கிறிஸ்தவ கருத்துரைகள்
Sat Jun 14, 2014 9:08 am
காலில் குத்திய முள்ளையும், கண்ணில் விழுந்த தூசியையும் நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று யாரும் எண்ண மாட்டார்கள். நாளை மனந்திரும்பிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறவர்கள் ஒருபோதும் மனந்திரும்பப் போவதில்லை
நன்றி: சகோ விஜயகுமார்
நன்றி: சகோ விஜயகுமார்
Re: கிறிஸ்தவ கருத்துரைகள்
Sat Jun 14, 2014 9:13 am
நண்பா, நாம் கையிலும் கழுத்திலும் சிலுவை அடையாளத்தை தரித்துக்கொள்வதால் கிறிஸ்தவர்களாகிவிட முடியாது. கிறிஸ்துவை மெய்யாய் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அப்படிப்பட்ட சிலாக்கியத்தை அனுபவிக்க முடியும்; அதுமாத்திரமல்ல, அவருக்குப் பிள்ளையாகவும் திகழ முடியும்
நன்றி: ரிவைவல் ராபர்ட்
நன்றி: ரிவைவல் ராபர்ட்
Re: கிறிஸ்தவ கருத்துரைகள்
Sat Jun 14, 2014 9:26 am
பாவத்தில் இருக்கும் ஒரு புறமதத்தவனுக்கு பாவத்தைக் குறித்த எச்சரிக்கை விடுத்து இயேசுவிடம் திரும்பும்படி அழைப்பதற்கு பெயர் ஊழியமாம்.
பாவத்தில் வாழும் கிறிஸ்தவனுக்கோ அல்லது ஊழியக்காரனுக்கோ பாவத்தைக் குறித்த எச்சரிக்கை விடுத்து இயேசுவிடம் திரும்பும்படி அழைப்பதற்கு பெயர் "சகோதரரை குற்றம் சொல்லுதலாம்". என்ன நியாயம் இது???????
நன்றி: சகோ.விஜயகுமார்
பாவத்தில் வாழும் கிறிஸ்தவனுக்கோ அல்லது ஊழியக்காரனுக்கோ பாவத்தைக் குறித்த எச்சரிக்கை விடுத்து இயேசுவிடம் திரும்பும்படி அழைப்பதற்கு பெயர் "சகோதரரை குற்றம் சொல்லுதலாம்". என்ன நியாயம் இது???????
நன்றி: சகோ.விஜயகுமார்
Re: கிறிஸ்தவ கருத்துரைகள்
Sat Jun 14, 2014 9:28 am
--= வேதனையான காரியம் =---
அன்றைய ஆசாரியன் ஏலியைப்போல இன்றும்
எத்தனையோ பெற்றோர் தமது பிள்ளைகளின்
தீய செயற்பாடுகளைக் கண்டும் காணாதவர்கள்போல
இருப்பது மிகவும் வேதனையான காரியம்.
தமது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்கிறார்கள்; ஆனால் சிறு வயதிலிருந்து
தேவனை அறியும் அறிவிலே பிள்ளைகளை வளர்ப்பதற்கு
முழு முயற்சியும் எடுப்பதில்லை. பிள்ளைகள் வளர்ந்தபின்பு, அவர்கள் தவறு செய்யும்போது, அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்; ஏற்றவேளையில் அவர்களே தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்துவார்கள் என்று தப்பிக்கொள்கிறார்கள்.
நமது வாழ்க்கை முறையும், சமுதாய அமைப்பும்
கால ஓட்டத்தில் மாறலாம். ஆனால், கர்த்தரும், அவர் தமது பிள்ளைகளோடு இடைபடும் முறைகளும் ஒருபோதும் மாறாது. பிள்ளைகளைக் குறித்துப் பெற்றோரே கர்த்தருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள்.
ஆகவே, ஏலியின் நிலைமை நமது குடும்பத்திற்கும்
வராதபடிக்கு இன்றே நமது பிள்ளைகளை தேவ வழியில்
நடத்த தீர்மானிப்போமாக…
நன்றி: சகோ.பால் பிரபாகர்

Sat Jun 14, 2014 9:37 am
--- பின்மாற்றம் ---
ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆண்டவரை விட்டு
பின்மாறிப்போவது ஏதோ ஒரே நாளில் ஒரு விநாடியில்
நடக்கும் காரியமல்ல...
நீண்ட நாட்களாக ஜெபத்திலும் வேதவாசிப்பிலும்
தியானத்திலும் குறைவுபடும்போதும்,
ஆண்டவருடைய ஐக்கியத்தை விட்டு தூரமாகப்போகும்
போதுதான் பின்மாற்றங்கள் நிகழ்கின்றன்...
#அனுதினமும் தேவனோடு நடப்போம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum