொடுக்கறது பத்தி விவாதம். அதுல நம்ம மக்கள் சொல்றாங்க.... LKG, UKG படிக்கற குழந்தைகளுக்கும் counsilling கொடுக்கணுமாம். ஏன்யா இப்படி அலும்பு பண்றீங்க..... அதுக பச்சைக் குழந்தைக..... சந்தோஷமா திரியற புள்ளைகளுக்கு counsilling கொடுக்கறேன்னு இம்சை படுத்தாதீங்கயா..... ஒவ்வொரு ஸ்டேஜ் வரும் போதும் அதுகளா உலகத்தை புரிஞ்சுக்கும்.....
சரியா படிப்பு ஏற மாட்டேங்குதாம்..... நாங்க எல்லாம் அஞ்சு வயசுல ஒண்ணாம் கிளாஸ் சேர்ந்தோம்.... இப்ப மூணு வயசுல புள்ளைய பள்ளிக் கூடத்துல போட்டுட்டு படிப்பு வரலைனா என்ன அர்த்தம்?
அடுத்து பத்தாம் வகுப்பு, +2 பசங்களுக்கு ஒரு டென்ஷன் ஆயிடுதாம் பரீட்சை வரும் போது...... என்னயா டென்ஷன்? அதுக ஆகுதுகளோ இல்லயோ இந்த பெத்தவங்க பண்ற அலும்பு இருக்கே....மிடில.... அஞ்சுல இருந்து ஆறு.....பத்துல இருந்து +1. என்ன 10THல பேப்பர் வெளியில திருத்துவாங்க அவ்வளவுதான..... இதுக்குப் போய் ஏன்யா இவ்வளவு டார்ச்சர்? பசங்க கூட நீங்க உக்காந்து பேசுங்க.... இதுக்குப் போய்
counsilling கொடுக்கறேன்னு டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போய் படுத்தாதீங்க...
நாங்களும் பத்தாம் வகுப்பு, +2 படிக்கும் போது இந்த அளவுக்கு இல்லாட்டியும் கொஞ்சம் பயம், டென்ஷன் எல்லாம் இருந்துச்சு....என்ன ஒரே ஒரு வித்தியாசம்னா அது எங்களுக்கு இருக்கல.... எங்களைப் பெத்தவங்களுக்கு..... எப்படியாவது நம்ம புள்ள முதல் மார்க் எடுக்கணும்னு இல்ல..... தறுதலை பாஸ் பண்ணியாவது தொலைக்கணும்னு.... இந்த மாதிரி ஒரு நல்ல எண்ணம் எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கணும்......
மக்களே ஒண்ணு புரிஞ்சுக்குங்க..... உங்களோட எண்ணங்களை குழந்தைகள் கிட்ட திணிக்கறதுக்கு அவங்க சாக்கு மூட்டை கிடையாது.... சாக்கு மூட்டையை அவுத்து விட்டா நாலு பக்கமும் சிதறி ஓடற கோலி குண்டுகள் அவர்கள்...... குழந்தைகள் அந்த குழந்தைகளாகவே இருக்கட்டும்.... பெரிய மனுஷன் ஆக்காதீங்க.......
இதை இங்க போடுவதற்கான காரணம் ஒரு விழிப்புணர்வு கொடுக்கத்தான்.....
- Ravi Swaminathan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum