டெல்லியில் கிறிஸ்தவ ஆலயம் அடித்து நொறுக்கபட்டது
Mon Feb 02, 2015 6:44 pm
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ளநிலையில் கிறிஸ்தவ ஆலயம் அடித்து நெருக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு நேற்றுஇரவு நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நெருக்கியுள்ளனர். இச்சம்பவம் இரவு 1 மணியளவில் நடந்துள்ளது. கிறஸ்தவ ஆலயத்தில் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பல்வேறு பகுதிகளுக்கு தூக்கி எறியப்பட்டுள்ளது. மற்றும் பிற பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரையில் எப்.ஐ.ஆர். எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறஸ்தவ ஆலயத்தின் சுற்றுசுவரை ஏறிகுதித்து பிரதான வாசலை திறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். "நாங்கள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை அடையாளம் காண கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகே வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. பதவிகள் ஆய்வு செய்யப்படுகிறது." என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டெல்லியில் கிறிஸ்தவ ஆலயத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது இது 5 வது சம்பவம் ஆகும். டெல்லியில் வருகிற 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் கிறிஸ்தவ ஆலய பொருட்களை அடித்து நொருக்கப்பட்டது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவை கொண்டு அவர்களை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கு எந்தஒரு குழுவுடனும் தொடர்பில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லியின் ரோகினி பகுதியில் கிறிஸ்த ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அமைக்கப்பட்ட குடில் எரிந்தது என்று கூறப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் கிழக்கு டெல்லியின் தில்சான் கார்டன் பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது தீ வைத்து எரிக்கப்பட்டது என்பதை போலீசார் உறுதிசெய்தனர். கிறிஸ்தவ ஆலயத்திற்கு உள்ளே மண்ணெண்ணெய் காணப்பட்டதை புலனாய்வு துறையினர் கண்டு பிடித்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்திலும் எழுப்பட்டது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் இதுதொடர்பாக விசாரணை நடத்தை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டார்.
நன்றி: தினத்தந்தி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum