தேவனுடைய வாக்குதத்தத்தில் உரிமை கொள்ளுங்கள்:
Sat Feb 21, 2015 8:48 pm
மிக மோசமாய் பின்மாற்றமடைந்த தன் ‘கெட்ட குமாரனுக்கு’ அந்த தகப்பனோ, விலையுயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வந்தார்!
சுவிசேஷம் மிளிர்ந்திடும் செய்தி கேளுங்கள்:
“தோல்வியடைந்தவர்களுக்கும், தேவன் ‘தன்னுடைய மிக அருமையானதைக்’ கொடுக்கிறார்! அவர்களும் ஓர் ‘புதிய துவக்கம்’ பெற்றிட முடியும்! தேவன் ‘ஒருவரையும்’ கைவிடுவதேயில்லை!” இதுவே வீழ்ச்சியடைந்தவர்களுக்குத் தேவன் வழங்கும் விலையேறப் பெற்ற ஆறுதல்! உங்களின் தோல்விகள் எதுவாயிருந்தாலும், நீங்கள் தேவனுக்குள் ஓர் புதிய துவக்கத்தை ‘இன்றே’ துவங்கமுடியும்! இதற்கு முன், ஆயிரம் புதிய துவக்கம் செய்து, ஆயிரம் முறையும் வீழ்ச்சியே அடைந்திருந்தாலும்..... இன்று, 1001 - ம் புதிய துவக்கத்தை நீங்கள் துவங்க முடியும்! இப்போதுகூட “மகிமையான விசேஷங்களை” உங்களிடத்தில் தேவன் செய்திட முடியும்! இன்றுவரை ‘இனி முடியாது!’என நீங்கள் எண்ணியிருந்த ஜீவிய பகுதிகளில்...... ‘தேவனால் முடியும்!’ என அவர் மீது உறுதியான விசுவாசமும், நம்பிக்கையுடனும் இருங்கள்!! (ரோ 4:20).
நீங்கள் தேவனுடைய வாக்குதத்தங்களை ஒவ்வொரு நாளும் உரிமையோடு சொந்தம் கொண்டிருந்தால், கடந்துபோன எல்லா வருடங்களைக் காட்டிலும், இந்த வருடம் உங்களுக்கு மேன்மை கொண்டதாய் மாறும்! எப்படியெனில், எல்லா இஸ்ரவேலர்களையும் கானான் தேசத்திற்குள் அழைத்துச் செல்வேன் என தேவன் வாக்குரைத்தும்...... யோசுவாவும், காலேப்பும் மாத்திரமேவிசுவாசித்தபடியால்,அவர்கள் மாத்திரமே பிரவேசித்தார்கள்! (யாத் 3:17). உங்கள் இருதயத்தில் விசுவாசித்ததை, வாயினால் அறிக்கை செய்யவும் வேண்டும்!!(ரோ 10:8-9) என்றே வேதம் கூறுகிறது!!
கீழ்காணும் 8 வாக்குதத்தங்களை அறிக்கை செய்து, அதை இந்த ஆண்டே சுதந்தரியுங்கள்:
1. பிதாவாகிய தேவன், இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்..... ஆகவே, நான் எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பேன்! (யோ 17:23).
2. தேவன் என் பாவங்களையெல்லாம் மன்னித்துவிட்டார்..... இனியும் ‘குற்ற உணர்வோடு’ நான் வாழ்ந்திடமாட்டேன்! (1யோ 1:8, எபி 8:12).
3. பரிசுத்த ஆவியினால், தேவன் என்னை நிரப்புவார்..... ஆகவே, ஒவ்வொரு செயலிலும் நான் பெலவானாயிருப்பேன்! (லூக் 11:13).
4. தேவன், எனது குடியிருப்பின் எல்லையை தீர்மானித்திருக்கிறார்... ஆகவே, அதில் நான் ‘போதுமென்று’ இருப்பேன்! (அப் 17:26, எபி 13:5).
5. என் நன்மைக்கென்றே, எல்லா கட்டளைகளையும் தேவன் தந்துள்ளார்!... ஆகவே, அவரது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவேன்! (1யோ 5:3, யாத் 10:13).
6. என்னை பாதிக்கும், எல்லா ஜனங்களையும் சம்பவங்களையும் தேவன் கண்காணிக்கிறார்...... ஆகவே, எல்லாவற்றிற்காகவும் நான் எப்போதும் ஸ்தோத்தரிப்பேன்! (ரோம 8:28, எபே 5:20, 1தெச 5:18).
7. இயேசு சாத்தானை ஜெயித்து, அவன் சத்துவத்திலிருந்து என்னை விடுவித்துவிட்டார்..... ஆகவே, நான் ஒருபோதும் பயப்படேன்! (எபி 2:14-15; எபி 13:6).
8. தேவன் என்னை ஆசீர்வாதமாய் மாற்ற விரும்புகிறார்..... ஆகவே,நானும் மற்ற வர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பேன்! (ஆதி 12:2, கலா 3:14).
தேவனுடைய வாக்குதத்தமும், நம்முடைய விசுவாசமும் இரண்டு மின்சார வயர்களைப்போல் உள்ளது! அந்த மின்சார வயர்களைப் போலவே, ஒரு வயர் மற்றொரு வயரைத் தொடும்போதுதான், ‘வல்லமை’ அந்த வயர்களில் பாய்ந்து சென்றிட முடியும்! அதுபோலவே, தேவனுடைய வாக்குதத்தத்தை, நம் விசுவாசம் தொடும்போது, ஜீவன் தரும் ‘வல்லமை’ நம்மில் பாய்ந்தோடும்!!
ஆமென் அல்லேலூயா.!!!
Sharon Gods House Ministries.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum