இப்படியும் சில பழமொழிகள் ஊப்ஸ்ஸ்... புதுமொழிகள்.
Tue Feb 10, 2015 8:00 am
சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது
* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்
* முடியுள்ள போதே சீவிக்கொள்
* பழகின செறுப்பு காலை கடிக்காது
* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி; தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி
* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.

Re: இப்படியும் சில பழமொழிகள் ஊப்ஸ்ஸ்... புதுமொழிகள்.
Tue Feb 10, 2015 6:54 pm
1. டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...
2. பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?
3. என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் “சுட்டு“தான் சாப்பிடனும்.
4. என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும்.
5. நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.
6. ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.
7. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.
8. தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.
9. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.
10. நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?

Mon Feb 16, 2015 1:35 pm
அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....
Re: இப்படியும் சில பழமொழிகள் ஊப்ஸ்ஸ்... புதுமொழிகள்.
Wed Feb 18, 2015 5:51 am
தாயிடம் மகன் கேட்கிறான் ..."எது உண்மையான அன்பு?"
தாய் - "நீ எத்தனை முறை கடுகு டப்பாவிலிருந்து பணத்தை திருடினாலும், நான் மீண்டும் அதே இடத்தில் பணத்தை வைக்கிறேனே, அதிவே உண்மையான அன்பு"
* திருட்டை ஊக்குவிக்கும் புத்திகெட்ட தாய்
தாய் - "நீ எத்தனை முறை கடுகு டப்பாவிலிருந்து பணத்தை திருடினாலும், நான் மீண்டும் அதே இடத்தில் பணத்தை வைக்கிறேனே, அதிவே உண்மையான அன்பு"
* திருட்டை ஊக்குவிக்கும் புத்திகெட்ட தாய்
Re: இப்படியும் சில பழமொழிகள் ஊப்ஸ்ஸ்... புதுமொழிகள்.
Tue Feb 24, 2015 8:37 am
பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல்மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்....அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்....ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்....ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்....அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum