நீர்க்கசிவு, விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ்
Mon Dec 14, 2015 8:12 am
கட்டுமான வேலைகள் நடைபெறும் நேரத்திலேயே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்கவல்ல சேர்மானப் பொருளாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறது பெனிட்ரான் அட்மிக்ஸ் (Penetron Admix) எனப்படும் கலவை. இது அண்மைக்கால அதிநவீனக் கண்டுபிடிப்பு. கான்கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வதில் ஈடு இணையற்றது.
பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை கான்கிரீட்டைத் தயாரிக்கும் இடத்திலேயே, தயாரிப்பு வேலைகள் நடக்கும் போதே கலக்கலாம். ஆலைகளில் தயாரித்து எடுத்து வரப்படும் கான்கிரீட் எனில் அந்த ஆலைகளிலேயே கலந்து கொள்ளலாம். கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கப்படுவதாக இருந்தால் அதே இடத்திலேயும் கலக்கலாம்.
பெனிட்ரான் அட்மிக்ஸ் சேர்மானத்தைக் கான்கிரீட்டுடன் எவ்வளவு அளவுக்குக் கலப்பது? கான்கிரீட்டில் இடம் பெற்றிருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட்களின் எடையில் நூற்றுக்கு 0.8 என்ற விகிதத்தில் கலந்தால் போதும். இந்த முறையைப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கனமானதாக இருக்கும். தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மீண்டும் தனி வேலைகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஏற்கனவே இடப்பட்டுள்ள கான்கிரீட்டா? அதனால் பரவாயில்லை. அதன் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ஆலைகளில் முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், நேரத்தில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.
நிரூபணம் தேவையா?
பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையின் பலன்களைக் சோதித்துப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் ஒரு கட்டுமானத்தில் சில சோதனைகளை மேற்கொண்டார்கள். ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி கட்டும் வேலை. அதில் இந்தக் கலவையைப் பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் இந்தக் கசிவின் வேகம் குறைந்தது. சொட்டுச் சொட்டாக மட்டுமே நீர் வெளியேஷூயது. தொட்டியில் இருந்த நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களில் மட்டும் ஈரம் தென்பட்டது. இது தொட்டியின் விளிம்பிலிருந்து 7 முதல் 10 செ.மீ ஆழம் வரை காணப்பட்டது.
இந்த நேரத்திற்குப் பிறகு, படிகங்கள் உருவாகி வருவதை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. வெடிப்புகளை இந்தப் படிவங்கள் அடைத்துக் கொள்வதைக் கண்ணால் காண முடிந்தது. முழுமையாக ஏழு நாட்கள் கழிந்த பிறகு எந்தவொரு வெடிப்பும் படிகங்களால் அடைக்கப்படாமல் இல்லை என்பதை உணர்ந்தார்கள். படிகங்கள் தாமே வளர்ந்து வெடிப்புகளை அடைத்துக் கொள்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆயிற்று.
கடலுக்குள்ளும் வேலை செய்ய ஏற்ற பெனிட்ரான் அட்மிக்ஸ் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் எழும் தேவைகள் பலவிதமானவை.
துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், ஆழ் கடல் துரப்பண மேடைகள் போன்ற இடங்களில் உள்ள கட்டுமானங்களின் பெரும் பகுதி எப்போதும் கடல் தண்ணீருக்குள்தான் மூழ்கிக் கிடக்கும்.கடல் தண்ணீரில் உள்ள குளோரைட் கான்கிரீட்டுக்குள் புக நேர்ந்தால் கம்பிகளை அரித்து விடும். கம்பிகள் விரைவில் இற்றுப் போய் விழுந்துவிடும்.இது போன்ற தொல்லைகளைத் தடுக்க வேண்டு
மானால் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அமையும்.
- பில்டர்ஸ் லைன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum