விலை உயர்ந்த செல்போன்களைத் திருட்டிலிருந்து காப்பாற்ற அற்புதமான சாஃப்ட் வேர்
Wed Mar 06, 2013 2:20 am
விலை உயர்ந்த செல்போன்களைத்
திருட்டிலிருந்து காப்பாற்ற அற்புதமான சாஃப்ட் வேர் ஒன்று
உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சாஃப்ட்வேர் இலவசம் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய சாஃப்ட்வேரின் உதவியால் சென்னை மாநகர
காவல்துறையின் ‘சைபர் க்ரைம்’ பிரிவினர், காணாமல் போன நோக்கியா ‘என் (ஸீ)
70’ மாடல் செல்போனை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக்
கொடுத்திருக்கிறார்கள்.
சென்னையை சேர்ந்த விக்ரம் என்ற இளைஞர் தனது
செல்போனில் ‘கார்டியன்’ என்கிற செல்போன் திருட்டுத் தடுப்பு சாஃப்ட்வேரை
இணைய தளத்திலிருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்திருந்தார். ‘கார்டியன்’
சாஃப்ட்வேரின் சிறப்பம்சம் இதுதான். அதாவது, ‘இந்த சாஃப்ட்வேர் பதிவுசெய்த
செல்போன் ஒருவேளை திருடு போனால், அதில் ஒவ்வொரு முறையும் போடப்படும் புதிய
சிம் கார்டுகளின் நம்பரை உடனடியாக இந்த சாஃப்ட்வேர் காட்டிக்
கொடுத்துவிடும்.’ எப்படி என்கிறீர்களா?
‘கார்டியன்’ சாஃப்ட்வேர்
லோடு செய்யப்பட்ட நம் செல்போனில் முதல் வேலையாக, நமக்கு மிகவும் நெருங்கிய
நண்பர் அல்லது உறவினர் செல்போன் நம்பரைப் பதிவு செய்துவிட வேண்டும்.
இப்படிச் செய்தால், நம் செல்போன் திருடு போகும்பட்சத்தில் அதில் இருக்கும்
‘கார்டியன்’ சாஃப்ட்வேர் புதிய சிம் கார்டுகளின் எண்களை நாம் ஏற்கெனவே
கொடுத்திருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.
தகவலாக அனுப்பிக் கொண்டேயிருக்கும். இதை வைத்துத் திருடு போன செல்போனை யார்
பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்துகொண்டு அதை மீட்கலாம். கடந்த மாதம்
விக்ரம், சென்னை சூளைமேட்டிலிருக்கும் தனது நண்பர் ஒருவர் வீட்டுக்குப்
போயிருக்கிறார். அப்போது அவரது செல்போன் தொலைந்துபோய் விட்டது. உடனே,
சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில்,
தொலைந்துபோன செல்போனில் டவுன்லோட் செய்திருந்த ‘கார்டியன்’ சாஃப்ட்வேர்,
அந்த போனில் புதிதாகப் போடப்பட்ட ஒவ்வொரு சிம் கார்டின் எண்ணையும் விக்ரம்
ஏற்கெனவே அந்த போனில் பதிவு செய்திருந்த அவருடைய சகோதரியின் செல்போனுக்கு
எஸ்.எம்.எஸ். செய்ய ஆரம்பித்துவிட்டது. இதையெல்லாம் சூளைமேடு போலீஸாரிடம்
விக்ரம் எடுத்துச் சொல்லியும், பெரிய நடவடிக்கை ஒன்றும் இல்லை. எனவே, நம்
அலுவலகத்துக்கு வந்தார் விக்ரம்.
விக்ரமை அழைத்துக் கொண்டு சென்னை
மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் சைபர் க்ரைம் உதவி ஆணையர்
அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு உதவி ஆணையர் டாக்டர் சுதாகரிடம் புகார்
செய்தோம். அவரிடம் ‘கார்டியன்’ சாஃப்ட்வேர் பற்றியும் அது அனுப்பிய சிம்
கார்டு எண்களையும் சொன்னவுடன் மிகவும் உற்சாகமானார். உடனடியாக, திருடு போன
செல்போன் தற்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும்
நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். மறுநாள் பிற்பகல் நம்மையும் விக்ரமையும்
அழைத்த உதவி ஆணையர் டாக்டர் சுதாகர், திருப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட
விக்ரமின் செல்போனை அவரிடம் ஒப்படைத்தார்.
‘‘விக்ரமின் செல்போன்
நான்கைந்து கைகள் மாறி கடைசியாக திருப்பூரில் இருந்ததை எங்கள் புலன்விசாரணை
மூலம் கண்டுபிடித்தோம். இதற்கு விக்ரம் தன் போனில் போட்டிருந்த
‘கார்டியன்’ சாஃப்ட்வேர்தான் பெரிதும் உதவியது. பொதுவாக, சென்னையில்
மாதம்தோறும் சுமார் 150 முதல் 200 செல்போன்கள் காணாமல் போவதாகப் புகார்கள்
பதிவாகிறது. ஐ.ஈ.எம்.ஐ. எனப்படும் செல்போனின் தனி அடையாள குறியீட்டு எண்
குறிப்பிட்டு வரும் புகார்களை செல்போன் சேவை வழங்கும் ஆபரேட்டர்கள் மூலம்
கண்காணித்து, காணாமல் போன செல்போன்களை மீட்டு வருகிறோம். எழுபது சதவி
கிதத்துக்கு மேல் ரெக்கவரி செய்து உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்
கப்பட்டு வருகிறது. செல் போன் திருட்டைத் தடுக்க வேண்டுமென்றால்,
கண்டிப்பாக பழைய செல்போன்களை வாங்காதீர்கள். ஒருவேளை தெரிந்தவர்கள்
பயன்படுத்திய செல்போனை வாங்க நேர்ந்தால் பில்லைக் கேட்டு வாங்குங்கள்.
பெரும்பாலும் பழைய செல்போன்களை வாங்குபவர்கள் திருட்டு போனை வாங்கிய வழக்
கில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. அடுத்து, செல்போன்
வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் செல்போனின் தனி அடையாள எண்ணான
ஐ.ஈ.எம்.ஐ. எண்ணைத் தனியாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள்
செல்போனில் *#06# என்று அழுத்தினால் போதும்... ஐ.ஈ.எம்.ஐ. எண்ணைத் தெரிந்து
கொள்ளலாம். நவீன ரக செல்போன்களை வைத்திருப்பவர்கள் ‘கார்டியன்’ போன்ற
சாஃப்ட்வேர்களைப் பதிந்து வைத்துக் கொண்டால், செல்போன் திருடு போனால் அதனை
எளிதில் கண்டுபிடிக்க முடியும். சென்னைக்குள் இருப்பவர்கள் தங்கள் செல்போன்
காணாமல் போனால் cybercrime@rediffmail.com(சைபர்க்ரைம் @
ரிடிஃப்மெயில்.காம்) என்ற மின்னஞ்சலில் புகாரை அனுப்பினால் அதனடிப்படையில்
உரிய நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கும்’’ என்றார் டாக்டர் சுதாகர்.
‘கார்டியன்’
சாஃப்ட் வேர் மூலம் தன் செல் போன் உடனடியாகக் கண்டு பிடித்துத்
தரப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த விக்ரம், ‘‘கார்டியன்சாஃப்ட்வேரை
http://www.download.com/Guardian/3000-11138_4-10612971.html,
http://www.symbian-toys.com/guardian.aspx
ஆகிய இணையதள முகவரிகளில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்’’
மொத்தத்தில், விலை உயர்ந்த செல்போன்களுக்கு ‘கார்டி யன்’ போன்ற இலவச சாஃப்ட்வேர்கள் நிச்சயமாகவே ‘கார்டியன்’தான்!
செல்போன்
திருட்டு தடுப்பு சாஃப்ட்வேரான ‘கார்டியனை’ கட்டுரையில்
குறிப்பிட்டிருக்கும் இணைய தளங்கள் மூலமாக கம்ப்யூட்டரில் இலவசமாக
டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிறகு, டேட்டா கேபிள் மூலமாக செல்போனில்
குறிப்பிட்ட இந்த சாஃப்ட்வேரை பதிந்து கொள்ளலாம். ‘நோக்கியா’ கம்பெனி
மாடல்களான 6600, 7610, 6630, 6670 என்&70, 72, 80, 93, 95 ஆகிய
செல்போன்களில் இந்த சாஃப்ட்வேர் சிறப்பாக செயல்படுகிறது. பெரும்பாலும்,
இந்த மாதிரியான செல்போன்களை வாங்கும்போது இணை உபகரணங்கள் என்று சொல்லி
கொடுக்கப்படும் சார்ஜர், ஹேண்ட்ஸ் ஃப்ரீ, மைக் போன்ற பொருட்களில் இந்த
டேட்டா கேபிளும் அடங்கும். மேலே குறிப்பிட்ட இந்த மாடல் செல்போன்களைத்
தவிர, ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான செல்போன்களில்
இதுபோன்ற திருட்டுத் தடுப்பு சாஃப்ட்வேரை நாம் பதியவைக்க முடியாத சூழ்நிலை
இருக்கிறது. அந்த குறைபாட்டை நீக்குவதற்கான முயற்சியில் தற்போது தீவிரமாக
ஈடுபட்டு வரும் செல்போன் நிபுணர்கள், ‘இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா
செல்போன்களுக்கும் திருட்டு தடுப்பு சாஃப்ட்வேரை பதிய வைக்கும் முயற்சி
சாத்தியப்படும்’ என்கிறார்கள்.
நன்றி:http://atozthagavalkalangiyam.blogspot.in/

Permissions in this forum:
You cannot reply to topics in this forum