ஆணிகால் உள்ளதா அதனை இலகுவாக விரட்டியடிக்க!!
Sat Sep 05, 2015 8:25 pm
#ஆணிகால் உள்ளதா அதனை இலகுவாக விரட்டியடிக்க!!
காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும். அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா… ஆளை உண்டு, இல்லைனு ஆக்கிடும்.
இந்த கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால் ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம் வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையான வைத்தியம் பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும்போது… எதுக்காக இந்த முரட்டு வைத்தியம்?
#அம்மான்_பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கற இடத்துல தடவி வந்தா… அந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலி கொறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
#மருதாணி இலை கொஞ்சம், #மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சு கட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்… துணியைக் காணோம்னு பாய்ஞ்சி ஓடிப்போயிரும் ஆணி.
visit: fb.com/OurErode
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா… மூணு நாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண் உண்டாகும். அப்படி வந்தா… ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும் காணாமப்போயிரும்.
#ஆணிகால்_வர_காரணமாகும்_காலணிகள்.!
கால்களில்தான் அதிகமான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. கால் விரல்களின் இடுக்குகளில் வியர்வை தங்கினாலோ, அதிக நீர் கோர்த்தாலோ தடித்துப்போய் காளான் குடை போல தோன்றும். அதிகப் புழுக்கம், அதிகமாக மழைநீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி, சிரங்கு போன்றவை வரும்.
இவர்கள் காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் பருத்தியினால் ஆன காலுறைகளை அணிய வேண்டும். கால் எப்போதும் உராயக்கூடியதும், அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதுமாகத்தான் இருக்கும். அதனால் தான் காலாணி ஏற்படுகிறது.காலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் அடர்த்தியாகி வலி ஏற்படுகிறது. சீரான வடிவத்தில் உள்ள காலில் காலாணி வராது.
அப்படியே வந்தாலும் வலி அதிகமாக இருக்காது. வெறுங்காலுடன் நடப்பது, காலில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்வது, பொருத்தமில்லாத செருப்பு அணிவது போன்றவைதான் இதற்குக் காரணம். வெதுவெதுப்பான தண்ணீரில் காலை சில நிமிடங்கள் வைத்துக் கொண்டால் வலி குறையும். காலாணியும் வராது.
எனவே, சரியான காலணியை அணிந்து காலாணியைத் தவிருங்கள். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும்போது கால்களை சுத்தமாக கழுவிக்கொள்வதுடன், வெளியில் போய்விட்டு வீடு திரும்பினாலும் சுத்தம் செய்வது அவசியம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum