விரிசல்களை தடுக்கும் நவீன முறைகள்
Sat Feb 14, 2015 9:07 pm
கட்டுமானங்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துபவை விரிசல்கள். சுவர்களிலும், அஸ்திவார பகுதிகளிலும் இவை ஆக்கிரமித்து கட்டுமானத்தை ஆட்டம்காண செய்துவிடுகின்றன. பொதுவாக விரிசல்கள் ஏற்படுவதற்கு வீடுகளின் அருகில் இருக்கும் மரங்கள், ஈரத்தன்மையான நிலப்பரப்புகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
தற்போது கட்டுமானத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுவரும் வேலையில் விரிசல்களை சரிசெய்யும் முறையும் மாறுபட்டுள்ளது. விரிசல்கள் வீட்டின் தாங்குத்திறனை உருகுலைக்க கூடியவை. சுவர்களையும், அஸ்திவாரங்களையும் நிலைகுலைய செய்யும் விரிசல்களை ‘சிலாப் ஜாக்கிங்’, ‘பியரிங்’ போன்ற முறைகள் மூலம் சரிசெய்ய முடியும்.
சிலாப் ஜாக்கிங்
சிலாப் ஜாக்கிங் என்பது விரிசல்கள் விழுந்த இடைவெளிகளில் சிமெண்ட் கலவைகளை நிரப்பு இயந்திரங்கள் மூலம் செலுத்தி விரிசல்களை சரிசெய்வதாகும். இந்த முறையில் மணல், சிமெண்ட், சுண்ணாம்பு சாந்தினை பயன்படுத்துகின்றனர். இதனை கொண்டு விரிசல் இடைவெளிகளை நிரப்புவதால் கட்டுமானம் வலுப்படுத்தப்படுகிறது. இது நிரந்தரமான முறை என்பதால் இதனை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சரிசெய்ய தேவையில்லை.
பியரிங் முறை
அஸ்திவார விரிசல்களை சரி செய்வதற்கு பியரிங் முறை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் கம்பிகளை கொண்டு வீட்டின் அஸ்திவார அமைப்புகளை பலப்படுத்துகின்றனர். இதனால் வீட்டில் ஏற்படும் விரிசல்கள் சரிசெய்யப்படுவதுடன் அஸ்திவாரப்பகுதிகள் பூமிக்குள் பதியாமலும் பாதுகாக்கப்படுகிறது. இந்த முறையில் விரிசல்களை சரிசெய்ய குறைந்த நேரமே தேவைப்படுவதால் வல்லுநர்கள் இந்த முறையை பரிந்துரைக்கின்றனர். சிலாப் முறைகளை ஒப்பிடும் போது பியரிங் முறையில் செலவுகள் குறைகின்றன.
பியரிங் முறையில் எளிமையாக விரிசலை சரி செய்வதற்கு சில வழிமுறைகளை பார்ப்போம்.
* இந்த முறையில் அஸ்திவாரங்களை பலப்படுத்த அஸ்திவார பகுதியில் 3ஜ்4 இன்ச் அளவில் சுமார் 10 இன்ச் அளவுக்கு பள்ளம் தோண்ட வேண்டும்.
* அடிபரப்பில் திடமான பரப்பு கிடைக்கும் வரை தோண்டுவது ஹட்ராலிக் கம்பிகளை வலுவாக தாங்கிக் கொள்ளும். இந்த முறையில் கட்டிடங்களை ஹட்ராலிக் கம்பிகளை கொண்டு வலுப்படுத்துகின்றனர். இதனை கட்டுமானத்தின் தரைப்பகுதியுடன் இணைத்துவிடுகின்றனர்.
* தரைப்பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மணல் பரப்பிற்கு மாற்றாக புதிய மணல் நிரப்பப்பட்டு அஸ்திவாரப்பகுதி புனரமைக்கப்படுகிறது.
* இதில் புஸ் பியர்ஸ் என்ற மற்றொரு செயல்பாடும் உள்ளது. இது கட்டிடத்தினை தாங்க கம்பி சுருள் (ஸ்பிரிங்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பொருத்துவதினால் பியர்ஸ் கம்பிகளுக்கு அழுத்தம் செல்லாமல் ஸ்பிரிங் அமைப்புகளே அழுத்தத்தை பெற்றுக் கொள்கின்றன.
* இதனை பொருத்தும்போது தரைப்பகுதியில் அழுத்தத்தினை தாங்கக்கூடிய இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் கம்பிகள் வலுவற்ற பகுதியில் நிறுத்தப்பட்டால் அவை அழுத்தம் அதிகரிக்கும் போது உள் பதிய வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற வழிமுறைகளை பயன்படுத்தி அஸ்திவார விரிசல்களை எளிமையாக சரிசெய்ய முடியும். மேலும் இந்த முறைகளை கட்டுமான நிறுவனங்களும் செய்து தருகின்றன. கட்டுமான நிறுவனங்களின் உதவியின்றி செய்யவிரும்பினால் ஹட்ராலிக் கம்பிகளை கவனமாக வாங்க வேண்டும். ஏனெனில் போலி கம்பிகளால் ஏமாற்றப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum