மாதவிடாய் சுழற்சியும் அதனை கையாளும் விதமும்
Wed Feb 18, 2015 6:35 pm
1-4 நாட்கள்: கருத்தரிப்பு நிகழாததால், கருப்பையின் உட்சுவர் கழன்று இரத்தப் போக்காக வெளிப்படுதல். முதல் நாள் குறைவாகவும், இரண்டாம் நாள் அதிகமாகவும், மூன்றாம் நாள் போக்கு தணிந்து விடுதல். அதிக நோய்ப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு 4வது மற்றும் 5வது நாட்களுக்கும் நீடிக்கும்.
கையாளும் விதம்: இந்த நாட்களில் தாம்பத்திய உறவு கொள்ளாது இருத்தல் நன்று. அப்படி உறவு கொண்டால், தரித்த கருவானது தங்க முயற்சிக்க, மாதப்போக்கு வெளிவர முயற்சிக்க இரண்டுக்கும் நடுவில் ஹார்மோன் சுரப்பானது திண்டாட வேண்டி இருக்கும். இன்னொரு வி'யம் என்னவென றால், உறவு கொள்ளும் கணவருக்கு பிறப்புறுப்பு நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
5-8 நாட்கள்: இரண்டு சினைப்பை (ழுஎயசல) களில் ஒன்றிலிருந்து, ஒரு சினை முட்டை(நுபப)யானது முற்றி வெளிவரத் தயாராய் இருக்கிறது. கருப்பையின் உட்சுவரானது மீண்டும் தடிமனாகத் தொடங்குகிறது. இந்த நாட்களில் தாம்பத்திய உறவு கொண்டால், கருத்தரிப்பு நிகழும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.
கையாளும் விதம்: மனைவி, தாம்பத்திய உறவை மிகவும் புத்துணர்வாகவும், பாதுகாப்பாகவும் உணர்வார். கணவர் உறவை இலகுவாகவும், சுகமாகவும் உணர்வார்.
9-12 நாட்கள்: முற்றிய சினை முட்டை யானது சினைப் பையிலிருந்து வெடித்து வெளிவந்து கருக்குழாயில் (குயடடழியைn வுரடிந) கருப்பையை (ருவநசரள) நோக்கிய பயண த்தை தொடங்குகிறது. தரித்த கருவை (குநசவi டணைநன நுபப) ஏற்றுக் கொள்ள கருப் பையை தயார் படுத்துவதில் மும்முரமாக இருக்கும். கருப்பையின் உட்சுவர் தடித்தல் தொடரும். கருத்தரிக்கும் வாய்ப்பு மிதமாக உள்ள நாட்கள்.
கையாளும் விதம்: மனைவி உறவு கொள்ள ஆவலாக இருப்பார். இதனைப் புரிந்த கணவன் இல்லறம் மேம்பட பயன்படுத்திக் கொள்வான்.
13-16 நாட்கள்: சினை முட்டையானது முழு முதிர்ச்சி அடைந்து, சினைப் பையிலி ருந்து முழுமையாக விடுபட்டு, கருக்குழாய் திரவத்தில் முழுமையான வீரியத்துடன் மிதந்துச் செல்கிறது, கருப்பை தரித்தக் கருவை ஏற்றுக்கொள்ளும் தயார் நிலையில் இருக்கிறது. கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ள நாட்கள்.
கையாளும் விதம்: மனைவியின் தாம்பத்திய வேட்க்கை அதிகமாக உள்ள நாட்கள். இல்லற இணக்கம் அதிகமாக உள்ள நாட்களும் இதுவே. உறவு கொள்வது மிகவும் இலகுவாகவும், இதமாகவும் இருக்கும். பெண்மையின் உச்சத்தை உணர முடியும்.
17-20 நாட்கள்: சினை முட்டையானது கருப் பையின் அருகே வந்து சேர்கிறது. கருப்பையின் உட்சுவர் இன்னமும் தடிமனாவதைத் தொடர்கிறது. தரித்தக் கருவை ஏற்றுக்கொள்ள இப்பொழுதும் கருப்பைத் தயாராய் உள்ளது. கருத்தரிக்கும் வாய்ப்பு மிதமாக உள்ள நாட்கள்.
கையாளும் விதம்: தாம்பத்திய உறவு கொள்ள மிதமான ஆவலுடன் மனைவி இருப்பார். கணவனும் அதனை அனுசரித்து இல்லற இணக்கத்தை தக்கவைத்துக் கொள் ளலாம்.
21-24 நாட்கள்: சினை முட்டை கருத்தரித்திருப்பின் கருப்பை உட்சுவரில் ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. கருத்தரிப்பு நிகழ்ந்திருப்பின், உடலில் சற்று அதிக வெப்பமும், மார்பகக் காம்பு சற்று தடித்தும் இருக்கும். கருத்தரிகாவிடில், கருப்பையின் திரவத்தில் சினை முட்டைக் கரைய முற்படுகிறது. கருத்தரிப்பு நிகழும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும் நாட் கள்.
கையாளும் விதம்: மனைவிக்கு, உடல் உறவில் அதிக நாட்டமிருக்காது. மனைவி அன்பை அதிகமாக எதிர்பார்க்கும் தன்மை யில் இருப்பார்.
25-28 நாட்கள்: கருத்தரித்திருப்பின் முகத்தில் தேஜஸ்சும், தோலில் மினு மினுப் பும் சற்று கூடியிருக்கும். தரித்தக் கரு கருப் பையின் உட்ச் சுவரில் பதிந்து ஒரு செல் லில் இருந்து 2, 4, 8, 16, 32, 64 என்று பெருக ஆரம்பிக்கிறது. கருத் தரிக்காவிடில், சினை முட்டை முற்றிலும் அழிந்து, கருப் பையின் உட்சுவர் சுழல ஆரம்பிக்கிறது. கருத்தரிக்கும் வாய்ப்பு அறவே இல்லாத நாட்கள்.
கையாளும் விதம்: மனைவிக்கு, உடல் உறவில் நாட்டமே இல்லாதிருக்கும். "ஆளை விடு சாமி!" என்ற மனநிலையில் இருப்பார். அன்பும் அரவணைப்பும் அதிகம் தேவைப்படும் நாட்கள். கருவுற்றிருந்தால், இந்த அரவணைப்புக்கு ஏங்கும் தன்மை மிக அதிகமாக இருக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum