உலகில் துன்பப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
Sat Feb 14, 2015 9:57 am
உங்களுக்கு தெரியுமா??
ஓர் நாளில் சராசரியாக சுமார் 10 அல்லது 11 கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர் கொண்டிருக்கின்றனர்.
ஒரு மாதத்தில் 322 கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர்
ஓர் மாதத்தில் 214 ஆலயங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன.
ஓர் மாதத்தில் 772 கிறிஸ்தவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுகின்றனர். தூசித்தல், தொந்தரவு செய்தல், கட்டாயமாக மதம் மாற்றுதல், மதத்தை காட்டி ஏமாற்றுதல், காதல், வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தி அருகில் இருப்பவர்களை தொந்தரவு செய்தல், கர்ப்பளித்தல் என்ற பல பொய்யான வழக்குகளில் கிறிஸ்தவர்களை தொடர்பு படுத்தி தண்டனை பெற்று தந்து அதில் மகிழ்ந்து களிகூரும் சாத்தானின் அடிமைகள் உலகமெங்கும் பெருகி வருகிறார்கள்.
இவைகள் ஏன் கிறிஸ்தவர்களுக்கு நடக்கிறது என்ற பல கேள்விகள் வருகின்றன. பரிசுத்த வேதாகம வசனங்கள் நிறைவேற கிறிஸ்தவர்கள் தங்களை ஒப்புகொடுத்து வருகிறார்கள்.
லூக்கா 21:12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
இந்த கொடுமைகள் இன்று நேற்று நடந்தது அல்ல. 2000 வருடங்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டது இன்று நிறைவேறி கொண்டிருக்கிறது. இந்திய தேசம் போன வருடத்தில் தான் முதல் 30 பட்டியலுக்குள் வந்தது. இப்பொழுது பல கொடுமைகளால் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்துவதன் மூலம் 21ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
2014ம் ஆண்டு பட்டியல்
https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1423207270./651163421664526/?type=3&theater
சமீபத்தில் டெல்லி வட்டாரத்தில் 5 கிறிஸ்தவ தேவாலயங்கள் அடுத்ததுது தாக்கப்பட்டது. இதை எந்த பிஜேபி தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை. கிறிஸ்தவர்கள் தெருவில் இறங்கி அமைதி ஊர்வலம் நடத்தியதில் சபை ஆயர்களும், கன்னியாஸ்திரிகளும் அடித்து ரத்த கரையோடு கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலகங்கள் அதிகரித்து உள்ளது. இன்னமும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே சாவான். அவனவன் செய்யும் பாவமான காரியங்கள் அவனின் சந்ததியை நிச்சயம் அழிக்கும். வெளி 13:10 சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
இந்த பட்டியலில் வட கொரியாவும் சோமாலியாவும் முதல் 2 இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளன. பாலஸ்தீனம், சீனா, ட்ஜ்பௌடி மற்றும் கென்யா இந்த ஆண்டு முதல் 30தில் நுழைந்துள்ளது. இந்த நாடுகளில் கிறிஸ்தவர்களை ஒடுக்கும் நடவடிக்கை மேலோங்கி வருகிறது.
உலகிலேயே கிறிஸ்தவர்கள் அதிகமாக கொடுமைபடுத்தப்படும் நாடுகள் இங்கே பட்டியலில் இடம்பிடிக்க போராடுகின்றன. இதில் முக்கியமாக சிகப்பு சதுரத்தை அடையாளமாக கொண்டுள்ள நாடுகள் அதிக கொடுமைகளை செய்து வருகிறது. அதாவது கொலை, தலை துண்டித்தல், கடத்தல், உயிரோடு புதைத்தல், கிறிஸ்தவ பெண்களை கற்பழித்து கொல்வது, கிறிஸ்தவ குடும்பங்களை மிரட்டி மதம் மாற செய்வது, கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க கூடாது, வேரோடு அழித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிவேகமாக செயல்பட்டு வரும் நாடுகளில் முதல் பத்து நாடுகளை இங்கே பட்டியலிட்டு உள்ளேன்.
முக்கியமாக சிரியா தேசம் மற்றும் இராக் தேசங்களில் வாழ்ந்த பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ குடும்பங்கள் உயிரோடு இல்லை. பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ தேவாலங்கள் சுவடுகள் இல்லாமல் போனது. இதற்கு காரணம் இங்கு வேகமாய் இயங்கி வரும் இஸ்லாமிய ISIS மற்றும் இதர தீவிரவாத இயக்கங்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்பதும் அல்லது வெட்டி கொலை செய்வதும் இந்த தீவிரவாதிகளுக்கு பொழுதுபோக்கு. சொந்த நாட்டை சேர்ந்த பல கிறிஸ்தவர்கள் பாரம்பரிய மண்ணை விட்டு விரட்டப்பட்டு வீடு இழந்து பல நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கா, நைகீரியா, சூடான் போன்ற நாடுகள் போகோ ஹராம், முஜாகிதீன், என்ற இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து பல ஆயிரங்கள் காணமல் போயின. இதில் முக்கியமாக நைஜீரியா குழந்தைகள், பெண்களை கடத்தி கற்பழித்து கிடைத்த விலைக்கு விற்கும் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய தீவிரவாத கும்பல் பல கொடுமைகளை முன்னின்று செய்து வருகிறது. ஆனால் இந்த ஆப்ரிக்க தேசங்களில் ஒரு வருடத்திற்கு 6 லட்சம் பேர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு வருகின்றனர். எங்கு கிறிஸ்தவம் சிதறடிக்கப்படுகிறதோ அங்கு கிறிஸ்தவம் வேகமாய் வளர்கிறது.
மஞ்சள் சதுர வர்ணத்தை சார்ந்துள்ள நாடுகளில் கிறிஸ்தவம் வெளிப்படையாக இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை கட்டவில்கப்பட்டுள்ளது. சபைகள் இடிப்பதும், கிறிஸ்தவர்களை கொல்வதும் இந்த நாடுகளில் மேலோங்கி வருகிறது. இந்த நாடுகளில் மிக முக்கியமாக எகிப்த்து, மியான்மர், கொலம்பியா ஜோர்டான், ஓமன், இந்தியா, சீனா, பாலஸ்தீனம் போன்ற நாடுகள் மேல் அம்பு குறிகளை அடையாளம் கண்டுள்ளது.
வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். வேதாகம வசனங்கள் வேகமாக நிறைவேறி கொண்டிருக்கின்றன. தேவன் இந்த வருடம் உங்களை அவருடைய பெரிதான கிருபையால் தாங்கி வழிநடத்துவாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
https://www.opendoorsusa.org/newsroom/tag-news-post/persecution-of-christians-reaches-historic-levels-conditions-suggest-worst-is-yet-to-come/
https://www.opendoorsusa.org/christian-persecution/
Re: உலகில் துன்பப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
Sat Feb 14, 2015 9:58 am
தயவு செய்து இந்த பதிவை முழுமையாக படிப்பீர்களா?
நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு.
கண்ணீர் - மனதில் ஏற்படும் பாரம் கண்ணீரின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் சிறிது நேரங்களில், அல்லது நாட்களில் மனது இலகுவாகிறது. தேவன் நமக்கு கொடுத்த மிகபெரிய ஆறுதல் தான் இந்த கண்ணீர். உங்கள் துக்கம் கண்ணீர் என்னும் தண்ணீரினால் கரைகிறது. இந்த கண்ணீர் மனிதர்கள் பல்வேறு காரியத்திற்கு பயன்படுத்துகிறார்கள். பிறக்கும் குழந்தை தனக்கு ஏற்ப்படும் வலிகளை அம்மாவிடம் சொல்ல தெரியாது. அது கண்ணீரினால் வெளிப்படுத்தும். வளரும் பிள்ளைகள் பெற்றோரிடம் உள்ள பயத்தை கண்ணீர் மூலம் வெளிப்படுத்துவார்கள். வாலிபர்கள் தங்கள் எதிகால கவலை, காதலில் ஏற்படும் மன வலிகள், நண்பர்களின் ஏமாற்றங்களை கண்ணீரினால் வெளிப்படுத்துவார்கள். குடும்ப வாழ்க்கையில் வரும் ஏமாற்றங்கள் கண்ணீரை வரவழைக்கும். இப்படி மனிதன் கண்ணீரை பல வழிகளில் வெளிப்படுத்தி ஆறுதல் அடைகிறான். ஆனால் வேதாகமத்தில் இந்த கண்ணீர் எதற்காக சிந்தப்பட்டுள்ளது?
பல மனிதர்கள், போதகர்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவும் கண்ணீர் விட்டதாக இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளது. (லூக்கா 19:41,
யோவான் 11:35)
சங்கீதம் 56:8 என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
தேவன் உங்கள் கண்ணீரை நினைத்திருக்கிறார். உங்கள் அலைச்சல்களை மறவார். தைரியமாய் இருங்கள்.
சங்கீதம் 126:5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
நிச்சயம் உங்களுக்கு பதில் உண்டு. மார்த்தாள் கண்ணீரோடு அங்கலாய்த்த போது இயேசு மனதுருகினார். அவர் ஆவியில் கலங்கி கண்ணீர் விட்டார். அவர் நம்மை போல வாழ்ந்தவர். நிச்சயம் நமது வலிகள் அவருக்கு நன்றாய் தெரியும்.
ஏசாயா 25:8 அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்
உங்கள் கண்ணீரை தேவன் துடைப்பார். அவர் உங்களை அவ்வளவாய் நேசிக்கிறார். நீங்கள் கலங்காதபடி உங்களை தம் பட்சத்தில் சேர்த்து கொள்வார்.
வேதாகமத்தில் மற்றவர்களுக்காக கண்ணீர் விட்ட சிலரை கண்டு அதிசயித்தேன். மற்றவர்கள் நன்றாய் இருக்க கண்ணீர் விட்டு ஜெபிக்கும் ஒரே மனிதன் கிறிஸ்தவனாய் தான் இருக்க முடியும்.
II கொரிந்தியர் 2:4 அன்றியும் நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்
"அதிக கண்ணீரோடே" என்ற வார்த்தையில் ஆழத்தை பாருங்கள். மற்றவர்களை கொன்று குவிக்கும் மனிதர்கள் மிருகங்கள் என்கிறோம். மற்றவர்களை சந்தோசமாய் வாழ தேவனிடத்தில், திறப்பின் வாயிலில் நிற்கும் இவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறது?
அப்போஸ்தலர் 20:31 ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
II தீமோத்தேயு 1:3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து
மேலே உள்ள வசனத்தை பாருங்கள். ஒரு நாள் இரண்டு நாள் கண்ணீர் அல்ல. மூன்று வருடங்கள். ஒருவன் பாவ வாழ்க்கையில் இருந்து புத்தி அடைவதற்கு. நாம் நம்மை அழ வைப்பவர்களை சிறிது நாட்களில் வெறுத்து விடுகிறோம். ஆனால் இங்கே மூன்று வருடங்கள் கண்ணீரோடு ஜெபித்த வீரர்கள் நமக்கு ஓர் மிகப்பெரிய சாட்சியல்லவா?
பிலிப்பியர் 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
கண்ணீரோடு மற்றவர்கள் தேவனுக்கு விரோதமானவர்கள் என்று கூறும் இவரின் இருதயம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? இன்றும் வேதாகமத்தையும், கிறிஸ்துவின் உருவம் என்ற பெயரில் பல தவறான காரியங்களை பகிர்ந்து வரும் பிசாசின் உள்ளங்கள் எத்தனை எத்தனை? பரிசுத்த வேதாகமம் ஓர் மாயை என்றும், அது போய் என்றும், கிறிஸ்து மரிக்கவில்லை எனவும், கிறிஸ்தவமே கிடையாது என்று கூறும் இருள் நிறைந்த உள்ளங்கள் இன்றும் நம்மிடையே உலாவி வருகின்றன. இவர்களுக்காக பாரத்தோடு கண்ணீரோடு ஜெபிக்க உங்களிடத்தில் வலிமை உண்டா?
அற்ப காரியங்களுக்காக கண்ணீர் விட்டு பின் தேவனை தூசிக்க துணியும் உள்ளமே..... நீயோ மேலானவைகளை நாடு. அறப்ப சுகங்களுக்காக தேவனை விற்று விடாதே.
நீ துணிகரமாய் பாவம் செய்து தேவனை தூசிப்பாயானால், அற்ப காரியங்களுக்காக தேவனை விட்டு ஒடுவாயானால் நிச்சயம் நீ சாபத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். இதற்க்கு ஆதாரமாக இரண்டு வசனங்களை தருகிறேன். காலம் கடந்த பின்னர் உன் கண்ணீர் நினைக்கப்படாது. நீ வேதனைப்படுவாய்.
எபிரெயர் 12:17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்
ஆசீர்வாதத்தை சுதந்திரிக்க நீங்கள் விரும்பியும் நீங்கள் இழப்பது அதிகமாய் இருக்கும் என்று வேதாகமம் கடுமையாய் எச்சரிக்கிறது. பாவத்தோடு விளையாடாதீர்கள், பரிசுத்தத்தில் பரிசுத்தரான இயேசு கிறிஸ்துவோடும் விளையாடாதீர்கள். உங்கள் முடிவு நினைத்து பார்க்ககூட முடியாதபடி பரிதாபமாய் இருக்கும். நீங்கள் கவலையோடு தேடியும் மனது மாறாது.
தேவனுக்கு துரோகம் செய்த யூதா ஜனங்களின் கண்ணீர் கானல் நீரானது.
மல்க்கியா 2:9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
தேவனுடைய வழிகளை கைக்கொள்ளாமல், வேதாகமத்தை மதியாமல் இருக்கும் ஜனங்கள், காதல் என்ற போர்வையில் மயங்கி அந்நிய ஸ்திரீகளை (ரட்சிகப்படாத) மணக்கும் விசுவாசிகள் (வசனம் 11), தேவனுக்கு அருவருப்பான காரியங்கள் செய்துவிட்டு (பெண்கள் பின்னால் சுற்றுவது, கவர்ச்சியான காரியங்களை தொலைக்காட்சியில் பார்ப்பது, வாரத்தில் ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்காமல் தொலைகாட்சி, சினிமா என்று கண்களை மேய விடுவது, புகை பழக்கம், மது பழக்கம், மாது பழக்கம், வலைத்தளங்களில் ஆபாசத்தை தேடுவது) காணிக்கை கொடுக்கும் நண்பர்கள் ஒன்றும் இல்லாமல் அழிந்து போவார்கள் போவார்கள். அவர்களின் கண்ணீர் வீணாய் கரையும். இது வேதாகமம் நமக்கு கொடுக்கும் பயங்கர எச்சரிப்பு.
மல்கியா 2:13. நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
நான் மேலே கூறிய கேடுகெட்ட செயலை நிர்விசாரமாய் மறுபடியும், மறுபடியும் செய்து விட்டு மீண்டும் தேவனுடைய ஆலயத்தில் வந்து கண்ணீராலும், அழுகையாலும், பெருமூசினாலும் நிரப்பும் யாவரையும் தேவன் வெறுக்கிறார்.
ஆதலால் உங்கள் கண்ணீர் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? உலகத்தில் உங்களுக்கு அனேக உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன். உலகத்தின் ஆசைகளுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள். உங்கள் ஆத்துமா பரிசுத்தம் பண்ணப்படவும், உங்கள் குடும்பத்திர்க்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.
வெளி 7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Re: உலகில் துன்பப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
Sat Feb 14, 2015 9:58 am
"நீங்கள் என்னை கொன்றுபோட்டாலும் என் இயேசுவை மறுதலிக்க மாட்டேன். நான் கிறிஸ்தவன்" - ஹபிலா
ஹபிலா அடமு என்ற போதகர் ஓர் சிறு ஆலயத்தில் தங்கி தேவனுக்கென்று ஊழியம் செய்து வந்தார். ஓர் நாள் இரவு 11 மணி அளவில் உள்ளே நுழைந்த போகோ ஹராம் என்ற தீவிரவாத கும்பல் சபைக்கு தீ வைத்தது. வெளியே ஓடி வந்த ஹபிலா, மனைவி விவியன் மற்றும் 6 வயது குழந்தை திகைத்து நின்றது. அப்பொழுது அவர்களை நெருங்கிய கும்பல் போதகரை துப்பாக்கி முனையில் மிரட்டியது. இயேசு கிறிஸ்துவை மறுதலித்து தங்கள் கடவுளை ஏற்று கொள்ள வேண்டும் என்று குடும்பத்தை மிரட்டினர்.
போதகரின் மனைவிக்கு அவர்கள் போகோ ஹராம் தீவிரவாத கும்பல் என்று புரிந்தது. மிகவும் பயந்திருந்தார். ஆனால் ஹபிலா தைரியமாக "நான் கிறிஸ்தவன்" என்று கூறினார். அவர்கள் கூற சொன்ன "shahada" என்ற அராபிய வார்த்தையையும் கூறி இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்தார்.
இதனால் கோபம் அடைந்த தீவிரவாத கும்பல் கடுமையாக தாக்கியது. தன் மரணத்தை அறிந்து கொண்ட ஹபிலா தைரியமாக முன்னே நின்று "நான் கிறிஸ்தவன், கிறிஸ்தவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்" என்றும் "நான் மரிக்க தயார்" என்றும் கூறி உள்ளார்.
இதன் பிறகு கடும் கோபம் கொண்ட கும்பல் அவரின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து சுட்டது. அதில் அவரின் கழுத்தின் ஒரு பகுதியில் பள்ளம் விழுந்தது போன்று ஆகி விட்டது. செத்துவிட்டான் என்று நினைத்த கும்பல் ஓடி விட்டது. அதற்குள் அங்கு வந்த மற்ற விசுவாசிகள் அவர்களை அனைத்து மருத்தவமனைக்கு ஓடினர்.
கடுமையான மரண போராட்டங்களுக்கு பிறகு தேவன் மீண்டும் உயிர் பெற செய்தார். இந்த படத்தில் காணப்பட்டது போன்று அவருக்கு இருந்த வெட்டு அமெரிக்க மருத்துவர்களால் சரி செய்யப்பட்டது.
தன்னை வெட்டியா தீவிரவாத கும்பலை மன்னித்துவிட்டதாகவும், தனக்கு தேவன் கொடுத்த பணியை தொடர்ந்து செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார். இந்த வைராக்கிய விதைக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
http://www.persecution.com/october2014
Permissions in this forum:
You cannot reply to topics in this forum